Archive

Archive for the ‘இசை’ Category

அனீ லெனொக்ஸ் + எறித்மிக்ஸ்: இனிய கனவுகள் இவற்றால் ஆனவை

March 8, 2007 1 comment

Eurythmics-Peace----Book--CD-369781.jpg

றித்மிக்ஸ் (The Eurythmics ) இணைகள்: 80களின் வெகுசனக் கலைஞர்களில் பிரபலமாயிருந்தவர்கள்; synth-pop வகை இசையால் அறியப்பட்டிருந்தார்கள். இவர்களது பாடல்கள் பலதும் தனித்துவமான காட்சிப்படுத்தப்படுத்தல், தொகுப்பு, இயற்கையுடனான தொடர்பு, நடிப்பு, வரிகள், மையமாக அனீ லெனொக்ஸின் குரலால் ஈர்க்கும்; மேலதிகமாக இந்த இணைகளிடம் காண்கிற ஒருவித craziness-க்காகவும் பிடிக்கும். பாடகராக அனீ லெனொக்ஸ், வாத்தியங்கள், எழுத்து மற்றும் தயாரிப்பு Dave Stewart.

எல்லா மனிதருடைய வாழ்விலும் இருக்கக்கூடிய -அல்லது இல்லாதிருக்கக் கூடிய ஆனால்- சுவையான பக்கங்கள் போல, 1954-இல் ஸ்கொற்லாந்தில் பிறந்த அனீ 1971-இல் இங்கிலாந்து செல்கிறார், Royal Academy of Music இல் அனுமதி கிடைத்து. ஆனால் சில வருடங்கள் அங்கு தொடர்ந்தவர், பின் படிப்பை இடைவிட்டு இலண்டனில் ஒரு உணவகத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்து கொண்டிருந்த காலம் (1976) இவரைக் கண்ட ஸ் ரீவேர்ட் அங்கே அவரை திருமணம் செய்யக் கேட்டதாகப் படித்திருக்கிறேன் (இதெல்லாம் எவ்வ்வ்வளவு பெரிய அங்கீகாரம்!!!). பின் The Tourists என்கிற பொப் குழுவிலிருந்தவர்களில் இவரும் டேவ் ஸ் ரீவேர்ட் உம் சேர்ந்து எறித்மிக்ஸ் உருவானது. எனக்கு சுவாரசியமாக இருந்த விடயம்: காதலர்களாக அவர்களிடையே உறவு முறிந்த பிறகும், தாம் இருவரும் நேசிக்கிற ஒன்றின் பொருட்டு தொடர்ந்தும் (1990களிற்குப் பிறகு அனீ ஓய்வு பெற விரும்புவதாகக் கூறி, பின் தனித்து ஆல்பம் வெளியிட்டிருந்த போதும்) இணைந்தே இயங்கினார்கள்.

அவர்களது பாடல்களில் பொதுவாக இரண்டு கூறுகளைக் குறிப்பிடலாம்:
1. மனிதஉறவுகள் சார்ந்தவை
2. [மனித உறவுகள் முடிகிறதுமான] தங்குதலிற்கெதிரானவை


முதலாவது
{for the broken dreamers}

ஆனீ லெனொக்ஸ் பெண் பாலிற்குரிய என்பதான ஆடை அணிதல் முறைகளை பின்தொடரா (gender-challenging)- கோட், சூட் இதர ஆணினதான ஆடைகள் – பொடியன் தோற்ற அவரது உடைகளாலும் அறியப்பட்டிருந்தவர். சில ஆண்களிடம் பெண்களிடம் இருக்கிற எதிர்பால் ஆடைகளை அணியும் விருப்பம் (cross dressing, Transvestism) ஆர்வங்கள் அவர்கள் பாலியல் தேர்வு குறித்த சந்தேகத்தை கிழப்பும் வழமைக்கமைய இவர்களது பிரபலத்திற்கு ஆடை அணிதல் முறை குறித்த சர்ச்சையும் காரணமாக இருந்தது. Who’s That Girl பாடலில் அனீயின் காதலன் ஒவ்வொரு பெண்ணுடன் வந்துகொண்டிருக்க, சினத்துடன் பாடிக்கொண்டிருப்பாள், இறுதிக் காட்சியில் அனீ (மீசை அரும்புகிற, காதடியில் தலைமுடியுடன்) ஒரு ஆணாகவே வந்து பாடிக்கொண்டிருக்கிற அனீயை முத்தமிடுவாள் (Elvis Presleyயில் அவரது ஸ்ரைலில் இவரது ஈடுபாடும் அறியப்பட்டிருந்த ஒன்றே).

இந்த உடைத் தேர்விற்கு அவரது காலகட்டமே பிரதான காரணமாகத் தோன்றுகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் பிறகான பிள்ளைப் பேறு அதிகரித்த (Baby boomer) காலகட்டத்தில் பிறந்தவரான அவரது அந்தத் தலைமுறைக்குரிய பண்புகளான குடும்பம், காதல் போன்ற மரபான நிறுவனங்களொடு பிளவுறும் சுகந்திர விழைபை ஏதோ ஒரு அளவில் பாடல்களும் காவுகின்றன.
அவற்றில் பொப் முடியோடு நீளப் பாவாடை சட்டை அணிந்த 80களின் பழமைவாத முறையில் உடை அணிந்தபடி, தனது கணவனுக்காகக் காத்திருந்து, கையில் ஏதோ பின்னிக்கொண்டிருக்கிற “குடும்பப் பெண்” ஒரு பகடியாகவே வருகிறாள். “நான் Bபீத்தோவன் கேட்கவிரும்புகிறேன்” – “I need a man” என அர்த்தப்படுகிற பாடலில் “1984 sex crime” போலவே baby boomers தலைமுறைக்குரிய மரபை உடைத்துப்போடும் விழைபும் சிக்குப்படுதலிற்கு எதிரானதாகும் பிறழ்வு மனமும் தெரியும்; மரபாக வரும் ‘இயல்புணர்ச்சிகளை’ எல்லாம் கேலி செய்வதுபோல Do You Want to Break Up போன்ற பாடல்களில் உடைவை எதிர்கொள்ளல்…. எத்தனை துயரமாக வரிகள் இருந்தாலும் குரலில் துயரமிராது. ஒரு மேலான, உடைந்துவிடாத குரல்: }கடலுக்கென்னை கூட்டிச் சென்று/நீ ஒரு கல்லைப்போல என்னைப் போட்டாய்.ஆழமான நீலக் கடலுள் என்னை. அங்கிருக்க விரும்பவில்லை பேபி/ நான் தனியே நீந்த விரும்பவில்லை{You took me to the ocean/Dropped me like a stone.//Took me to the deep blue ocean./I dont wanna stay there baby/I dont wanna swim alone} பல பாடல்களும் உறவுசார் பாடல்களே ஆனபோதும், இத்தகைய வரிகளிலுள்ள துயரத்தோடு ஒட்டாத குரலின் தன்மையில் கவர்கின்றன, தங்களை தாங்களே வேடிக்கை பார்ப்பதுபோல!

ஆனால் British New Wave (50-60), வியட்நாம் யுத்த எதிர்ப்பு 60-70களின் புரட்சிகர குரல்கள் – இவற்றைத் தாண்டி வருகிற போதும், ஒரு வெகுசன இசைஞர்களான இவர்களிடம் முந்தையவர்களான பஃபீ செயின்ற் மேரீ போன்றவர்களின் பாடல்களில் உள்ள தீவிரமான எதிர்ப்பு அரசியற் கூறுகள் கிடையாது. ‘கடவுளின் குழந்தைகள்’ என நினைத்துக் கொள்வதாலும், ‘திறந்த இதயத்துடன்’(!!) அணுகினால் கடவுளைப் போலவே ஆச்சர்யங்களை நிகழ்த்தும் காதலால் ‘வலிகளைப்’ போக்க முடியும் என்றும், கூறும் பாடல்கள். So what, என்னைக் கவர்வது இவற்றை பாடுகிறபோது இருக்கிற அந்த passion-உம், அனீயின் energy-உம், அப்புறம் ‘தங்குதலில்’ உள்ள வன்முறையின் முகத்தை காட்டும் பாடல்கள் என்பதும்தான். “Beethoven (I Love To Listen To)” “You Have Placed A Chill In My Heart” பாடல்களின் வரிகளில், வீட்டிலுள்ளவளின் ‘இருத்தலும்’ -அவள்- ‘இருக்க விரும்புதலும்’ ஆன முகம் பிறழ்கிறது. (I love to listen to Beethoven…/I love to listen/…I was dreaming like a Texan girl. A girl who thinks she’s got the right to everything. A girl who thinks she should have something extreme.) (A woman’s just too tired to think/About the dirty old dishes in the kitchen sink.) (I wish I was invisible/So I could climb through the telephone/When it hurts my ear/And it hurts my brain/And it makes me feel too much/Too much too much too much./Don’t cut me down/When I’m talking to you/‘Cause I’m much too tall/To feel that small./)

ஒல்லியான ஒரு பெண் கையில் லாம்புடன் -அதற்கு அவசியமற்று வீடியோவில் நிறைய வெளிச்சம் வேறு தெரிகிறதா? அப்போ- காற்று வீசும் பாறை வெளியில் ‘வெங்கணாந்துவது’ போல வரும் Here comes the rain again, செய்யிறதெல்லாம் செய்திற்று உடைவிற்கு ‘ஏன்’ என்று என்னைக் கேட்காதே எனும் don’t ask me why, “ஆள் முடிஞ்சுது எண்டு தண்ணி தெளிச்சு பிணமெண்டு மூடியிராதிங்க, இன்னும் உயிரோட தான் இருக்கிறன்” என்ற மாதிரி பாடத் தகுந்த i’ve got a life (it ain’t over. it aint’ over.) போன்ற (it’s dog eat dog the human race போன்ற வரிகள்…) பாடல்கள் சகலமும் play 4 our crazy moods.


இரண்டாவது
—————————
தங்குதலிற்கெதிராய்
—————————–
மறுத்தல்.பயணித்தல்.தொடர்ந்திருந்தல்

போன்ஞ் ஜோவியின் ஒரு ஹிற் பாடல் – “Who Says You Can’t Go Home” – ‘இந்த இடத்தை விட்டுப் போக 20 வருடங்களை செலவளித்தேன்/நிரப்ப முடியாத ஏதோ ஒன்றை தேடிக்கோண்டிருந்தேன்/எப்போதுமே எனக்குத் தெரிந்திருந்த ஒன்றிலிருந்து ஓடிக்கொண்டிருந்தேன்/எலும்பு கிடைக்காத குருட்டு நாயினைப் போலும்/நான் அதிகாலை வலையத்தில் தொலைந்த ஓர் ஜிப்சி/…என்னால் முடிந்தளவு தொலைவு போனேன், ஒரு புதிய முகத்தை தேட முயற்சித்தேன்/…You take the home from the boy, but not the boy from his home/இவை எனது தெருக்கள், நான் அறிந்திருந்த ஒரே வாழ்வு/யார் சொன்னது உங்களை வீடு செல்ல முடியாதென……”
– இவ்வாறு போகும்; எங்கோ ஜிப்சியாய் தொலைந்துபோகும் வேட்கை தரும். இவ் வகைப் பாடல்கள் எப்போதும் பிடித்துப் போவதன் காரணத்தைத் யோசித்தபோது அவற்றிலுள்ள பயணங்களாலென்று தோன்றியது: வாழ்வின் சகல ரசங்களையும் அதன் அத்தனை சுவைகளையும் அனுபவித்துவிட்டு ஈற்றில் “வீட்டின்” பெருமையையும் -அவர்களுடையதான வாய்ப்புகளைக் கிடைக்கப் பெறாத “தங்கியவர்களிடம்”- வீட்டைத் தாண்டிப் பயணித்த அந்த அனுபவங்களின் கிளர்வுகளையும் ஆசைகளையும், இவர்கள் தருகிறார்கள்.

