Archive

Archive for the ‘விவாதம்’ Category

சீதனம்: ஏன் தவறு?

November 19, 2010 1 comment

நிமலின் “சீதனம்: ஏன் தவறு இல்லை” பதிவு குறித்த எனது கருத்து:

நிமல்:

உங்கட இந்தப் பதிவு தொடர்பா ஒரு விசயத்த சொல்ல முடியும்.

சமபாலுறவாளர்கள் தாம் திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்காக நிறைய நாடுகளில் போராடுகிறார்கள் (கனடாவில் அமெரிக்காவில் சில இடங்களில் அந்த உரிமை உண்டு). இது குறித்து எழுதுகிற ஒரு முற்போக்காளர் (கிட்டத்தட்ட இப்படி) எழுதியிருந்தார் “திருமணங்களே அவசியமற்றவை என்கிற போது இந்த போராட்டமே அவசியமற்றது” [இது குறித்து முன்பொரு பதிவில் எழுதியிருந்தேன். அதற்கான லிங்க் பிறகு இணைக்கிறேன்].

நீங்களும் சீதனம் குறித்து “குடும்பமே சமூக அங்கீகாரத்துக்கானது.. இதில் சீதனம்” என எழுதியிருக்கிறீர்கள்.

மேலே குறிப்பிட்ட முற்போக்கான கூற்றோடும் உங்களது கூற்றோடும் எனக்கு உடன்பாடே. நான் இரண்டையுமே தனிப்பட்டரீதியாக விரும்பவில்லை.

ஆனால் சமூகம் என வருகிற போது, முற்போக்கான பல கருத்துக்களை அந்தந்த சந்தர்ப்பத்துக்கேற்ப பாக்க வேண்டிய தேவை உள்ளது.

திருமண உரிமையை வேண்டிப் போராடும், சமபாலுறவாளர்களைப் பொறுத்தவரை திருமணம் செய்யும் தேர்வு அவர்களது அடிப்படை உரிமை.
சீதனத்தை எதிர்க்கும் அதால் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது அவர்களது உரிமை.

குடும்பம், திருமணம், வாரிசு அரசியல் என சகலமும் இருக்கிற இந்த உலகத்தில், சீதனப் பிரச்சினையால் பாதிக்கப்பட போவது நானோ அதை (மற்றும் திருமணத்தையே நிராகரிக்கிற) ஒரு முற்போக்காளர் இல்லையே. அஃதால் பாதிக்கப்படுவது சாதாரணர்கள் தான்.

சமபாலுறவாளர்கள் பல தேசங்களில் திருமணமற்று பற்பல காலம் இணைந்திருந்து, அவர்களது துணையின் (சடுதியான எதிர்பாராத) மரணத்தின் பின் துணையின் சொத்தின்பங்குகளை அவர்களது வாழ்வில் எந்த பங்கையும் வழங்கியிராத உறவினர் கைகளில் இழப்பவர்களாகஉள்ளார்கள். நடுறோட்டில் விடப்பட்டவர்களும் உள்ளார்கள். இப்படியிருக்க, திருமணம் அவர்களுக்கு (சட்டம் திருமணத்தினூடக வழங்ககிற இன்னோரன்ன உரிமைகளைப் பெற) அவசியமா இல்லையா?

 

(இங்கும் தனிப்பட்ட நபராய் துணை என்றாலும் மற்றவரின் உழைப்பில் எனக்கேதும் உரிமை யிருப்பதாய் ‘நானும் நியும் ஒன்று’ ‘உனது உழைப்பும் என்னது’ என்கிற ரீதியான நம்பிக்கைகள் என்ககு இல்லை. ஆனால் சுரண்டலற்ற அன்பின் அடிப்படையில் பின்னப்பட்ட உறவில் -துணையின் இழப்பின் பின்- அந்த உறவில் இருந்த ஒருவருக்கு போய்ச் சேராத பணம்,  அவர்களை மதியாத உறவினர்களிடம் போய்ச் சேருவதில் என்ன நீதி இருக்க முடியும்?)

விரும்புகிறோமோ இல்லையோ, அங்கீகாரமோ இல்லையோ, இளமையை பாலுணர்வை திருமணத்தின் ஊடாக *மட்டுமே* அங்கீகரிக்கிற சமூக அமைப்பில்,அப்படியல்லாத இடங்களில் தமது பாலுணர்வை அனுபவிக்கவியலாத பெண்கள், வறியவர்கள் என்பதால் சீதனப் பிரச்சினையால் திருமணம் செய்யாதிருப்பது யதார்த்தம் அல்லவா? அது யதார்த்தமாய் இருக்க மட்டும், திருமணத்தை குடும்பத்தை போட்டு உடைக்க எந்த அமைப்பும்(?) அல்லது அதை ஆதரிக்கும் எந்த இயக்கமும் பெரிதாய் வளர்ந்திராத பட்சத்தில்,
நாம் சீதனத்தை எதிர்க்க வேண்டும் இல்லையா?