ஏராளமான வர்ணங்கள் உபயோகிபடும் ஒளிப்பதிவில், கறுப்புக் கோட்சூட்-உடன் விதமான நிமிர்வுடன் நின்று, ஒரு மந்திரவாதி போலவோ ஓர் இசையமைப்பாளர் போலவோ அனீ கையசைப்பில் அலைந்து திரிகின்ற, பல்வண்ணத் துணிகள் மாறி மாறி வந்துகொண்டிருப்பதேபோல மனப்பதிவு தருகிற – words r the magic, fly like birds.

வரிகளிற்கு இன்னொரு வடிவம் வழங்கும் காட்சிப்படுத்தலில் முக்கியமானவை நிறங்களும் முகங்களின் Close-upகளும். இருவரும் அதில் கைக்கொள்கிற ‘நாடக பாணி’, அனீயின் பவித்திரமான முகம், கண்கள்; மற்றும், இயற்கை எடுத்துக்கொள்கிற பங்கு: கடலலைகள், எதைத் தேடிப் பறக்கிற கழுகு, ஆறுகள் மற்றும் இருளும், காற்றும்… ஒரு மேலான, உடைந்துவிடாத குரலுடன் ஒத்திசையத் தொடங்கும்.

கேட்பவர்கள் தங்கியவர்களாக, பாடகர்கள் கலைஞர்கள் அவர்கள் சதா கடந்துகொண்டே, தங்குதல் மறுத்தவராய் நகர – இந்தப் பண்பு கேட்போரை அவர்களிடத்தில் இழுப்பதாக இருக்கலாம்; அல்லது பிறிதும் வாழ்வின் எண்ணற்ற வசீகரங்களை கிளப்புவதாலும் சுற்றித் திரிந்த “ஒருபோது”-களை இரைமீட்டிச் செல்வதாலும் இந்தப் பாடல்கள் பிடிக்கலாம்.
~

http://www.youtube.com/watch?v=PscogedAWTI

மழை திரும்பவும் வருகிறதே

இதோ திரும்பவும் மழை வருகிறது
என் தலைமேல் ஓர் நினைவுபோல விழுந்தவண்ணம்
என் தலைமேல் ஓர் புது உணர்ச்சி போல விழுந்தவண்ணம்
நான் வீசும் காற்றில் நடக்க விரும்புகிறேன்
நான் காதலர்கள் போல பேச விரும்புகிறேன்
உனது கடலினுள் சுளியோட விரும்புகிறேன்
உன்னுடன் மழை பெய்கிறதா

ஆகையால் என்னோடு பேசு பேபி
காதலர்கள் போன்று
என்னுடன் நட
காதலர்கள் போன்று
என்னிடம் பேசு
காதலர்கள் போன்று

இதோ மீளவும் மழை வருகிறது
என் தலைமேல் ஓர் துயரமாக விழுந்தபடி
என்னை ஓர் புது உணர்ச்சி போல பிளந்தபடி

ஓ…
நான் வீசும் காற்றை சுவாசிக்க விரும்புகிறேன்
நான் காதலர்கள் போல் முத்தமிட விரும்புகிறேன்

உன்னிடம் மழை பெய்கிறதா
(இங்கே, அது திரும்பவும் வருகிறதே, இங்கே, அது திரும்பவும் வருகிறதே)
~

இனிய கனவுகள்

இனிய கனவுகள் இவற்றால் ஆனவை
நான் யார் முரண்பட?
ஏழு கடலையும் உலகையும் சுற்றினேன்
எல்லோரும் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்

சிலபேர் உங்களை உபயோகிக்க விரும்புகிறார்கள்
சில பேர் உங்களால் உபயோகிக்கப்பட விரும்புகிறார்கள்
சிலபேர் உங்களை துன்புறுத்த விரும்புகிறார்கள்
சிலபேர் உங்களால் துன்புறுத்தப்பட விரும்புகிறார்கள்

நான் உன்னை உபயோகிக்கவும் துன்புறுத்தவும் விரும்புகிறேன்
நான் உனக்குள் உள்ளதென்ன வென அறிய விரும்புகிறேன்
(Whispering) தலை நிமிர்ந்து, தொடர்ந்து செல்க
தலை நிமிர்ந்து தொடர்ந்து செல்க
தலை நிமிர்ந்து, தொடர்ந்து செல்க
தலை நிமிர்ந்து தொடர்ந்து செல்க…

இனிய கனவுகள் இவற்றால் ஆனவை
நான் யார் முரண்பட?
நான் ஏழு கடலையும் உலகையும் பயணித்தேன்
எல்லோரும் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்

நான் உன்னை உபயோகிக்கவும் துன்புறுத்தவும் விரும்புகிறேன்
நான் உனக்குள் என்ன உள்ளதென அறிய விரும்புகிறென்
நான் உன்னை உபயோகிக்கவும் துன்புறுத்தவும் போகிறேன்
நான் உன்னுள் என்ன உள்ளதென அறியப் போகிறேன்

Advertisements
Categories: இசை

*புத்தாண்டிற்கான பாடல்

January 1, 2007 1 comment

எனது உயர் பள்ளி நண்பர்கள்
தமது உயர் பள்ளி ஆண் நண்பர்களையே மணம் செய்து கொண்டனர்
பெற்றோர்கள் வாழ்கிற அதே தபால் முகவரி எண்களுள்
வீடுகளெடுத்துச் சென்றார்கள்

My friends from high school
Married their high school boyfriends
Moved into houses in the same ZIP codes
Where their parents live

ஆனால் என்னால், என்னால் ஒருபோதும் பின்தொடர முடியாது
இல்லை என்னால், என்னால் ஒருபோதும் பின்தொடர முடியாது
But I, I could never follow
No I, I could never follow

முகட்டில் நட்சத்திரங்களுடைய
இளரோசா நிற உல்லாச வாகனத்தில்
நான் பெருஞ்சாலையுள் நுழைந்தேன்
ஒரு ஜிப்சிபோல வாழ்ந்தேன்
ஆறு பலமான கைகள் ஸ்ரீறிங் வீல்-இல்
I hit the highway in a pink RV with stars on the ceiling
Lived like a gypsy
Six strong hands on the steering wheel

நான் கனகாலமாகப் போயிருந்தேன்
சிலவேளை, என்றோவொரு நாள், ஒரு நாள் நான் ஓரிடத்தில் தங்கக் கூடும்
ஆனால் எப்போதும் எனது பாதையை கண்டடைந்தேன்
I’ve been a long time gone now
Maybe someday, someday I’m gonna settle down
But I’ve always found my way somehow
நீண்ட பாதையை தேர்வதூடாக
நீண்ட பாதையை தேர்வதூடாக…
By taking the long way
Taking the long way around
Taking the long way
Taking the long way around

எதனதோ அரசியை சந்தித்தேன்
ஐரிஷ் உடன் குடித்தேன் ஹிப்பிகளுடன் புகைத்தேன்
ஷேக்கர்களுடன் போய் இருந்தேன்
அவர்கள் சொன்ன எல்லா a*_*களையும் முத்தமிடவும் இல்லை
I met the queen of whatever
Drank with the Irish and smoked with the hippies
Moved with the shakers
Wouldn’t kiss all the asses that they told me to

இல்லை, என்னால் ஒருபோதும் பின்தொடர முடியாது
இல்லை, என்னால் ஒருபோதும் பின்தொடர முடியாது
No I, I could never follow
No I, I could never follow

It’s been two long years now
Since the top of the world came crashing down
And I’m getting’ it back on the road now

But I’m taking the long way
Taking the long way around
I’m taking the long way
Taking the long way around
The long
The long way around

Well, I fought with a stranger and I met myself
I opened my mouth and I heard myself
It can get pretty lonely when you show yourself
Guess I could have made it easier on myself
ஓர் அந்நியனுடன் மோதினேன் என்னைக் கண்டு கொண்டேன்
எனது வாயைத் திறந்ததால் எனது குரலைக் கேட்டிருந்தேன்
உங்களை வெளிப்படுத்துகிறபோது அதுவே சற்றுத் தனிமையாக்கலாம் –
இதை எனக்கு இலகுவாய் ஆக்கிக் கொண்டிருக்கலாம் தான்

ஆனால் என்னால், என்னால் ஒருபோதும் பின்தொடர முடியாது
இல்லை என்னால், என்னால் ஒருபோதும் பின்தொடர முடியாது
But I, I could never follow
No I, I could never follow

Well, I never seem to do it like anybody else
Maybe someday, someday I’m gonna settle down
If you ever want to find me I can still be found
ஒருபோதும் நான் இதை வேறு யாரும் போல செய்வதாய்த் தெரியவில்லை
சிலவேளை, ஒரு நாள், ஒருநாள் நான் ஓரிடத்தில் தங்கக் கூடும்
நீங்கள் எப்போதாவதெனைக் காண விரும்பினால்
நான் செல்லக் காணலாம்

நீண்ட பாதையை தேர்ந்த படி
நீண்ட பாதையை தேர்ந்த படி…
Taking the long way
Taking the long way around
Taking the long way
Taking the long way around
~~~~~~~~~~~~~~~~
ஆல்பம்: “Taking The Long Way”
பாடகர்கள்: Dixie Chicks

செம்ரெம்பர் வரும்; bully-களும்…

September 18, 2006 1 comment

*நேற்று நான் அசுத்தமாக இருந்தேன்
அழகாக இருக்க விரும்பினேன்
இப்போ நான் என்றென்றைக்குமான அசுத்ததத்தில்
என்பது தெரியும்

Yesterday I was dirty
Wanted to be pretty
I know now that Im forever dirt


நாங்கள் தான் யாரு மல்லாதவர்கள்
நாங்கள் யாரோபோல இருக்க விரும்புகிறோம்
நாம் செத்தால் தெரியும் – அவர்களுக்கு
நாங்கள் யார் என்று

We are the nobodies
We wanna be somebodies
When were dead,
Theyll know just who we are


மற்றொரு நாள் சில குழந்தைகள் இறந்தன
நாம் இயந்திரங்களிற்குப் பசி தீர்த்துவிட்டு பிறகு வணங்கிக் கொண்டோம்
ஆரோக்கியமற்ற நம்பிக்கையில் மேலும் கீழும் வாந்தி எடுத்தோம்
அன்றைய தினம் ratings-ஐ பாத்திருக்க வேண்டும் நீங்கள்

Some children died the other day
We fed machines and then we prayed
Puked up and down in morbid faith
You should have seen the ratings that day

–மர்லின் மான்சனின் Nobodies பாடலின் வரிகள்

பள்ளிக்காலங்களில் கட்டுரை எழுதப் பரிந்துரைக்கப்படும் உசாத்துணை பத்திரிகைகளில் இந்த இந்தப் பத்திரிகைகளை வேண்டாம் என வகுப்பில் விபரமாக, சப்வேயில் ஜாலினோ ஜிம்கானா என்று படித்துக் கொண்டு போகும் Metro-வோ, ரொறன்ரோவின் (தற்போதைய) 24hrs வார நாள் தினசரியையோ உபயோகிக்க வேண்டாம் என்று, தடிப்பெழுத்தில், அடிக்கோடிட்டுத் தரப்பட்டிருக்கும். ரொறன்ரோ ஸ்ரார் போன்ற “தரமான” “அடர்த்தியான” மொழியாடலே academic request.
கனடாவைப் பொறுத்தவரையில் (யிலும்!) பெரும்பான்மையானோர் (அதிலும் குறிப்பிட்ட வர்க்கத்தினர்) உயர்பாடசாலைப் படிப்பை இடைவிட்டவர்கள் (drop-outs) தான். எமது “மேன்மையான” யாழ்ப்பாண மனோபாவ “படித்த” தமிழர்களது பரந்த பார்வையிலும், “படித்த” ஏனைய இனத்தவர்கள் போல, படிப்பை இடைவிட்டு, தொழிற்சாலைகளில் அடிக்கும் “ஒரே இடத்தில்” “வாழ்க்கையில் மாற்றமின்றி” தங்கிப் போகிறவர்களாகவே இந்த drop-outs மாணவர்கள் படுவார்கள்; “மொக்குகள்” சமூகத்துடன் பழகத் தெரியாதவர்கள் (”anti-social”) இத்தியாதி என்றே இந்த சமூக பொருளாதார யதார்த்தத்தை “புரிந்து” கிழித்திருக்கிறார்கள், ‘படித்தவர்கள்’!

வெற்றி என்பது ஒரு கல்வித் தகமை (கல்வி அல்லது கற்றல் என்பது பல்கலைக்கழக Degree); ஒரு காப்புறுதிமிக்க வேலை; அதுவரையில் வாழ்க்கை குறித்த (காதல் குறித்த) புலம்பல்கள்; பிறகு அதன் தீரல்கள்.. என்ற இந்த தீராச் சுழற்சியுள் அமையப்பெற்றது இந்த வாழ்க்கை.

இத்தகையதொரு சூழலில், பள்ளிப் பாடத்திட்டத்திற்கேற்ப கட்டுரைகள் எழுதாத, வேலை-வீடு – வேலை என்ற சுழற்சியில் திரிந்துகொண்டிருந்த போது, Metro அல்லது தொடர்மாடிக் கட்டடத்தின் தபால்பெட்டிகளிற்கருகாமையில் குந்தியிருக்கும் 24hrs-இலோ நாட்டு நடப்புகளைத் ஒரு துரித கதியில் தட்டி (நிச்சயமாக சினிமா பக்கம் 5இலோ 6இலோ செலவளிக்கிற நேரத்தின் பெரும் நேரத்தை ஒதுக்கி!) போகிற ஒரு போதில், அந்த “மொழி” பழகிப் போய், “என்ன பிழை இருக்கு அதில” என்றே தோன்றத் தொடங்கியதும், ரொறன்றோ ஸ்ரார் போன்ற பெரும் பத்திரிகை ஒன்றை படிக்க வேண்டிய X-மாணவியாய், அதற்கான (அந்த மொழிக்கான அல்லது “கனதியான” வாசிப்பிற்கான) பொறுமையை இழந்துவிட்டிருந்தது புரிந்தது. அது கூட பறவாயில்லை, ஆனால் படு கேவலமான, “கீழ்”த்தரமான அதாவது இனத்துவேசமும் சிறுபான்மையினருக்கு எதிரானதுமான ஒரு வெள்ளை ஆதிக்கப் பத்திரிகையான ரொறன்ரோ சன் போன்றனவை தயாரிக்கும் Sun Media Corporation -இன் சிறு பிரசுரமாகிய 24hrs- போன்ற ஒரு தினசரியை மட்டுமே நம்பி எனது “புத்திசீவித” மகாஎதிர்காலமே நொறுங்கிப் போனதன் துயரத்தை எண்ணி எண்ணி மறுகாதிருக்க முடியவில்லை. எப்படியோ, ஒரு பொன்னான நாளில் எனது (சரீ! எனது நண்பியின்) மிச்ச சொச்சம் எக்கச் சக்கம் இருந்த கடனட்டையில் ஒரு பெரும் அங்காடியில் ஏதேதோ டீல்-களுடன் ரொறன்ரோ ஸ்டாரிற்கு சந்தா கட்ட நின்ற முகவரிடம் அதற்கு சந்தாக்காரி ஆகி, ?!@#$%^&*()repeat@#$%^&*()repeat@#$%^&*()repeat@#$%^&*(repeat infinteX) ஒரு manners-உம் இல்லாம உந்த பத்திரிகைக்காரர்கள் எழுதித் தள்ளிற அளவை (பேப்பர்க் கட்டுக்கள்) ப் பார்த்து ஏங்கி, அந்த ஏக்கம் அவர்கள் வார இறுதியில போடுற நகைச்சுவைத் துணுக்குகளுக்கே சிரிக்காத அளவுக்குப் போய்விட்டது (இல்லாட்டி மட்டும் அந்த நகைச்சுவைகள் விளங்கித் தள்ளீரும்???).

இந்த செப்ரெம்பர் மாதம் “It feels like New Year’s” என்கிற தலைப்பின் கீழ் அன்பர் (!!) டேவிட் கிறஹாம் வாழ்க்கை section-இல் எழுதியிருக்கிறார், எப்படி அனேகமான அமெரிக்கர்களுக்கு செப்ரெம்பர் புது வருடம் போல தொனிக்கிறதென்றும்.. செம்ரெம்பர் மாதம் மணிரத்தினம் சொல்ற மாதிரியில்ல, மாறா, இன்பம் மிகக் கலந்த மாதமென்றும்… இப்படி இவர் புகழப் புகழ whatever என்றே தோன்றியது. செம்ரெம்பர் புது வருடம் போல தான் என்றாலும் – புதுவருடம் எல்லோருக்கும் மகிழ்ச்சிக் குரியதா என்ன? அது வாழ்க்கையின் ரிதத்திற்கான எம் வருடாந்த திரும்புதல் (..our yearly return to the rhythm of life); பகல்கள் வெயிலாவும், மாலைகள் “கூல்”ஆவும் .. ஆக்கள் தெளிவாக யோசிக்கவும் நேரம் எடுத்துக் கொள்கிற (அங்க ஒண்டுமில்ல) மாதமாம். ஆனா ஒரு “அறிவான, பக்கஞ்சாரலில் ‘சமன்பாடான’ மொழியாடலைக் கடைப்பிடிக்கிற” கண்ணியமான தினசரியொன்றின் பத்திரிக்கையாளர் சும்மா மேலோட்டமா செப்ரெம்பர் மக்களுக்க இன்பமும் தெளிபும் அளிக்கக் கூடிய மாதம் என எழுதுவரா என்ன? ஆகவே, சமூகவெளியாள்களுக்கு (social-outcasts)ம் நோஞ்சான் பிள்ளைகளிற்கும், கோடையில் மறந்திருந்த, பள்ளி bully-களினதும், கோவக்கார ஆசிரியர்களதும் கொடிய அச்சறுத்தல்-ஆக அது இருக்கலாம் என்பதையும் எழுதுகிறார். அவர்களது பள்ளி ஆண்டு அனர்த்தங்களிலிருந்து மனப் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றி வைத்திருக்கும் கோடை விடுமுறையின் பிறகு, பழைய பாதுப்பீனங்களை செப்ரெம்பர் திறந்துவிடும். மேலும் மறுபுறத்தில் செப்ரெம்பரில் வளர்ந்தவர்களும் விடுமுறை கடந்து செல்கிற பள்ளிக்கூட மாணவர்களது மனோநிலையிலேயே இருக்கிறார்கள். பள்ளியில் மோசமான ஆசிரியர்களும் கொடுமைக்கார மாணவர்களும் ஏற்படுத்திய இடத்தை வளர்ந்த பிறகு மோசமான முதலாளிகளும் முகாமையாளர்களும் எடுத்துக்கொள்கிறார்கள்! [Supervisors & bosses play the role once occupied by teacher.]
படித்த எல்லா நகைச்சுவைத் துணுக்குளையும் விட நல்லா இருந்தது; உண்மைத் திருவாக்கியம்.

***
மொன்றியலில்: 25 வயது இளைஞன் பெற்றோருடைய வீட்டில், நிலவறையில் வசித்தவன், திடீரென்று தனக்குச் சிறிதும் சம்மந்தமற்ற கல்லூரி ஒன்றுக்குச் சென்று மாணவர்களை நோக்கிச் சுடுகிறான். “9/11″ “பயங்கரவாதிகள்” போன்ற பீதிகள் நிறைந்த சமகால மேற்கின் உளவியலுள், இந்த அனர்த்தத்தை இயக்கிய இளைஞன் ஒரு முஸ்லிம் ஆக இருந்திரக் கூடாது என நினைத்தது தவிர, இந்த “சூடான” செய்திகளில் ஆர்வமற்று இருந்தது. ஆனால், அவன் உயர் பாடசாலையில் bully செய்யப் பட்டானா, சமூகத்துடனான அவனது உறவு எப்படியிருந்தது, அவனுக்கு இருந்த பெண் நண்பிகள் எத்தனை (இருந்தனரா), அப்படியாய், அவன் ஒருத்தியுடன் போன date-இன் கடைசி date என்ன என்பது வரை அலசி விட்டன தொடர்பூடகங்கள்.

சந்தாக்காரியான எனது வீட்டுக்கு மரியாதையாய் போட்டுச் செல்லும் பேப்பரில் அவர்கள் சொன்ன ஏராளம் சித்திரிப்புகளிற்கு அமைய நோக்கச் சொன்னாலும் என்னால் 25-வயதுப் பையனை அந்தச் சித்தரிப்புகளுள் அடக்க முடியவில்லை; அதிலும், அன்பி றோஸீ டீமானோ (”Kimweer Gill is no Victim“) எழுதுமாப்போல (மேசையில் நீதிவான் சுட்டியலால்த் தட்டுவதுபோல கையால் குத்திக் கொள்ளுங்கள்), “நாங்கள் இங்க ஞாபகம் வச்சிருக்க வேண்டியது, இந்த சம்பவத்தில “பாதிக்கப்பட்டவர்” [சுட்ட Kimweer Gill அல்ல.] இனிய இந்த 18 வயதுப் பெண் பிள்ளையும் காயமும் அச்சமும் அடைந்த மனிதர்களும்தான்” என்பதை ஞாபகப் படுத்திக் கொள்ள முடியவில்லை. இப்படிச் சொல்லுவதூடாக, நிச்சயமாக, இந்த ஊடகங்கள் சொல்லுமாப்போல பலரையும் சுட்டு, ஒரு பிள்ளையைக் கொன்றுவிட்டு, தானும் கொல்லப்பட்ட இளைஞன் குறித்து ஹீரோயிக் கருத்துக்களை முன்வைக்க அல்ல, மிக இலகுவாக நன்மை X தீமை என ஒரு பக்கத்துள் பலவந்தமாய் தள்ளுவது போலவும் “திரும்பத் திரும்ப” நாங்கள் எந்தப் பக்கத்தைத் தேர வேண்டுமென்பதைச் சொல்வது போலவும் இவை தொனிப்பதையே – அந்த தொனியின் ஆதிக்கத்தையே- குறிப்பிடத் தோன்றுகிறது.