Advertisements

வெளிச்சக்கூடுகளை முன்வைத்து.. மேலும் – சனன்

March 19, 2007 1 comment

தொடர்பான சிறுகதை: வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்…
*
முதல்ல பெட்டைக்கு என் நன்றிகள். குறித்த கதை கவனப் படாமல், சாதியம் பற்றிய ஹரியின் குறிப்புகள் முரண்வெளி சார்ந்து அதிக கவனம் பெற்றது குறித்து எமக்கு சில ஏமாற்றங்கள் இருந்தன. இது பெரும் பலவீனங்களைக் கொண்ட சிறுகதையெனினும் ஆவணப்பதிவு என்ற அளவில் விவாதத்தை கோரி நிற்கிறது. அதை அடையாளம் கண்டு கொண்ட இரண்டாவது நபராக இருக்கிறீர்கள் (முதலாவது ஆள் கய – மற்றவர்கள் பதிவர்) இருவரும் பெண்களாக இருப்பது குறித்த வியப்பும் ஒருபுறம் போகட்டும். ஆண்கள் தமது குறிகளைப் பேணுகிற அரசியலில் மாத்திரம் அக்கறையுடனிருக்கிறார்கள், அதிகமும் பெண்கள் தான் இக்கதையின் மனித வலியைப் புரிந்து கொண்டார்கள். மதி கந்தசாமி, கய, பெட்டை எல்லாருக்கும் எமது நன்றிகள்.
*
உண்மையிலேயே இக்கதை இராணுவம் செய்கிற அட்டூழியத்தை, அது குழந்தமை மீது செலுத்துகிற தாக்கங்களை / உடல் அனுபவித்திருக்கக் கூடிய வலியை சரியான விதத்தில் வெளிப்படுத்துகிற ஒன்று எனக் கூற முடியாது. பின்னூட்டமிட்டிருந்தவரான ‘பெயர் சொல்ல விருப்பமில்லை’ போன்றவர்களது பதிவுகளும் மிக மேலோட்டமானவையே. 96இன் பின்னர் யாழ்ப்பாணத்தின் தெருக்களில் திரிய நேர்ந்த ஒவ்வொரு சிறுவனும்/சிறுமியும் இவ்வாறான கதைகளுடன் தானிருக்கிறார்கள். அதிலொன்றாக இதைக் கொள்ள முடியும். இதைவிட கொடுமையான அனுபவங்கள் என் சக மாணவர்களுக்கு உண்டென்பதை நான் அறிவேன். மனவிகாரம், குழப்பங்கள், இன்னபிறவற்றுக்கு ஆளாகும் குழந்தைகளைப் போல இக்கதையின் கதை சொல்லி இல்லை. ஒரு குழுவாக ஈடுபடுவதால், அப்பாதிப்பு குறைந்து போயிருக்கலாம். ஆனால், கைவிடப்பட்ட வீடுகளுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு குதப்புணர்ச்சி செய்யப் பட்ட சிறுவர்களும், தயாராகாத யோனி கிழிக்கப் பட்ட சிறுமிகளும் கொண்டிருக்கக் கூடிய பயங்கர அனுபவங்களுக்கு முன்பாக இக்கதை ஒரு சிறு பொறி மட்டுமே.
இக்கதை கொண்டிருக்கக் கூடிய வலிமையான அம்சங்களில் ஒன்றாகவும் இதைக் கொள்ள முடியும் தான்.. தனக்கு நடக்கும் பாதிப்புகள் பற்றிய அறிதலின்றி அதில் ஈடுபடுதல் என்பதாக வாசித்துப் பார்க்கலாமா? தான் எதை இழந்து கொண்டிருக்கிறான் என்பது பற்றிய அறிதலின்றியே / தான் அனுபவிக்கப் போகிறவை எவை என்பது பற்றிய புரிதலின்றியே அக்குழந்தை இதெல்லாவற்றுக்கும் பலியாகிறது என்று கொள்ளலாமா?
இன்னொரு முக்கியமான விடயத்தை அபிப்பிராயம் தெரிவித்த தோழர்கள் காணத்தவறியிருக்கிறார்கள். கதை சொல்லி இராணுவத்தின் மீதான பரிவுப்பார்வை கொண்டவனாக இருக்கிறான். குறித்த சிப்பாயின் பல செயல்கள் ஒருவித அனுதாபத்துடன் சித்தரிக்கப் பட்டிருப்பதை காணலாம். அமௌனன் இட்டிருந்த பின்னூட்டம் சரியாகவே சொல்கிறது. மூல காரணங்கள் எவை? உண்மையில் எங்களது உடம்பின் துவாரங்களை ஆக்கிரமிக்கிற குறி பயந்து நடுங்குகிற சிப்பாய்களினுடையதா? இல்லை, மகிந்தவினதும் இதர பேரினவாத சக்திகளினதுமா? சிப்பாயின் ஆண்குறியை தனியே சிப்பாயின் ஆண்குறியாய் காணவியலாது.. அது மகிந்தவின், மல்வத்த பீடாதிபதிகளின் ஆண்குறி.
*
கதைசொல்லி சிப்பாயுடனான புணர்ச்சியின் சில அம்சங்களை விரும்புவனாகத் தான் காட்டப் படுகிறான். இன்னுமொரு சிறுவன் அவர்களது அணைப்புக்கு ஏங்குபவனாக இருக்கிறான்,
//பிறகு அப்பிடியில்லை. எனக்கும் உம்மை மாதிரி ஒரு மல்லி இருக்கு எண்டு சொல்லி கொஞ்சுவார் – அப்பா மீசை குத்தக் குத்தக் கொஞ்சுவாரே அப்பிடி நல்லா இருக்கும். சரியாக் கூசும். சிங்களம் சொல்லித் தருவார். என்னட்டத் தான் அவர் தமிழ் படிக்கிறவர். கன்ரீன் ரொபியள் எல்லாம் எனக்குத் தான்.’//
//பிறகு சின்னப்பிள்ளயள் தமிழ்கதைக்கிற ஸ்ரைல்ல கதை சொல்லுவார். மடியில ஏத்திவச்சு முள்ளுத் தாடியால உரஞ்சி உரஞ்சி சிரிப்பார். பிறகு பேசாமல் இருப்பார். ஒருக்கா கட்டிப் பிடிச்சு அழுதவர். அவர் சொல்லித்தந்த பாட்டுப் போல எங்கட மிஸ்ஸும் ஒரு பாட்டுச் சொல்லித்தந்தவா – குருவிக் குஞ்சே குருவிக் குஞ்சே எங்கே போகிறாய்…. நான் சிங்களப் பாட்டை தமிழில கொப்பின்ர பின்பக்கம் எழுதி வச்சிருந்தன்,//
இதை வியாக்கியானப்படுத்த நாங்கள் சிக்மன்ட் பிராய்டிடம் போக வேண்டாம். Neglected emotinal needs என்ற ஒரு பிரயோகம் போதும் என்று நினைக்கிறேன். மத்தியவர்க்க பெற்றோர் பெரிதும் தங்கள் குழந்தைகள் மீது எப்படி அன்பு செலுத்துவது என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். இரகசியமான முறையில் மாறிப்போயிருக்கிற வாழ்சூழல் பற்றிய அறிதல்களற்ற அவர்கள் 96இன் பின்னான பிள்ளையொன்றுக்கு இருக்கக் கூடிய சிக்கல்களை புரிந்தவர்களாக இல்லை. தமது அந்தஸ்து பணம் என்பவற்றில் குறியாக இருக்கும் அவர்கள் ரியூஷன், பாடசாலை, ஸ்பெஷல் கிளாஸ் என்று பிள்ளைகளை அலைக்கழிக்கிறதோடல்லாமல் தாங்களு அலைகின்றனர். ஒரு புன்னகைக்குத் தன்னும் நேரமிருப்பதில்லை. இங்கு தான் paedophile நபர்கள் தமது நுழைவுக்கான சாத்தியப் பாடுகளைக் கண்டு கொள்கிறார்கள். அவர்களிடம் சாடிஸம் இல்லாத பட்சத்தில் குழந்தைகள் அப்புணர்ச்சியை விரும்பவும் செய்கின்றன. எங்கு பிழை விடுகிறோம் என்பது நல்லது. (இந்த இடத்தில் ஷ்யாமின் ஸ்விம்மிங் இன் த மொன்சூன் சீ, ப்ͫன்னி போய் போன்ற நாவல்களில் வரும் சில சம்பவங்களை உதாரணம் காட்டமுடியும். நான் நினைக்கிறேன் – ரொமேஷ் குணசேகரவின் ரீப்(f) இல் வரும் கதைசொல்லி கூட(வயது 11) சக உடலின் அருகாமை குறித்த வேட்கையுடனிருந்தான் என. கதைசொல்லியின் சகவேலைக்காரன் அவனைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முனைகையில் அது குறித்து அச்சமடைபவனாக இருக்கும் அச்சிறுவன், தன் எஜமானன் மீது ஒருவித நெருக்கம் உடையவனாக இருக்கிறான். எஜமானனுக்கு தேநீர் எடுத்துச் செல்லும் அச்சிறுவன் அவனது நெகிழ்வுற்ற ஆடைகளையும் சிறுபிள்ளைத் தனமான தனது எஜமானனின் உடல்வாகினையும் ஒரு வித லயிப்புடன் விபரிக்கிறான். ஷ்யாம்-ரொமேஷ் இரண்டு பேரது கதாநாயகர்களும் புறக்கணிக்கப் பட்டவர்களாக, உணர்வுத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாதவர்களாக இருக்கிறார்கள். சக உடலொன்றின் அணைப்புக்கான தேவை எங்கிருந்து எழுகிறது என்பதை அறியவிரும்புபவர்கள் சிக்மண்ட் பிராய்டை/இன்செக்யூரிட்டிகள் பற்றி கற்கவும். அல்லாது விடில் ஷ்யாம், ரொமேஷ் போன்றவர்களின் புனைவுகளை வாசிக்கவும்)(fஅன்னி போய் இல் வருகிற அர்ஜியின் உளவியல் ரீதியான தேவைகளை, தகப்பன் செலவரத்தினமோ தாய் நளினியோ கண்டு கொள்வது இல்லை. தாய் நளினி பொருத்தமற்ற விதத்தில் அவனுடைய எffஎமினட் டென்டென்சிகளை களைய முறபடுகிறாள். அர்Jஇயின் ஆண் சகோதரர்கள் அவனைப் புரிந்து கொள்கிற நிலையில் இல்லை. இது தான் ஷேகனை நோக்கி அவனை உந்துகிறது – இல்லையா. பாலுறவின் தேவை அல்ல அங்கே அர்ஜியை இழுப்பது, ஒரு சிறு புன்னகைக்கான, தலைதடவலுக்கான ஆதரவுக்கான ஏக்கம் தான்.இதையும் அமௌனின் சிறுவர்களையும் இணைவாசிப்புச் செய்து பார்க்கலாம். ‘வெளிச்சக்கூடுகள்’ சிறுவர்களின் குடும்பம் குறித்து தரப்பட்டுள்ள விபரங்களை கவனியுங்கள்.)
இக்கதையை முன்வைத்து விமர்சிக்க வேண்டிய இன்னுமொன்று யாழ்ப்பாண பள்ளிகளின் நாவலர் ஆசாரம். பிள்ளைகள் பாலியல் கல்வி பெறாதவர்களாய் இருப்பதால் இந்த நிலமைகள் மேலும் விகாரமடைகின்றன எனபது என் கருத்து. நான் தரம் ஒன்பதில் கல்வி கற்ற போதுதான் முதல் முதலாக சுகாதாரப் பாடப் புத்தகத்தில் பாலியல் கல்வி என்பது பேரளவுக்காவது தூவப்பட்டிருந்தது. புத்தக வினியோகத்தின் போது குறித்த பக்கங்கள் கிழிக்கப் பட்டிருந்தன. பல பாடசாலைகள் அப்பாடத்தை தொடவும் இல்லை. சுயஇன்பம் குறித்து அச்சமுற்று அன்ரி டிப்ப்ரெஷன் எடுக்கிற கனபேரை நானறிவேன். இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் இப்படி சிறுவர்களை விழிப்புணர்வற்ற நிலையில் வைத்திருப்பது? தனக்கு நடப்பது ஒரு துஷ்பிரயோகம் என்பதை அப்பிள்ளை அறிந்திருக்குமாயின் இவை போல சம்பவங்களுக்கான சாத்தியங்கள் குறைவு அல்லவா? யார் பிழை விடுகிறார்கள்? சிங்களவனா? இல்லை தங்கள் கோமணம் கிழியவேயில்லை என்று கதை விடுகிற யாழ்ப்பாணத்தவர்களா?
பின்னூட்டமிட்டவர்கள் சிப்பாய்களுக்கு இருக்கக் கூடிய சிக்கல்களையும் புரிந்து கொள்வது தகும். அவர்கள் செய்வதை நான் ஆதரிக்கிறேன் என இது அர்த்தமாகாது, கோபத்தை கொஞ்சமாவது அடக்கிக் கொண்டு இப்படியான செயல்பாடுகளுக்கு எங்கனம் அவர்கள் தூண்டப்படுகிறார்கள்? எவையெவையெல்லாம் இது நோக்கி அவர்களைத் தள்ளுகின்றன. இவற்றைப் பரிசீலிப்பதன் மூலம் அதிகாரத்தின் மிகப்பெரும் ஆண்குறியை நீங்கள் காண முடியும்.
*
கதையில் என்னை மிக எரிச்சலூட்டிய அம்சம் அக்கதைசொல்லி/அமௌனன் பண்ணிக்கொள்கிற புனிதப்படுத்துகை தான். கதைசொல்லி மிக அப்பாவியானவனாகவும், மற்ற சிறுவனால் seduceபண்ணுப்படுபவ்னாகவும் காட்டப் படுகிறான். மற்றைய சிறுவன் seducerஆக காட்டப்படுகிறான். இது ஒருவிதமாக இடறுகிறது-நம்பகத் தன்மை இல்லை. தன்னை நல்ல பிள்ளையாகக் காட்டிக் கொள்ளும் முனைப்பு கதைசொல்லியிடம் இருப்பதை, அந்த முனைப்பு மற்ற சிறுவனின் வாயில் தூஷணங்களைத் திணிப்பதை (அதன் மூலம் தன்னை உயர்த்துவதை) தெளிவாக இனங்காணமுடிகிறது. கதையின் ஒரே ஒரு இடத்தில் மாத்திரம் தான் புனிதப்படுத்துதல் அற்ற இயல்புத்தனம் தலை காட்டுகிறது: //எனக்குப் பெரிய புதினமாய்க் கிடந்துது. ஆனா அருக்குளிக்கிற மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு “ச்சீ! மூத்திரம்” எண்டு சொன்னன்.// பின்வரும் மொழிதலைக் கவனியுங்கள்: //உண்மையாவே அரியண்டமா இருந்துது// இதில் ‘உண்மையாகவே’ என்ற பதப்பிரயோகம் ஏன் இடம்பெறுகிறது? ‘அரியண்டமா இருந்தது’ என்ற மொழிதல் ஏன் போதுமானதாக இல்லை…? அமௌனனை மீறி வெளிப்பட்டிருக்கிற(தாய் நான் நினைக்கிற) இந்த மொழிதல் கதையின் ஒட்டுமொத்த புனிதப் படுத்தலுக்கு ஒரு பொட்டுக்கேடு தான். ‘உண்மையாவே’ என்று வாசிப்பாளரை நம்ப வைக்க முயற்சிக்கும் போது அதொன்றும் அப்படியாகவில்லை என சந்தேகம் வருகிறது!
நிரூபாவின் கதைகள் எங்கனம் தமது கதாநாயக/நாயகிகளுக்காக வில்லன்களை கதைப் பரப்புக்குள் உருவாக்கிக் கொண்டு இயக்கமுற்றனவோ அதே மாதிரியான துவிதஎதிர்மைச் சமன்பாடெனக் கொள்ளலாம். இதனால் தான் இந்தக் கதைக்குள் தீபனின் குரலைக் கேட்க முடியாமலிருக்கிறது. வழக்கமான போராதரவுப் பிரதிகளைப் போலன்றி சிப்பாயின் குரலையாவது (அவனது உடலசைவுகள் மூலம்) ஒலிக்க அனுமதித்ததற்கு அமௌனனுக்கு பாராட்டுகள். மற்றபடிக்கு இக்கதை(?!) பெருங்குறைகளை/நுண்ணரசியலை/விடுபடல்களை உடையது தான்.
*