மேலும், (பாதித்தவராயும், பாதிப்பை ஏற்படுத்தியவராயும், அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களாயும் இல்லாத) மூன்றாம் மனிதராய் வன்முறை குறித்த அதைத் தூண்டும் அக, புறக் காரணிகள் குறித்த புரிதலை நோக்கிய ஒரு தேடலையே (ஒரு சிறிய யோசனையாய் ஏனும்) எம்மால் மேற்கொள்ள முடியாமற் போவது என்பது சரியாகத் தோன்றவில்லை. அது முடியாமற் போவதற்கான இடைமறிப்பை சமூகத்தின் எல்லாத் தளங்களும் (”கீழ்” “மேல்” தரங்களும்) செய்கின்றன.

தாய் ‘நல்ல மகன்” என்றும், அயலவர்கள் “நட்புணர்வற்றர்” “சிரிக்காதவர்” (இது ஒரு தப்பா?!) என்றும், நண்பர்கள் பெண் தோழிகளற்ற தனிமைப்பட்டிருந்த (அந்நியப்பட்டிருந்த) இளைஞர் என்கிற இந்த இளைஞருடைய முகம் குறித்த சித்தரிப்புகளோ, “நட்பு”த்தன்மை குறித்தனவோ என் சார்ந்த சகோதர்களிடமோ உறவுக்காரப் பையன்களிடமோ இல்லாத ஒன்றில்லை. அவர்களிடமும் வன்முறைக்கான சகல குணாம்சங்களும் (வரிசைப்படுத்திவிட முடியுமெனில்) நிறைந்தே இருக்கின்றன. அவர்களும் விளையாட்டுத் துவக்குகளுடனும் இன்ன பிற வன்ஆயுதங்களுடனும் படம் எடுத்தே மகிழ்கிறார்கள். பல வகைகளில், வீரம், சாகசம், ஆண்மைக்குரிய அடையாளங்கள்.

ஒரு சாதாரண இளைஞனுக்குக் கிடைக்கக் கூடியதாய் இருக்கிற “துவக்குகள்” பற்றிய மிக முக்கியமான (தேவையான) விவாதமும் இன்னொரு புறம் நடக்கிறது. . அதே போல, இந்த வன்முறையைத் தூண்டும் அல்லது வன்எண்ணத்தை வளர்க்கும் வீடியோ கேம்-கள் பற்றிய கருத்துகள். முக்கியமாக 1999-இல் கொலம்பைன் உயர்பள்ளிக்கூட சுடுபாட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போலவே இந்த மாணவனும் குறிப்பிட்ட வீடியோ கேம்-விளையாட்டை விரும்பியவர்களாய் இருந்தது. ரொறன்ரோவில் சென்ற ஆண்டு டிசம்பர் boxing day “Gang” சுடுபடலில் அப்பாவி 16வயது மாணவி ஒருவர் கொல்லப்பட்டதும், ஹார்பர் முதலாய அரசியல்வாதிகள் gun control laws, gun registry control எனக் கதைத்துக் கொண்டிருந்தாலும் இந்த மாபெரும் அமெரிக்கக் கண்டத்தில் பிறந்ததிலிருந்தே வன்எண்ணம் அதன் சாகசம் குறித்த கனவு வளர்க்கப்பட்ட சாதாரண அமெரிக்க பிள்ளைகளுக்காய் ஆயுதங்களிற்கான சந்தை திறந்தே இருக்கிறது

Natural born killers போன்ற படங்கள் போலவே இந்த இளைஞர் மர்லின் மான்சன் இன் பாடல்களால் ஈர்க்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிட்ட கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தது. மார்லின் மான்சன்-ஐ இணையத்தில் ஒன்றுமாறி மற்றொன்று என பாடல்வரிகளும் வீடீயோவுமாகப் பார்த்த அனுபவத்தில் – அந்தப் பாடல்களைக் கேட்டு யாரையும் கொலை செய்து விடுவோமோ என்ற பயத்துடன் (வீடியோவில் தடைசெய்யப்பட்ட தடைசெய்யப்படாத இரண்டு version-இல் தடைசெய்யாததைக் கேட்டு அடுத்து என்ன செய்வமோ என பெரும் அச்சம் வெடிக்க) சற்றே வெலவெலத்துப் போனதும் உண்மை. ஆனால் அவரே பேட்டியொன்றில் சொல்வதுபோல, அவரது பாடலைக் கேட்டு மக்கள் கொலை செய்கிறார்கள் தற்கொலை செய்கிறார்கள் என்றால், அது அவருடைய கலைத்துவ வெளிப்பாட்டைப் பாதிக்க விட முடியாது, (”..அப்படிச் செய்ய வெளிக்கிட்டால்,பிறகு உங்களது எண்ணங்களைத் தணிக்கைக்குட்படுத்துவீர்கள்; உங்களது எண்ணங்களிற்காக நீங்கள் தண்டிக்கப்படக் கூடாது. அத்துடன் கலை அதாகவே இருக்க வேண்டும் – //…if you start to do that, then, you start to censor your thoughts. you shouldn’t punish for your thoughts and art should be able to be what it is.) அப்படித் தணிக்கைக்குட்படுத்தினால் ஒரு கலைஞன்/கலைஞை சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது என்பதும் வெளிப்பாட்டு சுதந்திரமும் அவரது பக்கத்தில் தேவையான அம்சங்களே.
ஆனால் ம.மான்சன் கூறுவதுபோல ஒரு பாடலை/படத்தைப் பார்க்கிற சுதந்திரத்தை உடைய ஒருவர்தான் தனது செயற்பாடுகளுக்கு பொறுப்பாகிறாரா – என்பது முடிவாய்த் தெரியவில்லை. ஆனால், எமது வாழ்விலுள்ள எந்த ஒரு வெற்றிடத்தையோ அல்லது ஏக்கத்தையோதான் எந்த இழிகாம (porno) அல்லது கலைப் படைப்பும் நிரப்புகின்றன எனவே அவ் வெற்றிடத்திற்கான ஏக்கத்திற்கான பொறுப்பு அவ் வெற்றிடத்தை/ஏக்கத்தை அல்லது அது போன்ற ஒன்றை ஏற்படுத்திய சமூக அமைப்பிடமே இருக்கிறது – என்றே (என்னால்) சொல்லத் தோன்றுகிறது.

சில திரைப்படங்கள் சில நாவல்களது கொலைக்கான தூண்டுதல்களாகின்றன எனினும் கொலைக்கான தூண்டுகை மர்லின் மான்சன் இன் பாடல்வரிகள், வன்முறை அரங்க மற்றும் வீடியோ அறிக்கைகளைப் பார்த்து மட்டுமே வருகிற ஒன்றல்ல. அது: வாழ்வின், அது [வாழ்தல்] நிகழ்கிற உலகு விளைவிக்கிற என்னவிதமான வன்மத்தாலும் தூண்டப்படுவது. எமது மனச் சாந்திக்காய் வேணுமானால் , எமினெம்-இன் இரசிகன், அவனது ஒரு பாடலில் போலவே, தனது காதலியை கொன்றுவிடும் செய்தியைப் படிக்கையில் நமக்குத் தெரிந்த தோழிகளிடம் பார்த்துக்கொள் உனது நண்பன் Eminem இரசிகனா என்று எச்சரிக்கை செய்து வைக்கலாம். ஆனால், கொலைக்குத் தூண்டப்படுதல் எளிய காதற் கதைகளூடாய்க் கூட நிகழலாம்.

வீட்டில் “The Bugs Bunny & Tweety Show.” (http://looney.goldenagecartoons.com/tv/bugstweety/)இன் யாபரையும் வென்ற ஒற்றை இரசிகையான எனக்கு, “அதைப் பார்த்து வந்தவர்கள் [பார்க்காத ஏனையவர்களைவிட] வன்எண்ணம் மிக்கவர்கள் என்று புது ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது” என்று படித்தபோது – ஆச்சரியமாய் இருந்தது(?!). உண்மையில் அந்தக் கார்ட்டூனில் பிடித்தமான காட்சியே தன்னைப் பிடிக்க திரியும் எதிரிகளிற்கு தனது ‘ட்ரிக்ஸ்’களால் டிமிக்கி கொடுத்துவிட்டு, அவர்களை வலையில் விழச் செய்து, அவர்கள் பிடிக்க முடியாத இடத்தில் நின்றுகொண்டு, base ball மட்டையாலோ என்னவோ அவர்கள் மண்டையில் திருவாளர் Bugs Bunny மொங்கு மொங்கென்ற மொங்குகிற அற்புதக் காட்சிதான்! எது எப்படி என்ற போதும் – அத்தகைய தொ.காட்சி நிகழ்ச்சிகளால் ஊன்றப்பட்ட வன்முறையை பிரயோகிக்கும் சந்தர்ப்பம் வாய்க்காது போனதால், வருங் காலங்களில் எங்கள் ஹார்ப்பர் மகாராசன் இருக்கிறதையும் நாறடிக்கப் போகிற கனடியச் சட்டத்தின் முன் தலைகுனிந்து நிற்க முடிகிறது. ஆனால் இணையத்தில் பேச்சு உரிமைக்கும் கொஞ்சமும் குறைச்சலில்லாத –அதை காட்ட வழி தேடித் திரியும்– உங்களில் யாராவது எழுத்தில் காணும் வன்முறையைச் சுட்டினாலும், துரதிர்ஸ்டவசமாக ரொறன்ரோ மாநகரில் ரத்தகளரியை ஏற்படுத்தாத பெருந்தன்மைக்கு நன்றியை தெரிவிக்க வேண்டுமென்றே சொல்லுவேன்!
~0~


*ஆரம்பித்தில் வருகிற Nobodies பாடல் தொடர்பாக: கோத் (Goth) பாணிப் பாடல்கள் – இப் பெயர்ப்புப் போல ஒழுங்கு சம்பந்தப்பட்டது அல்ல; மதம் போன்ற ஒன்றையே உடைக்கிறளவு ஒழுங்கிற்கு எதிரான மொழி. எப்படிக் கறுப்பர்களது இசை ஆசிய இளைஞர்களை ஆகர்சிக்கிறதோ அதேபோல அனேகமாக anti-christ, Goth culture – எதிர்ப்பெண்ணம் உடைய வெள்ளை மாணவர்களுக்குரியது என்பதே எனது அபிப்பிராயமாக இருக்கிறது. இதில் ஆகர்சமான ஆசியப் பின்னணியை உடையவராய் இருக்கிறார். இணையத்தில் http://vampirefreaks.com/ என்ற தளத்தில் (மனித இரத்தத்தைக் குடிக்கிற வாம்பெயர் போன்றவை எனக்கு ஹலோவீன் காலங்களில் மட்டுமே மனதில் பதிபவை) தனது வெறுப்புகளை எழுதியுமிருக்கிறார்.
இது வெகுவாய்ப் பரிச்சயமற்ற இசை/மொழி என்பதால் அதற்குரிய தகர்க்கும் தன்மைக்கமைய மொழிபெயர்க்கத் தெரியவில்லை; வரிகள் இதனுடன் தொடர்புடையதாய் இருப்பதாய் மாத்திரம் இங்கே உபயோகிக்கப்படுகிறது.

Juvenile

April 22, 2006 Leave a comment

யுவனைலின் இந்த பாடல்லை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியூடாக அறிய முடிந்தது. கணணி பிரச்சினைகொடுப்பதால் பாடல் மட்டும் இங்கே.
கத்றீனாவிற்குப் பிந்தைய அமெரிக்க அரசின் கறுப்பு மக்கள் மீதான அலட்சியம், உரிய உதவி வழங்காமை என்பன குறித்த எதிர்ப்பாக ஒலிக்கிறது. தமது பெண்களின் காதலிகளின் உடலைப் பற்றியும் தமது செல்வந்த (bling bling) வாழ்க்கை பற்றியுமே பாடிக் கொண்டிருக்கிற/பாடுகிற குழுவைச் சேர்ந்த ஒரு வியாபார கருத்தோட்டமிக்க பாடகரிடமிருந்து எதிர்பாராத பாடல். இங்கே தரப்படுகிற (கத்ரீனா வில் தப்பியவர்கள் போதைப்பொருள் விற்றெனிலும் உங்களைப் பாத்துக் கொள்ளுங்கள் என்ற மாதிரி: “Drug-dealing”) ‘தீர்வு’க்கு அப்பால, தன்னோட மக்கள் பாதிக்கப்படுகையில் (பாடகர் பிறந்த இடம் நியூ ஓர்லின்ஸ்) தூண்டப்படுகிற மனிதம் முக்கியமானதாய்ப் படுகிறது.

Get Ya Hustle On

[Juvenile]
That’s right, it’s crunch time now fellas
No time to be cryin for momma now, it’s the movement
C’mon

To all my people on them corners I consider as dogs
I wish I could break a package down and send it to y’all
I know ya feelin me behind them penitentiary walls
Put me on the visit list and I’ll be in to see y’all
Talk to ‘em – your mayor ain’t your friend, he’s the enemy
Just to get your vote, a saint is what he pretend to be
Fuck him! Ah-listen to me, I got the remedy
Save your money up and find out who got ‘em for 10 a ki’
Bubble, if you don’t hustle don’t use your energy
Cause you gon’ be a cellmate or wind up as a memory
Yeah, and I could give a fuck if you kin to me
My life is up and down and side to side like a centipede

[Chorus]
Get ya hustle on, nigga get ya hustle on [4X]
We take the Pyrex and then we rock with it, roll with it
Take the Pyrex and then we rock with it, roll with it!
We take the Pyrex and then we rock with it, roll with it
Take the Pyrex and then we rock with it, roll with it!

[Juvenile]
The loamin hard sparkle like glass
Main bitch right behind me lookin sharp in the Jag
Security say you don’t know me so I talk to ‘em bad
If a nigga want somethin I got somethin for his ass
Choppers – I’m already knowin that it’s a G thang
Ever since they tried to drown a nigga on the {?}
Everybody need a check from FEMA
So he can go and sco’ him some co-ca-llina
Get money! And I ain’t gotta ball in the Beemer
Man I’m tryin to live, I lost it all in Katrina (damn)
And nobody cares what the police thank
Everybody fuckin with ki’s cause it’s a street thang

[Chorus]

[Juvenile]
Wodie! You really feelin your folks
Just them crackers behind them desk-es that ain’t hearin us though
We starvin! We livin like Haiti without no government
Niggaz killin niggaz and them bitches is lovin it
Fuck Fox News! I don’t listen to y’all ass
Couldn’t get a nigga off the roof with a star pass
Talkin – y’all comfortable right now to your own land
‘Til a nigga catch ya down bad, starvin and want cash
Get your mind right, nigga get your money up
You’re movin a little somethin, but you ain’t done enough
Fo’ shizzle – you know the boss gonna want a cut
Yeahhhhhh – or the boss gon’ haveta fuck you up

[Chorus – repeat 2X]

Immortal Technique இன் காதல் பாடல் ஒன்று

March 31, 2005 Leave a comment

உண்மையை Hip-hop வடிவில் கொணருகிறோம் என்கிற கோசத்துடன்
வெளிவருகிற Immortal Technique இன் சுயவரலாறு சுருக்கமாக, (வரப்போகிற மொழியைப் ‘பெயர்ப்பு’ பிடிக்காவிட்டால் இங்கு சென்று அசலை படித்துக்கொள்ளுங்கள்!) இணையத்தளத்திலிருந்து:
80களில் பேருவில் (Peru) உள்நாட்டுயுத்தம் வெடித்தபோது, அமெரிக்காவிற்கு கொண்டுவரப்படடவர் இமோட்டல் ரெக்னீக். மூன்றாமுலகத்தின் ஏழ்மையிலிருந்தும் நாட்டுப் பிரச்சனைகளிலிருந்தும் தப்பினாலும், இவர் வாழ வந்த நியூ யோர்க் நகரம் இன்னொருவிதமான பிரச்சினைக்குரியதாய் இருக்கிறது (குழு வன்முறை). இங்கு இளம் ரெக்னீக் ஹிப் ஹொப் கலாச்சாரத்தால் கவரப்படுகிறார். பள்ளி வகுப்புகளை கட் பண்ணிவிட்டு வன்முறையான நடத்தைகளிற்காக பலமுறை கைதுசெய்யப்படுவதில் முடிந்தாலும், உயர்பாடசாலை படிப்பு முடித்து மாகாணப் பல்கலைக்கழகத்தில் படிக்க ஏற்றுக்கொள்ளப்படுகிறார். துரதிர்ஸ்டவசமாக, நியூ யோர்க் நகரத்தில் சாதாரணமான விடயமான வன்முறைச் சூழல், பள்ளியில் அவரை பிற கறுப்பு சகோரர்களுடனோ …இனவாதமான மத்திய அமெரிக்காவின் பின்நோக்கான மக்கள் தொகையோடோ மேலும் வன்முறையான மோதல்களுக்கு இட்டுச்சென்றது.
… multiple assault charges இல் பிடிக்கப்பட்டு, சிறையிருப்பை தவிர்க்கப்படமுடியாததென உணர்ந்தபோது, தனது அதுவரையான வாழ்வின் வன்முறையான அனுபவங்கள் குறித்ததும், தாய்பூமிக்குத் தான் திரும்பிச்சென்றபோதுகளில் கண்ட அங்குள்ள போராட்டத்தையும் பற்றியதுமான தனது எண்ணங்களை எழுத ஆரம்பிக்கிறார். தனது பாட்டனாரிடமிருந்து வந்த ஆபிரிக்க பின்புலவேர்களையும் உள்வாங்கிக்கொள்கிறார். அதனூடாக இனவாதத்தின் மூலகத்தையும் அது குறித்த லற்றினோ கலாசாரத்தின் அறியாமையை/அலட்சியத்தையும்; -அது அடக்கப்படுகிற மக்களை பிரிப்பதூடாக அவர்களைப் பிளவுபடுத்திவைத்திருப்பதை (separating oppressed people and keeping them divided)- விளங்கிக்கொள்கிறார்.
…தீர்ப்பாய் 1 – 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, நகரத்திலிருந்து ஆறு மணி நேரங்கள் தொலைவேயான பகுதியில் வைக்கப்டுகிறார். அங்கே படித்தும், …, தனது எழுத்துக்களை ஒழுங்குபடுத்தியும் அவற்றை பாடல்களாய் உருவாக்கத் தொடங்குகிறார்.
parole இல் 1999 இல் வெளிவந்தவர் …… வேகமாக நிழல்உலகமெங்கும் அறியப்படுகிறார்.
…மக்களை தன் பாடல்களால் கட்டிப்போடசெய்யக்கூடிய, அவர்கள் மீண்டும் பார்க்க விரும்புகிற, ஒருவராய் தன்னை வளர்த்துக்கொள்கிறார். அப்போதுதான் (வன்முறை) மோதல்கள் எப்போதும் மோதல்கள் மட்டும்தான் எந்தவிதத்திலும் இசையை உருவாக்குவதிலுள்ள வெற்றியுடன் தொடர்புடையவையல்ல என்றுணர்கிறார். தனது ஆர்வத்தை தயாரிப்புத்துறையில் திருப்பியவர், சிறையில் எழுதிய சில பாடல்களில் திருத்தங்கள் செய்து, அதை ஒரு ஆல்பமாக்குவதில் முனைப்பாகிறார்.
…ஆனால் பேர்போன இசைநிறுவனங்கள் வெகுசனரீதியாக ‘நட்பார்த்தமான’ நல்ல பிம்பமுடைய ஒருவரையே வேண்டுகின்றன. அரசியல் கருத்துக்களால் நிறைந்த இவரது hardcore street style உம் மரியாதையின்மையும் கடுமையும் நிறைந்த இவரது பாணியும் அவர்களுக்கு அசௌகரியமாய் இருந்தது. ரெக்னீக் battle circuit இலிருந்து விலகி தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார்
…In the post 911 climate, as the music industry crumbled, Immortal Technique built on the truth with a hardcore brand of street politics.
இவரது இரு இசைத் தட்டுக்கள்: Revolutionary Vol.1 மற்றும் Revolutionary Vol.2.

பாடல்: You never know

இந்தப் பாடலை நான் எழுதுவதாகச்சொல்கிறபோது, அறையிலுள்ள வால் II, நீ தேர்ந்தெடுக்கிற பாடல், அவருடைய பாடல்களுக்குள்ளேயே ‘the most non-political song‘ எனுகிறான்.

சில மாதங்களுக்கு முன் இவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய பாடல் இது, அதுவும், ‘கடைசியில அழுகை வந்தாலும் வரும்’ ‘நீ அழுதாலும் அழுவாய்’ என்ற பலத்த முன்னறிவித்தல்களோடு!
இந்த பாடகன் நேசித்த ஒரு பெண்ணொருத்தியைப் பற்றினது…

[1]
She was on her way to becoming a college graduate
Wouldn’t even stop to talk to the average kid
The type of latina I’d sit and contemplate marriage with
Fuck the horse and carriage shit, her love was never for hire
Disciplined, intellectual beauty’s what I desire
Flyer than Salma Hayek or Jennifer Lopez

(அவள் ஒரு கல்லூரிப் பட்டதாரியாவதற்கான முயற்சியில் இருந்தாள்
ஒரு சராசரி பையனுடந்தானும் நின்று கதைத்தாள் இல்லை.