சனன், முரண்வெளி

பயம்

October 12, 2005 21 comments

(ரோசாவசந்தின் பதவிற்கெழுதிய பின்னூட்டம், நீளங் கருதி இங்கே உள்ளிடுகிறென்).

ம்மிடையே மார்க்சியர்கள்/இடது/முற்போக்காளர்கள் என தம்மைக் குறிப்பிட்டுக்கொள்பவர்கள் பலரும் தாங்கள் அப்படி ஒரு பட்டத்தைத் தமக்கு தந்திருப்பதாலேயே பெண்களது பிரச்சினை குறித்து, பிற தம்மால் ‘அனுபவித்தறிய’ இயலாத மனிதர்களின் பிரச்சினைகுறித்து ‘புரிந்துகொண்டேன் பேர்வழிகள்’ என (ஒரு –ஐயும் புரியாமல்) இருப்பதைக் காணலாம். இது புதிய ஒன்று அல்ல.
இங்கே குஷ்பு சார்ந்த, பதிவுகள் படித்தபோது, “நாங்கள் இன்னஇன்ன இயர்களாக (மார்ச்சியர், பெரியாரிய, வட் எவர்!) இருப்பதால், படுபிற்போக்குத்தனமாக கருத்துக்களை காவுபவர்களாக இருக்கமாட்டோம்” எனகிற அசாத்திய நம்பிக்கையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இங்கே, ஒரு கட்சியாய் குறிப்பிட்ட கொள்கைகளின் கீழ் இணைந்திருக்கிறபோது, தனிநபர்களின் ‘உயரிய’ சிந்தனைகள் அடிபட்டுபோய்விடும்; ஆனா இங்க வந்து வலைப்பதியிற கட்சி சாராத அக் கொள்கைகள்சார் தனிநபர்கள், தான் இன்னஇயன் என என்ன யம்பிங் விட்டாலும், அது முடிய, என்ன சொல்கிறார்கள் என்பதே பொருட்டு என்பதை அடிக்கடி நினைவுபடுத்தவேண்டி இருக்கிறது.