சேர்ந்திருந்து, திருமணம் செய்துகொள்வது பற்றி நான் யோசிக்கக்கூடிய வகை லற்றினோ இவள்தான்
…அவளுடைய காதல் ஒரு போதும் விலைக்கிருந்ததில்லை
ஒழுங்குமிகுந்த, புத்திஜீவித அழகிதான் நான் வேண்டுவது-
சல்மா ஹயேக் யெனிபர் லோபிளஸ் போன்றோரைவிடவும்)

Everyone told me, kickin’ it to her was hopeless
At first I just thought, she didn’t mess with broke kids
The thug niggaz always talking about, how they smoke kids
But the rich-sniff-coke kids got no play
“I’m not even interested” is what her body language would say
Everyone around the way, gave up trying to get in it
It didn’t matter how good your game was, she wasn’t with it

(எல்லோரும் சொன்னார்கள் அதை அவளை நோக்கி நகர்த்துவது அர்த்தமற்றதென
முதலில் நான் நினைத்தேன் அவள் ஏழைப் பையன்களுடன் மெனக்கெடுவதில்லை என
…”எனக்கு ஆர்வம் இல்லை” என்பதே அவள் தோரணையாய் இருக்கும்
எல்லோரும் ‘அதற்குள்’ செல்லும் தம் முயற்சிகளைக் கைவிட்டார்கள்
உங்கள் நாடகம் எவ்வளவு சிறப்பானதாய் இருந்தாலும், அவள் அதனுடன் இல்லை)

On the block, bitches was jealous, but wouldn’t admit it
Talk shit, and deny to everyone that they did it
‘Cause they regreted the long list of niggaz that they let hit it
And no one ever gave them shit except McDonald’s and did-dick
Smoking weed with thoughts of envy, whenever they lit it
She smoked intelligently and they bit it, always trying to copy
But when they tried to use her vocab, they sounded sloppy
She had a style, all her own, respectful and pure
I was sick in the head for her, and there wasn’t a cure

(குடியிருப்பில் எல்லா வேசைகளும் பொறாமையுற்றார்கள், ஆனால் அதை ஒத்துகொள்ளவில்லை
கண்டதையும் கதைத்தபடி, தாங்கள் ‘அதை’ செய்தவர்கள் என்பதை எல்லோருக்கும் மறுத்தபடி… ஏனெனில்
தாங்கள் ‘அடிக்க விட்ட’ கறுப்பர்களின் நீண்ட பட்டியலையிட்டு அவர்கள் விசனமுற்றார்கள்
ஒருதரும் அவர்களை சட்டை பண்ணியதில்லை மக்டோனால்ஸ்ஐயும் அதைச் செய்த ‘குறி’யையும் தவிர.
பொறாமை எண்ணங்களுடன் கஞ்சா புகைத்தபடி…
அவளை கொப்பி பண்ண முயன்றார்கள், அதவர்களுக்குப் பொருந்தவில்லை

அவளுக்கென்றொரு பாணி இருந்தது
சுயமானதும் மரியாதைக்குரியதும் தூய்மையானதுமாய்…
அவளை எண்ணி என் தலைக்குள் காய்ச்சல் அடித்தது
அதற்கொரு மருந்துமும் இல்லை)

[பின்னணிப் பெண் குரல்- Jean Grae]

Don’t you know that, time waits for no man
Not fate, it’s all planned
I’m blessed just to know you
I’ve loved and I’ve lost just to hold you all night
Can’t find, a reason why
God came, to you and I
If I had the chance again, I’d never let you go
Hold tight to your love, ’cause you never know

உனக்குத் தெரியாதா, காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை
விதியென்றில்லை; எல்லாம் திட்டமிடப்பட்டுவிட்டது
உன்னை தெரிந்துகொண்ட மட்டுமேனும் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்

எனக்காய் மறுபடி ஓர் வாய்ப்பிருக்குமானால்
உன்னைப் போக விடமாட்டேன்
உங்களுடைய காதலை இறுகப் பிடித்துக்கொளுங்கள் –
உங்களுக்கு ஒருபோதும் தெரியாது –பின் என்ன ஆகுமென்று

[2]
Her eyes are brown and beautiful, yet empty and sad
I used to talk to her occasionally, and she was glad
That I wasn’t just another nigga trying to get in it
So every now and then we’d stop and talk for a minute
I didn’t have a gimmick so the minutes turned to hours
On her birthday, I gave her a poem with flowers
Then I took her out to dinner after her cousin’s baby shower
We talked about, power to the people and such
We spent more time together but it was never enough

(அவளுடைய கண்கள் மண் நிறமானைவை- அழகானவை
வெறுமை மிக்கதும் துயரம் நிறைந்ததுங் கூட
இருந் திருந் திற்றே அவளுடன் கதைத்திருக்கிறேன்
‘அதனுள்’ பூர விரும்புற
இன்னொரு கறுப்பன் நான் அல்ல
என்பதில் அவளும் நிம்மதியாய் இருந்தாள்
எப்பவாவது நேரங்கிடைக்கையில் அங்கிங்கு நின்று சில நிமிடங்கள் பேசிக் கொள்வோம்
என்னிடம் தந்திரம் இல்லை- ஆகவே அந்த சில நிமிடங்கள் மணித்தியாலங்களாயின
அவளது பிறந்தநாளிறகாய் பூக்களுடன் கவிதை கொடுத்தேன்
நாம் ‘மக்களுக்கான அதிகாரம்’ போன்றன பற்றி பேசினோம்
நிறைய நேரத்தை ஒன்றாக செலவிட்டோம் ஆனால்
ஒருபோதும் அது போதுமாய் இருந்ததில்லை)

I never tried to sneak a touch, or even cop a feel
I was too interested, in keeping it real
Perfectly honest and complete, she would always call me “carino,”
And never Technique, bought me a new book to read every 2 or 3 weeks
Forever changing the expression of my thoughts when I speak

(மறைவான தொடுகைக்கோ களவாகத் தொட்டுணரவே நான் ஒருபோதும் முயன்றதில்லை
அபாரமான நேர்மையும், முழுமையும்ஆய்
அதை இயல்பாய் வைத்திருக்க மிகவும் விரும்பினேன்
அவள் எப்போதும் என்னை “கறீனோ” என அழைத்தாள்
ரெக்னீக் என்று அல்ல.
இரண்டெல்லது மூன்று கிழமைக்கொருக்கால்
நான் படிக்க
புதிய புத்தக்தை வாங்கி வந்தாள்,
என்றென்றைக்குமாய், பேச்சில்
என் எண்ணங்களின் வெளிப்பாட்டை மாற்றியபடிக்கு)

It was because of her, I even deaded all of my freaks
She convinced me, to stop hangin’ out on the streets
To stop robbin’ and stealin’, from people like you
Instead I took her out to the Apollo and the Bronxu
We sailed in Barrio (?) and the Metropolitan too
Got to the point when I was either with her or my crew
So I decided one day, to tell her my feelings was true
I couldn’t live without her so I told her, facing my fears
But honey’s only response, was a face full of tears
She could only sob hysterically, holding me tight
I tried to speak, but she wouldn’t stop until I left sight
I felt like a moth who got himself too close to the light
Except I didn’t burn, I turned cold after that night

…அவள் என்னை தெருவில் திரிவதிலிருந்து தடுத்தும்
உங்கள் போன்ற ஆட்களிடமிருந்து திருடுவதையும் நிறுத்தச் செய்தாள்

அவளுடன் அல்லது என் நண்பர்களுடன் இருப்பேன்
என்ற நிலையானது, ஆகவே
ஒருநாள் என் உணர்வுகளை சொல்ல முடிவெடுத்தேன்
அவளில்லாமல் என்னால் வாழ முடியவில்லை
என் பயங்களை முகங்கொடுத்தவாறே
அவளிடம் சொன்னேன் அதை – ஆனால்
அவளுடைய ஒரே பதில் கண்ணீராக இருந்தது
என்னை இறுக்கியபடி
அவளால் பயங்கரமாக விம்மத்தான் முடிந்தது,
நான் பேச முயன்றேன், ஆனால் நான் பார்வையிலிருந்து மறைகிறவரையில் அவள் அழுகையை நிறுத்தவேயில்லை
விளக்கிற்கு மிக அருகே போய்விட்ட விட்டிலைப் போல உணர்ந்தேன் – நான் எரியவில்லை என்பது தவிர.
அன்றைய இரவின் பின் நான் கடினமாகவிட்டேன்

[பின்னணிக் குரல்]

[3]
I went on with my life, college and my career
Ended up locked up like an animal for a year
Where the C.O.’s talk to you like they were the overseer
Then I got sent to the hole, when my exit was near
At night in my cell, I’d close my eyes and I’d see her
Hold her close in my dreams, but when I woke she disappeared
Just an empty cell until the state gave me parole in the summer

என் வாழ்க்கையைத் தொடர்ந்தேன்
கல்வி வேலை என.
ஒரு வருடம் ஒரு மிருகத்தைப்போல பூட்டப்படுவதில் முடிந்திருந்தேன்

என் சிறையில் இரவில் என் விழிகளை மூடுகையில் அவளைக் காணுவேன்
கனாக்களில் மிகவும் நெருக்கமாக அவளைப் பிடித்திருப்பேன் – ஆனால்
நான் விழிக்கிறபோது அவள் போயிருப்பாள்
ஆக ஒரு வெறுமையான சிறை, அந்தக் கோடையில்
மாகாணம் எனக்கு பறோல் வழங்கும்வரையில்

came back, in tact and on track
But the fact of the matter, is I still felt cold
Even after my mother, hugged me, cryin’ at home
My real niggaz would catch me thinkin’, out of my zone
Fuckin’ lots of different women, but I still felt alone
Relatively well-known around the New York underground
But I kept thinking of her and how we used to be down
The sound of her voice, and the beautiful smell of her hair

மீளத்.. தொடர்ந்தேன்
ஆனால் உண்மையில் இன்னும் நான் கடினமாய் உணர்ந்தேன்
அம்மா என்னை அணைத்துக்கொண்டு வீட்டில் அழத பிற்பாடுங் கூட

வேறு வேறு பெண்களை ஓ***படி, நான் அப்போதும் தனிமையை உணர்ந்தேன்
நியூ யோர்க் நகர நிழல் உலகில் நன்கு அறியப்பட்டவனாக

தொடர்ந்து நினைத்துக்கொண்டிருந்தேன் அவளை
அவளது குரலில் ஒலி, அவளது முடியின் அழகான வாசனை

Though gone physically, somehow it was still there
I had to do something, because the shit was too much to bear
So I went and visited the building where she used to live
The world looks a lot different after you do a bid
The way your life done changed
While primitive minds (are) still stuck in the same game
Like her cousin who was on the corner slangin’ cocaine
Stepped in the lobby and tapped the button next to her last name
Her mom buzzed me up and hugged me up, like a mother oughta
But her facial expression changed, when I asked about her daughter

நேரே இல்லாமல் இருந்தாலும், எப்படியோ இன்னும் இருந்தது
என்னால் தாங்கமுடியாதிருந்தது
ஏதாவது செய்யத் தோன்றிற்று
அவள் வாழ்ந்த இடத்திற்கு நான் சென்றேன்

அவளைய தாய் என்னை அணைத்துக்கொண்டாள்,
ஆனால் அவள் முகம் மாறிப்போனது, மகளைப் பற்றிக் கேட்டபோது

[பின்னணிக் குரல்]

[4]
She told me that there was a note for me, that was left behind
She had left it there waiting, for such a long time
I was inclined to ask about it but she brought it up first
I saw a tear swelling up in her eye, and then she cursed
She told me where the letter was and I started thinking the worst
Reversed my position, stepped over and opened the door
And sure enough there was an envelope with my name on the floor
“Nobody loves you more than me carino” is what the letter said

அவர் சொன்னார், எனக்காய் ஒரு கடிதக்குறிப்பு இருக்கிறது என்று,
அது விடப்பட்டிருக்கிறது,
அவர் அதை மிக நீண்டகாலம் காத்திருக்க விட்டிருக்கிறார்,
அதைப் பற்றி கேட்க விரும்பினேன், ஆனால் அதைத் சொன்னபோது கண்ணீர் பொங்கியது,

“என்னைப்போல யாரும் உன்னை விரும்பவில்லை கறீனோ” – இதுதான் அந்தக் கடிதம் சொன்னது

இந்தக் கடிதத்தை நீ படிக்கிறபோது நான் இறந்து போயிருப்பேன்

“By the time you get to read this, I’ll probably be dead
But when you left in ’97 a part of me went to Heaven
I thank God at least I got to know what love really was
But it hurt me, to see what true love really does
‘Cause even though we never made love, you were all that there was
It was because I loved you so much that I had to make you leave
You made me doubt the way I thought, you made me want to believe
And then I slipped up, and I let you get close to me
It was hard to not be openly when people spoke to me
This was not the way I thought my life was supposed to be
Baby don’t you see, I had a blood transfusion that left me with HIV
Hoped the end exists for me since late in 1993
I died a virgin, I wish I could’ve given myself to you
I cried in the hospital because there was no one else but you
Promise that you’ll meet me in paradise inevitably
No matter what, I’ll keep your love forever with me”

What happened for the rest of the day is still a blur
But I remember wishing that I was dead, instead of her
She was buried on August 3rd
The story ends without a sequel
And now you know why Technique, don’t fucking fall in love with people

மீதி நாள் என்ன நடந்ததென்பது இன்னும் தெளிவில்லை
அனால் அவளுக்குப் பதில் நான் இறந்திருக்காம் என நினைத்தது ஞாபகம்
ஆவணி 3 இல் அவள் புதைக்கப்பட்டாள்
ஒரு தொடர்ச்சியற்று கதை முடிகிறது
இப்ப உங்களுக்குத் தெரியும் ஏன் நான் ஓ**காதலில் விழுவதில்லை என!

Hold the person that you love closely if they’re next to you
The one you love, not the person that’ll simply have sex with you
Appreciate them to the fullest extent, and then beyond
‘Cause you never really know what you got, until it’s gone

உங்கள் நேசத்துக்குரியவர் அருகில் இருந்தால்
இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்
நீங்கள் நேசிப்பவர் உங்களுடன் உறவுகொள்கிறவராய்
இருக்க வேண்டியதில்லை
அவர்களை முடியுமான வரைக்கும் உணருங்கள், அதற்கும் மேலே..
ஏனெனில், ஒன்று போகுமட்டும், அது உங்களிடம் இருந்தது என்பதை
அறிய மாட்டீர்கள்..
0

பல இந்தியப் படங்களில் கதாநாய(கி)கனுக்கு திடீரென கான்சரோ ரியூமரோ வந்து பழக்கப்பட்டதால் அழுகை வரவில்லைத்தான்; லேசான வருத்தமும் செய்தியும் தந்த வரிகள் பிடித்திருந்தன. இந்தப்பாடலிற் போன்றே, துன்பியலான முடிவுகள் (tragic ending) இவரது பிற பாடல்களிலும் காணக்கூடியதாய் இருக்கிறது, அது இவர்பால் ஈர்க்கும் ஒரு அம்சமாய் இருக்கிறது.

அதில்லையென்றால், இன்னொரு காதல் பாடலாகவே இதுவும் இருந்திருக்கும். பெண் உடல் பற்றி இது எழுப்பாத ஊடகசார் எதிர்பார்ப்பும், பாடல் இடைஇடையே bitch, hot, shake it போன்ற -பாலுறவிற்கான சந்தை உடலைமட்டுமே மையங்கொண்ட- சொற்கள் வராமையும், அவற்றையே மூலதனமாகக்கொண்ட BET பாடல்களிடமிருந்து இதை வேறுபடுத்துகிறது.

இந்த வேறுபாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி பேச முன், கனேடியச் சூழலை முன்வைத்து ஒன்று சொல்லவேண்டும். ஒன்ராறியோவில் கறுப்பர் மட்டும் படிக்கிற பாடசாலைகளை (அவர்களை கல்வியில் மேம்படுத்தும் பொருட்டு) உருவாக்குவது தொடர்பான விவாதம் நடந்தபோது, கனேடியப் பெரும் பத்திரிகை ஒன்றில் கறுத்தப் பத்திரிகையாளர் கல்வி குறித்த கறுப்பர்களின் attitude (போக்கு?) மாறும்வரை அத்தகைய பள்ளிகளால் ஒரு பிரஜோயனமும் வராதென்பதுமாதிரி எழுதியிருந்தார். கறுப்பர்கள்சார் பிரச்சினையொன்றைப்பற்றி ஒரு கறுப்பரே சொல்வதால் அது சரியானதாய் இருக்கவேண்டுமென்பதில்லை ஆனால் இந்த ‘போக்கு’ விவாதிப்பதற்கு சிக்கலானது, அதேநேரம் தவிர்க்கவியலாதது.

கறுப்பர்களின் வெகுசன ஆதிக்கம் மிக அதிகம். உயர்பாடசாலை முழுவதும் மாணவர்கள் பின்தொடருகிற பாஷன் உடைகள், பாடல்கள் கறுப்பர்களுடையதுதான். அதாவது BET போன்ற தொலைக்காட்சி நிறுவனம் தருகிற கறுப்புப் பாடகர்கள் ஆன 50Cent வகையறாக்களின்மீதான ஈர்ப்புத்தான். பெண்களை அப்பட்டமாக பாலியல் கருவிகளாய் மட்டுமே காட்சிப்படுத்திற அனேக பாடல் வரிகள் மாணவ, மாணவிகளால் ‘ஏற்க’ப்படுகின்றன, ஒரு இயல்பாக. ஐரோப்பாவில் இருக்கிற ஒரு தமிழ் சிறுவன் 50Cent இன் பாடல்களை விரும்பிக் கேட்பதாக தோழி சொன்னபோது மிகவும் வருத்தமாக இருந்தது. அமெரிக்க வெகுசன கலாசாரத்திற்கெதிராக ஐரோப்பாவாலையே ஈடுகொடுக்க முடியாதென்பதை ஜீரணிக்க ஏனோ கஸ்ரமகா இருக்கிறது. உலகமயமாதல் என்பது, இறுதியில், அமெரிக்கமயமாதல் என்பதேதான் போலும்.

உலகெங்கும் கறுப்பர்கள் களியாட்டவெளி மட்டும் வெளிச்சப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இமோட்டல் ரெக்னீக் கறுப்பரது பின்னணி கொண்ட, அதுவும் தொலைக்காட்சிகளின் காதல்-காமகளியாட்டங்களிற்குப் பேர்போனதாய் காட்டப்படுகிற லற்றினோ கலாச்சாரத்தை உடைய ஒரு தென்அமெரிக்கர்.
அவரது இந்தப்பாடலில், கறுப்பரில் அறிவார்த்தமான ஆண்களையே பெரிதுபடுத்தாத மேற்கின் உயர்பாடசாலை பொதுப்போக்கில், அறிவார்த்தமான ஒரு கறுப்புப் பெண், அவள் கற்றுத் தந்தவை என அவளிடமிருந்து உடலிற்கு அப்பாலும் (உடலுறவுகொள்ளாமலேயே) கற்கலை ஒரு ஆண் ஏற்றுக்கொள்வதாக வருகிறது.