திண்ணையில் படைக்கப்படுகிற சின்னக்கருப்பன் போன்றவர்களது பிற்போக்குத்தனங்களைவிட —அறிவியல்,நவீன இலக்கியம் என பரிச்சயமுடைய நபர்களின் மரபான பயத்தை (அதைத் தவிர வேறொன்றுமில்லை) த்தான் மிக ஆச்சரியமாகப் பார்க்க முடிகிறது.

குஷ்புவினது பேட்டியைப் பார்த்து ‘இளம் யுவதிகள்’ (இளைஞர்கள அல்ல!) , ‘கெட்டு’ப்போய்விடுவார்கள் என்றும், குஸ்பு (திருமணத்திற்கு முன்பு வைத்திருக்கிறபோது) உரிய தற்காப்புகளுடன் உறவு வைத்துக்கொள்ள சொன்னதற்கு, ‘செய்த (செக்ஸ்) தவறிற்கான பின்விளைவை’ அனுபவிக்கத்தானே வேணும் என்கிறரீதியில் சொன்னது தனியே டோண்டு ராகவன் போன்றவர்கள் அல்ல. In fact, டோண்டு ராகவன் – அவர் நிச்சயம் அப்படிச் சொல்ல மாட்டார்! வேதங்களில் உள்ள பெண்ணடிமைத்தனத்தைப் பேச மாட்டாரே தவிர பெண்கள் குறித்து அவர் வைத்திருக்கிற கருத்துக்கள் இங்கே/எங்கேயும் எழுதுகிற பல ‘சிவப்புக்கட்சி/பெரியார்’ சார்பு அறிவியலாளர்களை விட உயர்ந்ததே. அதை ‘அவர்’ சொல்வதால் ‘சந்தேகத்துடனும்’ ‘நேர்மையற்ற’தாகவும் ‘சந்தர்ப்பவசமான’தாகவும் பார்க்க விழைகிற பலருக்கு தமது பின்னோக்கிய, மரபார்ந்த பயத்தை, ஒத்துக்கொள்ளும் நேர்மை கிடையாது.
பிற்போக்கான மற்றவர்களைப் பார்த்து ‘சிரிப்பு வருகிறது’ என்று அத்தகையவர்களது நகைச்சுவையுணர்வில் புளகாங்கிதமும் தவறாது அடைந்து போகிறவர்கள், தம்மை மறுபரிசீலனை செய்யத் தயராய் இருக்க வேண்டும். அது இல்லாதவர்கள் பலராகத்தான் அறிவுத்துறை ஆண்கள் எங்கயும் இருக்கிறார்கள்.
குஷ்பு வின் ‘அதீதமான’ கோபத்தையும் ‘அதிகமாகக் கூவியதை’யும் இந்த ‘அரசியல்’இற்கான காரணத்தைக்கூறி ”பெண்களே நீங்கள் இதை உங்களுக்கெதிரானதாக நினைக்கக்கூடாது” என்பவர்கள், பயத்துடன் பதிவுகளிற்கு மேல பதிவும் -குஷ்பு சொன்னதைப் படிக்க முன்னரேயே- , பத்திரிகைகளில் பரப்புரையும் செய்பவர்கள் அவர்களை ஒத்த ஆட்களே. எதற்காக பெண்கள் இதை ஒரு அரசியலென புரிந்துகொள்ளவேண்டும். தம்மை அவமதிக்கிற, உள்ளடக்காத ஒரு சாமானை அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்?

இந்தியா டுடெயில், குஷ்பு சொன்னதில் எதில் எதில் முரண்படுகிறார்கள் எல்லாரும்? குஷ்பு சொன்ன என்ன விடயம் “பிரச்சினைக்குரியது” “முரண்பாடானது” என்பதை வெளிநாட்டிலிருக்கிற முற்போக்காளர்கள் -குஷ்புவின் அந்த ஒரு பக்கக் கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டி- விளக்கிக் கூறலாம். அந்த ஒருபக்க விளம்பலில் இருந்து எடுத்துப் போடுவது சிரமமான காரியங் கிடையாது. அதை செய்தால் உங்களது பயங்களின் நிலவரம் எந்த மட்டில இருக்கிறதென்பது தெரிய வரலாம்.

குஷ்பு சொன்னதைப் படிக்காமலே ஒவ்வருவரும் எழுதிய கருத்துக்கள் + குஷ்புவினது அந்த சிறு கட்டுரையில், பாலியல் சுதந்திரம் போன்றன எங்கே பேசப்பட்டன என்பதையும் யோசிக்கிறேன்.
“இந்தியா டுடெயில் இப்படிச் சொல்லுகிறவர் தன்னை விபச்சாரி என்றதற்கு முதல் ஏன் கூவினார்” என்றும் சிலர் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். ‘விழுந்தடித்துக்கொண்டு’ பதிவதில் என்ன சொல்கிறார்கள் என்று அவர்களுக்கு புரிகிறதா என்ன?!

குஸ்பு என்ன பெண்ணிலைவாதியா, அவர் ஏதும் செய்திருக்கிறாரா, என்கிறரீதியில் கேடகிறாகள்.

செக்ஸ் பற்றிக் கருத்து சொல்ல குஸ்பு ஏன் பெண்ணிலைவாதியாய் இருக்கவேண்டும்? அவர் குங்குமம், தாலி, மெட்டி போட்டிருந்தா என்ன? – தெரியவில்லை.

//படித்தவர்கள் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் ‘கன்னித்தன்மை’ பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்//

கட்டுரையிலிருந்து இந்த வரி (கட்டுரையிலில்லாத பல வரிகளைப்போலவே)நிறைய அர்த்தங்களைப் பலருக்கும் தந்துவிட்டது, நியோ என்பவர் எழுதிறார்:

1. * படித்தவர்கள் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் ‘கன்னித்தன்மை’ பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்
HUHHHHH!!!!!! இந்த வாசகத்திலே இருக்கிற sweeping nature எத்தனை விசயங்களை பிறழ முன்மொழிகிறது என்று சொல்லத் தேவையில்லை!
2. * இப்பொதெல்லாம் pre-marital sex கொள்லாத பெண்கள் இருக்கிறார்களா என்ன?
jeez! What the *%%&%^

யார் இவருக்கு இந்த அதிகாரமளித்தது – சமூகம் பற்றிய தன் கருத்தை இத்தனை பொறுப்பில்லாமல் சொல்வதற்கு?
இதுதான் என்னுடைய எதிர்வினை! அதாவது இந்த வார்த்தைகளை குஷ்பூ இதே விதமாகச் சொல்லியிருக்கும் பட்சத்தில்.

————————————————————————–
இதில பொறுப்பில்லாத தனம் என்ன இருக்கு? குஸ்பு எதே விதமாய் சொன்னார் என்பதே படிக்காமல், அப்படிக் கேள்விப்பட்ட உடனேயே ஒரு ஆண் பதறிப்போய் (அந்தத் தனது பதறலை ஒத்துக்கொள்ளாமல், அதை ‘சமூகம்’ பற்றிய கூற்றாக திரித்து), தன் பெண்களைப் பற்றி பயம் கொள்கிற ஒரு சமூகம் இல்லாதுபோனால் அத்தகைய வாசகங்களில் இருக்கிற sweeping nature இற்கு என்ன ஆகும்?
“திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்ளாத பெண்கள் இருக்கிறார்களா என்ன” என்கிற கேள்வி குறித்த மேற்குறிப்பிட்ட எதிர்வினை, கற்பு என்கிற கருத்துருவாக்கத்தை இழக்க விரும்பாத ஒரு சமூக ஆண் தனிநபர(ர்கள)து குரலன்றி வேறென்ன? இங்கே இந்த விசயத்திற்கு துள்ள வேண்டிய அவசியம் என்ன? பெண்கள் pre-marital sex கொள்லாதவர்கள், இருக்கலாம், இல்லாமலிருக்கலாம், குஸ்பு, அதை இப்படிச் சொன்னால், அதனால் என்ன அழிந்துவிடும்?
உண்மையில் இவர் தனது கவலை சமூகத்தைப் பற்றி குஸ்பு சொல்கிற கருத்தென நம்புகிறார்.

தொடர்ந்தும் சப்பைக்கட்டுக்கட்டிக்கொண்டிருக்க இவர்களுக்கு, -பயம் போன்றே-ஆண் என்கிற தனது இன/சாதி என்கிற அரசியற் காரணங்கள் இருக்கலாம். இங்கே குஷ்புவை அழ அழ மன்னிப்புக்கேட்கச் செய்த ஆதிக்க செயலை தங்கர்பச்சன் மன்னிப்புக் கேட்டதுபோல ஒன்று என நினைப்வர்கள் அதைத்தான் தெரிவிக்கிறார்கள்.. (இதில் ‘குஸ்பு மன்னிப்புக்கேட்டது தப்பு’; தன்ர கருத்தில ஸ்றோங்கா நின்றிருக்கணும் எனவெழுதுகிறவர்களையும் குறிப்பிடவேண்டும்.).

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எல்லாம் நவீன ‘அறிவூட்டப்பட்ட’ மூளையையுடையவர்களது பிற்போக்கு வாதங்களை சகித்துக்கொள்ளும்தன்மையை வளர்த்துகொள்ள முயலவேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் பெண்களை தாம் இழிவாக்கி வைத்திருக்கிற சொல்லாடல்களால், தமது இழிவெண்ணங்களைக் கொட்டித் திட்டுபவர்களிடம் எல்லாம் ‘அரசியல் ரீதியாக’ மிகச் சரியாகவும், பொறுப்புடனும் பேசும் தன்மையை வளர்த்துக்கொள்ள இயலாது. (இது குறித்து குழலி ஒரு பதிவு போடலாம்; முற்போக்கான பெண்கள் எவ்வளவு கூவலாம், சாதாரண பெண்கள், ‘குடும்ப’ பெண்கள், நடிகைகள், இதர தொழில் வர்க்கப்பெண்கள் எவ்வளவு இத்தியாதி என ) …

கற்பு பற்றி ‘வெளிப்படையாய்’ பயப்படுகிற பிற்போக்குவாதிகளையும்
மறைமுகமாய் அதை வைத்திருக்க விரும்பிற முற்போக்குஇயங்களைக் காவுகிற பிற்போக்குவாதிகளுமான ஆண்கள்,
அவர்களது அரசியல் தலைவர்கள், கொண்ட ஒரு சமூகத்தில் “காலாவதியாகும் கற்பு” என்றொரு தலைப்பில்,
அவங்ககளைப் போன்ற ஒரு ஆளை,
அவங்களுடைய அரசியல் கட்சியை/ அவங்களுடைய சாதியைச் சேர்ந்த ஆணை
நாலுபேருக்கு முன்னால மன்னிப்புக் கேட்கச் செய்தவள், “விபச்சாரி” என்று உன்ர அம்மாட்ட போய் சொல்லு என்றவள், பெண், அதுவும் (இயக்குநர்கள் டிஸ்கஸன் என்ற பெயரில் நடப்பது உலகிற்கே தெரியும் என்கிற ‘புரிதலுக்குரிய’)
ஒரு ‘நடிகை’ எழுதினது பெரும் பிரச்சினையே.. (என்ன எழுதினார் என்பதை முழுமையாப் படிக்காவிட்டாலுங் கூட!!!!!!)

வெங்கட் இற்கான பதிலும்…

March 18, 2005 6 comments
..மேலும் சிலவும்

வெங்கட்!
நான் ”மிகவும் முற்போக்கான பார்ப்பனர்களே இந்த ‘திட்டுதலில்’ sensitive ஆய் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது…” என எழுதியது, திட்டமிட்டு, வெங்கட் மீது ‘வன்மங்’ கொண்டு, எங்கடா அதைப் போட்டு உடைக்கலாம் எனக் காத்திருந்து, ரோசாவசந்த் கா.பிலிம்ஸ் இற்கு எதிர்வினையாற்ற, அப்பாடா என்று வந்த வாய்ப்பைக் கெட்டியாய்ப் பிடித்து அல்ல, இதை முதலே ‘தெளிவாக’ சொல்லிவிடுகிறேன்.
நான் நனவற்று இயல்பாகத்தான் அதை எழுதினேன், எனக்கு குறிப்பிட்டளவு அந்த வகைப்பிரிப்புக்குள் அடங்குகிற நபர்களைத் தெரியுமென்கிறபடியால். . . உங்களை என்று குறிப்பிட்டு நினைத்து எழுதவில்லை. இதை ‘திட்டமிட்டு’ செய்திருந்தால் நிச்சயம் எனது பதிவிலோ உங்களது பதிவிலோ மறுமொழி இட்டிருப்பேன். அது ரோ.வசந்தின் பதிவில் அவரது பதிவைப் படித்தபிற்பாடு உணர்ந்ததை எழுதியது மட்டுமே, no strings attached to it, at all.
அதற்காக நீங்கள் ‘தவறாக’ எண்ணி எனக்கு பதிலளித்ததாயும் நினைக்க வேண்டியதில்லை. அத்துடன் எதன் பொருட்டும் “நீங்கள் சொல்லுகிற கருத்து முட்டாள்த்தனமானது” என்று நான் நினைக்கவில்லை.குறிப்பாக நாரயணன் பதிவு பார்த்து பின் உங்களிற்கு பதிலாய் நான் எழுதவில்லை.
இவற்றை கூறிவிட்டு உங்களது கருத்துகள் தொடர்பான எனது கருத்துகளை எழுதுவது உசிதமென நினைக்கிறேன்.

“பாப்பார நாயே என்று திட்டப்படும்பொழுது “நறுமணமும், அழகும் பொருந்திய மலர்களைக் கரங்களால் எடுத்துப் பூசிப்பவனே” என்பதாகச் சொல்வதன் அபத்தம் புலப்படுகிறதா? உண்மையில் அதற்குப் “பூசை செய்பவனே” என்றுதான் அர்த்தமா? இந்த அணுகுமுறை வியப்பளிக்கிறது. “
-வெங்கட்

இந்தியாவில் பிராமணர்களை பார்ப்பான் என்பது தவிர வேறெப்படி வசைபாடப்படுவார்கள் என்பது எனக்குத் தெரியாது (தெரியாமல் ஏன் எழுதினாய் என்கிற ஒரு கருத்தை வாசிக்கிறவர்கள் யாரும் தயவுசெய்து பின்னூட்டமிட மெனக்கெடாதீர்கள்). அதனால்தான், அந்த இடத்தில் பூஜை செய்பவன் என வைவது அவமானமா அல்லது மலம் அள்ளுபவன் என வைவது அவமானமா என எழுதினேன், தவிர அதற்கு வேறொரு ‘கற்பனையும்’ என்னிடம் இல்லை. இரண்டும் இரண்டு சமூகத்தினரது ‘தொழில்’கள். பிறப்பினால் ஒருவன்(ள்) கீழிறைக்கப்படக்கூடாது ‘உங்கள் பிறப்பிற்காக நீங்கள் வருந்தவேண்டும்” என்கிற கருத்துக்கள் இல்லாத நான், மலம் அள்ளுபவர்களாக ‘பிறப்பினால்’ ஒரு சமூகம் கீழிறைக்கப்படுகிறது என்பதை -அந்த வித்தியாசத்தை சொல்ல மட்டுமே- அதை எழுதினேன். நீங்கள் பூஜை செய்பவன் எனுகிற வசைக்கான விளக்கத்தைக் கூறி வசையென்றமட்டில் அதுவும் இதுவும் ஒன்றுதானே எனக் கேட்டிருக்கிறீர்கள். (பின்னூட்டத்தில் ரெண்டு வலிக்குமான மாறுபாடு தெரியும் என எழுதியுள்ளீர்கள்).
வசைகள் மனதை துன்புறுத்தவும் ஒருவரை உதாசீனம் செய்யவும் எய்யப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் எல்லா வசையும் ஒன்றல்ல. எத்தனையோ வேறுபாடுகளை வைத்துக்கொண்டு ‘நானும் நீயும் ஒன்று’ என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது, ‘சமமாக’ ஆகியபிறகு சொல்லவேண்டிய வசனம் அது.
ரோ.வசந்தின் பதிவில், அவரது பதிவிற்கான இத்தகைய எனது கருத்துக்களைத்தான் எழுதியிருந்தேன்.
குறிப்பிட்ட சில விடயங்களில் சென்சிற்றிவ் ஆய் இருப்பதற்கான -உங்களுடையவோ யாருடையவோ- உரிமையையும் நான் மறுக்கவில்லை.

“கொலை பயத்தை ஈழத்திலிருந்து வருபவர்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை. ஒரு கோடை நாளில் வெளியில் கட்டிலில் படுத்திருந்தவரின் பூணுல் அறுக்கப்பட்டது. அடுத்த வாரம் திண்ணையில் தூங்கியவரின் வலதுகரம் வெட்டப்பட்டது.
…கொலை நடந்தது! என் அடுத்த வீட்டில் வசித்த, எறும்புக்கும் தீங்கு நினைக்காத ஒரு சரித்திரப் பேராசிரியர் மதிய வேளையில் மிதிவண்டியிலிருந்து கீழே தள்ளப்பட்டு நெஞ்சில் குத்தப்பட்டு இரண்டு நாட்கள் அவதிக்குப் பிறகு மரித்துப் போனார். அந்தக் குடும்பம் சிதைவதை என் கண்ணால் கண்டிருக்கிறேன்.ஒரு அப்பாவியின் நெஞ்சில் கத்தியைச் செருகுமளவிற்கு வன்மம் இருந்தால் அது உருவாகக் காரணமாக என்ன தவறிழைக்கப்பட்டது என்று எனக்குப் புரியவேண்டுமென்பது அவர் எண்ணம். “…

புரிந்தது. கோபங்கொள்ள அவர்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை விளங்கியது. விளைவு – என் முன்னோர்கள் தவறுகளைச் செய்திருக்கச் சாத்தியமிருப்பதாக நான் முழுமனதாக நம்புவது. அந்த எண்ணம் எனக்குள் விளைவிக்கும் அருவருப்பும் அவமானமும். அதற்காக நான் செய்யக்கூடியது மனதார பாதிக்கப்பட்ட என் சகோதரனிடம் நான் மன்னிப்பு விழைவது. அதிலும் முக்கியமாக அவனுக்கு ஆகவேண்டியதைப் பற்றிச் சிந்தித்துச் செயல்படுத்துவது.

ஆமாம், இது ஒரு பெரிய சுழற்சி. இதற்கு ஒரே தீர்வு. இதைவிட்டு வெளியே வருவதான் என்று மனதார நம்புகிறேன். இதில் என்னாலானது கீழே இருப்பவனுக்குக் கைகொடுக்கும் அதே நேரம், மேலே இருப்பவனைக் கீழே தள்ள முயற்சிக்காமல் இருப்பது. எனவே எந்தவிதமான வன்முறையும், கொடுஞ்சொற்களும் எனக்கு ஒப்பானவை அல்ல. எனவேதான், அறிவாளிகளாக நான் நம்பும் ஒருசிலர் பாப்பார நாயே என்று சொன்னாலும், பற நாயே என்று சொன்னாலும் எனக்கு வருத்தமளிக்கிறது. அதேபோலவேதான் செருப்பாலடித்தலும், ஆண்குறி அறுக்க விடுக்கப்படும் அழைப்புகளும். அதையும் விடக் கொடுமையானது இதில் ஈடுபடாதவர்களை எல்லாம் If you are not with us, you are against us என்று புஷ்தனமாகப் பயமுறுத்துவது. ”
-வெங்கட்

எனக்கு இந்தக் கருத்தில் உடன்பாடில்லை. காரணம் நீங்கள் பேசப்பட்ட -நீங்கள் முரண்படுகிற – எல்லாவற்றையும் ஒரே இடத்தில் இணைக்கிறீர்கள். ஆண்குறி அறுத்தல் பற்றிய பதிவில் பேசுகிற விடயத்திற்கும் சாதி குறித்த வசையாடல்கள் பற்றிய இவ் விவாதத்திற்கும் தொடர்பில்லை. எனக்கு வெங்கட், ரோசாவசந்த், மதி என ஒவ்வொருவருடைய வெளிப்பாட்டு பாணியும் மொழியும் வெவ்வேறாக இருப்பதில் பிரச்சினை இல்லை என்பதால் அந்த பதிவில் முரண்பட எனக்கொன்றுமில்லை.
அத்துடன் மற்றவர்களிடம் மட்டும்தான் புஷ் தனம் உள்ளதா? அப்படியொரு விவாதத்திற்கு நாங்கள் போனால் உங்களது பகுதியில் இருக்கிற (நீங்கள் அறியாத?) புஷ்தனங்களை மற்றபகுதி பேச வேண்டும். எழுத இருக்காதென்றா நினைக்கிறீர்கள், என்னிடமே நிறைய இருக்கிறது. வன்மமற்று, குழு மனப்பாங்கற்று, நிதானமாக, ‘கெட்ட’வார்த்தை அற்று எழுதவும் முடியும்.
பொதுவாகச் சொல்கிறேன் (உங்களுக்கு அல்ல): அப்போதுமட்டும் கருத்துக்களை இலகுவாக, வளர்ந்த, புத்தியுள்ள, ஒருவர் மாற்றிக்கொள்ளமுடியுமா? எனக்குத் தெரியவில்லை.
ஒரு பிரச்சினை தொடர்பாக தம்மிடம் ஒரு முடிவை வைத்துக்கொண்டுஎப்போதும் மாறப்போகாத வாதத்தில் இறங்கும் ஒருவரை ‘மாற்றுவதில்’ எனக்கு திறமையில்லை.

‘வெளியே வருவது’ என்பதற்கு அவரவர்க்கு வழிமுறைகள் தெரிந்திருக்கும். விவாதங்களும் தொடர் கருத்துப்பரிமாறல்களுமே எனக்கு புரிதலுக்கான முறைகளாய் இருக்கின்றன. இதனால் இதுவரை இத்தகைய விவாதங்கள் ஊடாக ”என்னுடன் இரு அல்லது எதிரியாக இரு” என்கிற ஒரு தொனியை உணரவோ, 400 பேர் எழுதும் வலைப்பதிவு சமூகத்தின் ஒற்றுமைக்குலைவு பற்றியோ எனக்கொரு முன்அனுமானமும் தோன்றவில்லை.
———————————-
மற்றப்படி இங்கு யாரும் தலித்துகளிற்காக போராடவில்லை. அனேகமாக வெளிநாட்டில் வாழுகிற அல்லது இணையத்தொடர்புள்ள இந்திய,இலங்கை நபர்கள்தான் இங்கு வாதித்துக்கொண்டிருப்பவர்கள். இந்த வலைப்பதிவுகளில் அமெரிக்காவில் புஷ் வருவதுதொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்படுவதுபோலவே இந்தியாவில்இலங்கையில் நடந்துகொண்டிருக்கிற இத்தகைய அடக்குமுறைகள் பற்றிய புரிதல்களை வளர்த்துக்கொள்ளவே இந்த விவாதங்கள் பயன்படுவதாக நான் நினைக்கிறேன் (சிலவேளை சொன்னதையே சொல்லுவதுபோல இருபுறமும் அயர்ச்சி தோன்றினாலுங்கூட). இந்த மாதிரியான விடயங்களில் முடிந்தளவு தீவிரத்துடன், இருக்கிற நாட்டில் அவை குறித்த தேடல்களுடன், உலகெங்கும் அடக்கப்படுகிற மனிதர்கள் பற்றிய அறிதலும் புரிந்துகொள்ளுதலும்தான் எனது நோக்கமாக இருக்கிறது.
அல்லாமல், கனடாவில் பாதுகாப்பான ஒரு மூலையில் இருந்து ஈழத்திலோ தலித்துகளிற்காகவோ பெண்களிற்காகவோ போராடுகிற கனவும் எண்ணமும் கொண்டு இல்லை.
நீங்கள் ‘புஷ்’ தனமாக பயமுறுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மனிதருமே கருத்துக்களால் ஆனவர்கள் என்கிறபோது ‘ஒற்றுமை குலைகிறது’ என யோசிக்கவும் இல்லை. அது அப்படித்தான் என்றால் பிரச்சினைக்குரியவர்களை இந்த ‘தமிழ்மணம்’ என்கிற இணைப்பிலிருந்து எடுத்துவிடுகிற ‘உரிமை’ கூட உரியவர்களுக்கு இருக்கிறது. இதிலெல்லாம் யாருக்கும் (குறிப்பாக எனக்கு) பிரச்சினையுமில்லை.
——————————–
” தலித்துக்கள் தலித்தாய் பிறந்தது குற்றமாக்கப்படுவதுபோல் தாங்களும் சிந்திக்கத் தெரிந்த பார்ப்னாகப் பிறந்தது குற்றமே. இந்த வலியைத் தாங்கள் அனுபவித்தே தீரவேண்டும்
இப்படியான சமூகத்தை உருவாக்கியது பாப்பன்கள். அவர்களில் ஒரு சிலர் இறந்துதான் தலித்திற்கு விடிவு வருமென்றால் அதில் தவறென்ன?”
இப்படி கறுப்பி கூறியதுடன், எனக்கு ஒரு எளவு உடன்பாடுமில்லை. ஆனால் நீங்களோ ‘ஈழம்’ = கறுப்பி என வாதத்தைத் தொடரவழிவிட்டு ‘காந்தி தேசம் என பதிலைத் முடித்துள்ளீர்க்ள. இப்போது, உடனடியாக உங்களிடமிருந்து இயல்பாக வருகிற இந்த பதில்களின் உளவியலைப் பற்றி விவாதிக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.
மரணம் என்பது மரணம்தான் வெங்கட். அதற்கு மதமும் இனமும் எந்த வித்தியாசமுமில்லை. செல்ல நாய் செத்துப் போனால் அழுகிற நாட்டில் வாழ்ந்துகொண்டு ஒரு எறும்புக்கே தீங்கு நினைக்காத ஒருவர் இறப்பதைப்பற்றி நாங்கள் So What என நினைப்போம் என நினைக்காதீர்கள். இறந்துபோனவர்கள் யாருக்கோ ஒரு ‘அன்புக்குரிய’ தான். இந்தக் கருத்தை, காந்தி பிறக்காத, ‘பயங்கரமான’ தேசம் எனது பூர்வீகமாக இருக்கிறபோதும் என்னால் வைத்திருக்க முடிகிறது.
அதேநேரம் கலவரம் நடந்துமுடிந்து, தலித்துகள் எண்ணற்று கொல்லப்பட்ட இடத்தில் போய் இதைச் சொன்னால் அவர்கள் ‘சாகட்டும், செத்தால் என்ன?’ எனக் கேட்டால் அதை, அந்தக் கோபத்தை, அதன் நியாயத்தை, நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொள்ள விரும்பாமல், ‘படிப்பறியா தாழ்த்தப்பட்ட’ சகோதரன்கள் அல்ல இப்போது இங்கே விவாதித்துக்கொண்டிருப்பது, நன்கு ‘படிப்பறிவுள்ள’ வர்கள்தான்.
பார்ப்பான் என்கிறபோது அதற்கான முழுமையான எதிர்ப்பும், வசையும் இந்தியாவில்/இலங்கையில் அதிகாரங்களில் (அரசியல், பத்திரிகை, etc) இருக்கிற பிராமண/வேளாள ஆதிக்கத்தையும் அவர்களது திட்டமிட்ட சிறுபான்மைமீதான வன்முறையையும் வைத்தே எழுப்பப்படுகிறது.
தவிர,
வறிய, அக்ரகார பிராமணர்களைப் பற்றி பூமணியின் கதைகளிலும் வேறு பல இடங்களிலும் படித்துள்ளேன், எனக்கு அவர்களில் எந்த வெறுப்பும் இல்லை. ‘பார்ப்பானையும் பாம்பையும் கண்டால்’ யாரை அடிக்கவேண்டுமென்று என்னிடம் சொல்லப்பட்டபோதும் ‘நான் யாரை ‘அடிக்க’வேண்டுமென்பது எனது பிரச்சினை’ என்றுதான் சொல்லியிருக்கிறேன். அந்த அப்பாவிகளிடம் போய் ‘பார்ப்பாரப் புத்தி’ இத்தியாதி என ஒருவன்(ள்) திட்டினால் அதற்கு நானோ அப் பிராமண ஆதிக்க எதிர்பர்பாளர்களோ ‘சபாஸ்’ போட்டால் அது எங்களுடைய அறியாமை மாத்திரமே. நிச்சயம் நான் அதை செய்ய மாட்டேன். ஆனால் இந்த விவாதங்கள் படித்த/வெளிஉலகங்களில் வசிக்கிறவர்ககளுடன் இடம்பெறுகிறது என்பதுதான் மிகப் பெரிய வேறுபாடு. அவர்கள் தருகிற கருத்துக்கள் சிறுபான்மையினருக்கு எதிரானதாக இருக்கிறபோத அது ‘பார்ப்பன ஆதிக்கப் புத்தி’யின் வெளிப்பாடாய்த்தான் பார்க்கப்படும்.
********************************************
கொலைபயத்தைப் பற்றி ஈழத்தவர்களிற்குச் சொல்லத் தேவையில்லை என்றுவிட்டு உங்களுடைய இளம்பருவ மரணபயத்தை எழுதியிருந்தீர்கள்.
நான் ஈழத்திலிருந்து வந்தாலும்
மரணத்தைப் பற்றி அறிந்திருந்தாலும்
நான் சார்ந்த இனத்தை கீழிறைக்கும் எந்த வசைக்கும் (இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்து எதுவுமே தெரியாத/தெரிய விரும்பாத இந்தியத் தமிழ் சகோதரர்கள் தமது நாட்டை ‘நிலைநிறுத்தும்’ (இதை இந்தியாவை அமெரிக்காவாய்ப் போட்டு, இலங்கையை வறிய நாடுகளாய்ப்போட்டு, இலங்கை மீதான ‘புஷ்’தனம் என நான் சொல்லுவேன்) ஒரே உயர் நோக்கோடு எப்படி சாடினாலும்) சென்சிற்றிவ் ஆனதில்லை, ஆனால் ‘ஈழத்தவராய் இருந்தாலும்’ தங்கள்தங்கள் நலனுக்காக ‘அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசுகிறபோது” கோபம் வருகிறது. ஆனால் கொஞ்சமும் வருத்தமில்லை.

உங்களைவிட எவ்வளவோ காரணங்களுக்காக எனது ‘அடையாளங்களை’ நான் காவலாம் என்றாலும்,

எனது இன, சாதி, நாடு போன்றை ‘நிலைநிறுத்தும்’ பொருட்டு நான் ஒருபோதும் பேசப்போவதில்லை (அதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள்). என்னிடம் வந்து, எனது நாட்டில் வசிக்கிற, என்னுடைய மொழியே பேசுகிற வேறு மத சகோதரன் வசைபாடி, ‘உனது நலனுக்கான எங்களை உனது இடம் விட்டுத் திரத்தினியே’ என்று கேட்டால், சென்சிற்றிவ் ஆய் இராமல் தான் இருப்பேன், அவன் வெளிநாட்டில் வசிக்கிற, படித்தவனாய் இருந்தால்கூட.

அதே பக்குவத்தை ‘முற்போக்கான’ பிராமணர்களிடம்தானே எதிர்பார்க்க முடியும்? 60, 80 வயது காலமாக தமது ஜாதீயில் ஊறி, கடவுளிடம் சரணடைந்தவர்களிடம் போய் கடவுள் கல்லு என்று சொல்லி எனது அறிவை நிலைநாட்டிக்கொள்ளவேண்டிய வக்கிரம் எனக்கில்லை. ஆதலால் உங்களைப்போன்றவர்களிடம் இதை (கல்லு என்பதை அல்ல) எதிர்பார்க்கிறேன், அதனால்தான் அவர்களிடம் (முற்போக்கான பார்ப்பனர்களிடம்) சென்சிற்றிவ்வான பதிலைக் காண நேர்கிறபோது ஆச்சரியமாயிருக்கிறது. அதை எழுதினேன்.

அதன் அர்த்தம் அப்பாவிகளிடம் போய் வசைபாடுவதை ஆதரிப்பது அல்ல. ரோ.வசந்த் உங்களுடைய பதிவில் அவசியமற்று வந்து உங்களை உங்களது ஜாதியை முன்வைத்து வசைபாடியிருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

நீங்கள் எழுதியதாகக்கூட இருக்கலாம். பிராமண பையன்களை ஹறாஸ் செய்வது பற்றி. மீன் சாப்பிடச் சொல்லி, இத்தியாதி. பெண்கள்மீதான குழந்தைகள் மீதான வன்முறைகள் எல்லாவற்றையும் பேசுகிறவர்கள் இப்படியான திணிப்புக்களை ஆதரிப்பார்கள் என எனக்குத் தோணவில்லை. ஆக, ‘பெரிய அளவில்’ நடக்கிற விடயங்களை எழுதுகிறபோது இந்த மாதிரி விசயங்கள் அவற்றின் அவசியமின்மை கருதியே விடுபடுகின்றன, வசதி கருதி இல்லை.

யாரையும் தனிமைப்படுத்துவது, அந்நியப்படுத்துவது தவறுதான்.

யாரையும் துன்புறுத்த வசை சொல்வது தவறுதான்.

இவையெல்லாம் பெரியளவில் பலமற்ற, ஒடுக்கப்படுகிற, சிறுபான்மையினர்மீது நடக்கிறது.

அதை வைத்து நடக்கிற வாதத்தில் உங்களை தொந்தரவு செய்கிற விடயம் எனக்கு ஆச்சர்யம், உங்களுக்கு வியப்பு! அவ்வளவே.


என்னால் முடிந்த அடியெடுத்துத் தருகிறேன். இன்னும் இருபது, ஏன் ஐம்பது வருடங்களில் சாதியற்ற சமூகத்தை நாம் நம்மில் காணவேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகளாக உங்கள் மனதில் தோன்றுவதை எழுதுங்கள்
-வெங்கட்

உங்களது முன்னெடுத்தலில் எனக்குத் தெரிந்தவை: குறிப்பிட்ட (‘படிப்பறிவற்ற’ சகோதரர்களின்) பாடல்கள் (அவை ‘பழமை’யைப் பாடினாலும்) எழுத்துக்கள், அந்த மக்களின் கலாசாரம் இவை பற்றி எமது புரிதல்கள் விரிவடையவேண்டும். அது நேர விவாதங்களும் வாசிப்பும்தான் முக்கியமாக கல்விக்கூடங்களில் சொல்லித்தந்தார்கள்.
நான் முடிந்தவரையில் அவற்றைப் படித்து வருகிறேன். மூதாதையர்கள் ஒரே மொழி பேசிய மனிதர்களை பிறப்பால் பிரித்து ‘பீமட்டை தோய்த்து அடித்த’ வரலாற்றை வாசிப்பதை என்னை மனிதராக வைத்திருக்க நான் அறிய வேண்டிய விசயங்கள் என்பதில் எனக்கொரு சந்தேகமுமில்லை, எனது பிள்ளைகள், பிள்ளைகளின்பிள்ளைகள் கூட இவைகளை அறியவேண்டும், இது திரும்ப நிகழாமல் இருக்க இதுவும் ஒரு வழிதான். இந்தமுறைதான் எனக்குத் தெரிந்த முறை.


இதை எழுதிக்கொண்டிருக்கிறபோது மாலனின் பின்னூட்டம் இப்படி முடிகிறது
வலைப்பதிவுகளில் பதிவர்கள் தாங்களே வரித்துக் கொண்ட அடையாளங்களின் பேரில் மற்றவர்களின் பேரில் கக்குகிற கசப்புகள் அதிகமாகத்தான் இருக்கின்றன. ஒரு universal outlookகை பெறாதவரையில் அவர்கள் இதிலிருந்து மீண்டு வர முடியாது. அந்தப் பார்வையைப் பெற முடியாமல் அவர்களது ‘அடையாளங்களே’ அவர்களைத் தடுக்கின்றன.

universal outlook என்றால் என்ன? எங்களுடைய நாட்டில் இருக்கிறதை விட்டுவிட்டு அமெரிக்க ஆதிக்கத்தைப் பற்றி சொல்வதா?
எனக்குத் தெரியவேண்டும். யூதர்கள் தமக்கு நடந்த இனப்படுகொலையை சொன்னால் அதை ‘பழம் பெருமை’ பேசுவதாக நீங்கள் சொல்வீர்களா? வரலாற்றில் வாழவேண்டியதில்லை யாரும். ஆனால் அதைத் தெரிந்து கொண்டு எங்களைப் பக்குவப்படுத்தவும், அதற்கு மனதார/இதயத்தால தயாராகவும் வேண்டும்.
இதயத்தில் ‘உயிரேயில்லாத’ தமது நாடு/ தமது நாட்டின் நலன்/ தமது நாட்டின் முன்னெடுப்பு இவற்றை வைத்திருப்பவர்கள் ‘உயிருள்ள’ மனிதர்களைப் பற்றி பேசுவதும், மனித வலிகளைப் பற்றிப் பேசுவதும் முரண்நகை.


ஒவ்வொரு கருத்துக்களையும் கூறுகிறபோது: ‘இந்தியாவை’ எதிர்த்தால் ‘எனக்கு இந்திய நண்பர்கள் இருக்கிறார்கள்’ என்றும், பார்ப்பனஆதிக்கத்தை எதிர்த்தால் ‘நல்ல பார்ப்பனர்களும் இருக்கிறார்கள்’ என்றும் ஆணாதிக்கத்தை எதிர்த்தால் ‘நல்ல ஆண்களை எனக்குத் தெரியும்’ என்றும் பதாகைகளின் துணையோடு அவற்றை சொல்ல வேண்டியதில்லை என்று நினைத்ததாலையே சுதந்திரமாக எழுதுவது. இதன் அர்த்தம் பார்ப்பானியத்தின் ஒருபக்கத்தை (வசதிப்படி) மட்டும் பார்க்கவிரும்பி அல்ல. அதன் மறுபக்கம் நமது நாடுகளின் ஏனைய வறிய குடிகளுடன் இணைந்ததாவே இருக்கிறது, அதை அவர்களுடன் இணைத்துத்தான் பேசமுடியும் என்பதாலையே.
நன்றி.