பொதுவான வெகுஜனஊடகங்களின் கொண்டாடப்படுகிற நபர்களாய் (Celebrities) ஆகாமல் சுதந்திரமான பாடகர்களால் வெளியிடப்படும் இவை அவ் ஊடக இயந்திரங்களிற்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவையாய் இருக்கின்றன. அந்த வகையில் ‘கொண்டாட்டம்’ ‘களிப்பு’ இவை இயல்பென வெகுசனர்களால் புனையப்பட்ட லட்டினோ ஒருவரிடமிருந்து அவர்களது கனவுப்பெண்களான சல்மா ஹயக், யே.லோ போன்ற பெண்களைத் தாண்டி, உடல் பற்றிய சித்தரிப்பே அற்று –முகத்தில் மையங்கொண்டு- ஒருத்தியைப் புனைந்திருப்பது முக்கியமானது. எனினும், இந்த பாடகனுடன் சில புள்ளியில் உடன்பட முடியவில்லை.
உதாரணமாக,

குடியிருப்பில் எல்லா வேசைகளும் பொறாமையுற்றார்கள், ஆனால் அதை ஒத்துகொள்ளவில்லை
கண்டதையும் கதைத்தபடி, தாங்கள் ‘அதை’ செய்தவர்கள் என்பதை எல்லோருக்கும் மறுத்தபடி… ஏனெனில்
தாங்கள் ‘அடிக்க விட்ட’ கறுப்பர்களின் நீண்ட பட்டியலையிட்டு அவர்கள் விசனமுற்றார்கள்
ஒருதரும் அவர்களை சட்டை பண்ணியதில்லை மக்டோனால்ஸ்ஜயும் அதைச் செய்த ‘குறி’யையும் தவிர

போன்ற வரிகள், ‘இத்தகைய’ ‘தூய’ ‘அற்புதமான’ பெண்ணின்மீது பொறாமைகொண்ட இன்னொரு சாராரைப் பற்றியது. தனக்குப் பிடித்தமான ஒரு பெண்ணை பற்றிய புகழ்பாடல்கூட இன்னொரு பெண்ணை/பெண்களை வைத்து அவர்களது சலனங்களை ‘ஒழுங்கமின்மைகளை’ முன்வைத்துத்தான் வைக்கமுடிகிறது. இதில் இவர்கள் ‘வேசிகள்’ என்று குறிப்பிடப்பட்டாலும், இவர்கள் ‘பாலியல்தொழிலாளிகள்’ என்கிற அர்த்தத்தில் இதில் உபயோகிக்கப்படவில்லை. அவர்கள் நிறையப்பேருடன் உறவுகொள்வது சார்ந்தே இது வைக்கப்பட்டிருக்கிறது. ‘உனது பெண்ணை’ ‘அவள் தூய்மையைப்’ பறைசாற்ற, பிற பெண்டிரது பொறாமையின்றி, அவர்கள் யார் யாருக்கு தமது குறியை விட்டார்கள் என்பது பற்றி எல்லாம் உன்னால் கூறாமல் இருக்க முடிவதில்லை. ஆனால் அவள் அல்லாதபோது நீ மட்டும் பல பெண்களைக் கூடியிருப்பாய்/உனது குறியை யார் யாருக்கோ உள்விட்டிருப்பாய், அவைகள்,

“fuckin’ lots of different women, but I still felt alone”

என்று பாடுவதோடு போய்விடுகின்றன, அப்பால் பொருட்டில்லை- எதனால்?!
இவை விசனம் தர்ற அம்சங்கள்.

‘நீயும் அழுவாய்’ என்றெல்லாம் முன்எச்சரிக்கையுடன் கேட்க விட்டவர்களிடம், “என்ன உன்னுடைய பாடகன் தான் நிறைய பேருடன் நட்பாக (?!) இருந்துகொண்டு, அப்படி இருக்கிற மற்றப் பெண்களை bitch என்று name call பண்றார், இது சரியா?” என்றொரு கேள்வியை பகிர்ந்தபோது, அவர்கள் தாங்கள்தான் எழுதியதுபோன்ற வெட்கத்துடன் ‘உண்மைதான்’ என ஒத்துக்கொண்டு, அதை தவிர்த்தால், பாடல் நல்லம்தானே பிடித்திருக்கிறதா எனக் கேட்டார்கள்.
உடலையே, அதன்மீதான மயக்கங்களிலும் வீழ்த்தலிலுமே கழிந்துகொள்கிற எதிர்கொள்கிற மனிதக்‘காதல்’உறவுகளுள்,

“The one you love, not the person that’ll simply have sex with you
Appreciate them to the fullest extent”

போன்ற வரிகளும் மொத்தப் பாடலூடாக வருகிற உயிர்த்துடிப்பான ஒரு பெண்ணின் முகமும் நேசிப்பும் பிடித்திருக்கிறது. தவிர, BET பார்த்து வளர்கிறவர்களான இந்த மாணவர்கள் மாற்றாய் இந்த பாடல்களையும் கேட்பது, இருவகைப்பட்ட பார்வைகளிற்கு இடங்கொடுக்கிறது. அந்தமாதிரியான சூழலில் இளமனதில் இது ஏற்படுத்துகிற உடைப்பு/மாற்றெண்ணம் வளரப்போகிற அவர்களது பெண்கள் பற்றிய புரிதலுக்கு அவசியமானது.

இவரது ‘அரசியல்’ பாடல்கள் பற்றிப் பிறிதொரு சமயம்.

எவளாவது ஒருத்…’தீ’ கிடைப்பாளா? -5-

October 10, 2004 5 comments

காத்திருப்புசார் பாடல்கள்

என் தமிழ் ஆசிரியர் மிகச் சுவாரசியமாகத் படிப்பிப்பார். இளைஞர்களுக்குப் பிடிக்கும்விதமாக இடையிடையே ‘தமிழ்க் கவிஞர்களது’ கவிதைகளையும் எடுத்துச் சுவைப் படச் சொல்லுவார். “…பொறுத்துப் பொறுத்தப் பார்த்தார் கவிஞன். ஒரு பெண்ணும் கிடைக்கேல்ல. காதலிக்க முடியேல்ல. கடைசியில பொறுமையிழந்துபோய்க் கேட்கிறான்: ‘…(எனக்கு) எவளாவது ஒருத்…தீ கிடைப்பாளா’ எண்டு. அதாவது இதொரு குறியீட்டுக் கவிதைபோல… ‘தீ’ என்றது இளைஞன்ர மோகத்…தீயைக் காட்டுது”இவர் சொல்லி முடிக்கையில் மாணவர் முகங்களில் சிரிப்பு. நவீன இலக்கியம், நவீன கவிஞர்கள் என அறிமுகமுடைய எனக்கு அன்று அந்தக் கவிஞரின் பெயரும் பதியவில்லை, அது ‘கவிதை’ என்கிற மனப்பதிவும் இல்லை; எனினும் அடிக்கடி அந்த வரிகள் மட்டும் வந்து சிறு புன்னகை தரும்.

எல்லோருக்கும் அப்படி ஒரு கணம் இருந்திற்று இருந்திற்று வாறதுதான். ஆண்களுக்கு எவளாவது ஒருத்..தீ என்றால், பெண்களுக்கும் ‘எவனாவது ஒருத்..தன்’ படிக்கும் காலத்தில், இளம் வயதில் (அதன் பின்புங்கூட தனிமையில் இருப்பவர்களுக்கு) துணை தேடலும் ஏக்கமும் வாழ்வில் ஒரு பகுதிகள்தானே…

அந்தவகையில் ஏராளம் பாடல்கள் அவரவர் மொழிகளில் எல்லோருக்குமே அவர்களது ‘காலங்களுக்குரிய’ பாடல்களாக இருக்கும். அதனாற்தானோ என்னமோ எந்தக் காலத்துப் பாடலென்றாலும் அதில் இலகுவாய் லயிக்கவும் உருகவும் எளிதாய் முடிகிறது. “இந்த மாளிகை வசந்தமாளிகை” அல்லது “ரோஜா மலரே! ராஜகுமாரி!” அல்லது “காலங்களில் அவள் வசந்தம்” போன்று அழகான வரிகளையுடைய இனிய குரலையுடைய பாடல்கள் அந்தக் கவிதையைப்போலவே மனதுக்குள் மகிழ்வைக் கொண்டு வரும்.

X எப்வ்.எம் இல் யாரும் தமக்குரிய பாடல்களை கெசற்றில் தள்ளி விடாதவரை… அந்தப் பாடல்கள் punk, rock n’ roll, reggae, r & b இதில் எதுவோ போய்க் கொண்டிருக்கும். அதிற் போகிற பாடல்கள் சந்தர்ப்பங்களுக்கேற்ப மனதை உருக்கிவிடும். பிறகு பார்த்தால் சாதாரணமானவையாய்க்கூடப் படும். நினைத்தபடியிருந்த வரிகள் வேறாக (இரண்டாவது மொழியல்லவா?), எனினும் உணர்வு கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். பாடியவர்களும் தொலைக்காட்சியில் பார்த்தபோது வெறுத்த, மனதுக்கு உவப்பளிக்காத பாடகர்களாய் இருப்பார்கள். எனினும் அந்தக் கணத்தில் பாடல் உருவாக்கிய மனஎழுச்சி மறுக்கவியலாது உட்தங்கியிருக்கும்.

ஒருமுறை வேலையால் வருகையில், மிகவும் அலுப்பான மனோநிலையில், கேட்ட ஒரு பாடல் ”Livin’ my life in a slow hell/ Different girl every night at the hotel /I ain’t seen the sun shine in 3 damn days” என்று ஆரம்பிக்கும். இதைத் தமிழ்ப்படுத்தினால்,

‘எனது வாழ்க்கையை மெதுவான ஒரு நரகத்தில் வாழ்கிறேன்,

ஒவ்வொருநாளைக்கு ஒரு பெண் ஹோட்டல் அறைகளில் –

சூரியவெளிச்சத்தை மூன்று கொடிய நாட்களாய்க் காணவேயில்லை’

இப்படிச் செல்லும். விடியலை முழுவதும் தொழிற்சாலை வேலையில் கடத்திவிட்டு, வீடு வருகையிலும், எனது தமிழ் ஆசிரியரின் “எவளாவது ஓருத்.தீ கிடைப்பாளா” கணங்களிலும் இத்தகைய பாடல் பிடிப்பதொன்றும் பெரிய ஆச்சரியமல்லத்தான். அதிலும் 3 damn days என்ற வரியை அவன் பாடுகிற விதமும் ஏக்கமும் துயரமும் தருவதாய் இருக்கும். அந்த 3 சபிக்கப்பட்ட நாட்களே வாழ்நாள் பூரா பரவியுள்ளதோ என்றெல்லாம் மனம் கிளர்வுறும். அப்புறம் அந்த ஒலிபரப்பாளினி பாடியவர் Kid Rock ஆல்பம் Cocky எனவும் கொடுமையாய் இருந்தது அது. முன்பொருமுறை www.wsws.org இணையத் தளத்தில் Kid Rock பற்றி வாசித்ததில் மனதில் பதிந்த ஒரே ஒரு வர்ணணை: Untalented artist. அது தவிர, பத்திரிகைகள் ஊடாக, எனக்குத் தெரிந்த பிற விடயங்கள்: பிரபல நீலப் பட நடிகை பமீலா ஆன்டர்ஸனின் முன்னாள் காதலன். அது தனிப்பட்ட விடயம், ஆனால் போயும் போயும் ஒரு கேவலங்கெட்ட பாடகனினுடைய பாடலா மனதைக் கவரோணும்? அதுவும் ஒரு புத்திஜீவியாய் உருவாகிக்கொண்டிருக்கிற பெட்டைக்கு (அது நான்தான்!)? வீடு வந்து அந்தப் பாடல் வரிகளை யாஹீ வில் போட்டு தேடலோ தேடல். அவ் வரிகள் நினைவு வந்தாலும், கிட் றொக் கின் பெயர் தெரிந்தாலும், அவனுடைய எல்லா ஆல்பங்களும் வந்து தொலைக்க எதிலென்று குறிப்பிட்ட -அடிமுடி தெரியாப் பாடலைத்- தேடுவது? அந்தப் பாடலை அவனுடன் கூட ஒரு பெண்ணும் பாடியிருந்தாள். ஏனோ அந்தப் பெண் Dido என்று எனக்கு விளங்கியிருந்தது. டீடோ Eminem உடைய பாடல்களெல்லாம் பாடியுள்ளார், ஆகவே அவர்தான் என நினைத்தேன். Dido and Kid rock song என அடித்தேன்; அடித்தேன் விதவிதமாய், யாஹீ பதில் தருவதாய் இல்லை. பிறகுதான் பார்த்தேன் கிட் றொக் உடன் Sherly Crow என ஒரு லிங்க். அமத்தினால் கிட் றொக்கோடு கூடப் பாடியது எனக்குப் பிடித்தமான இன்னொரு பாடகி.

ஒரு வழியாகப் பாடல் வரிகளை அடைந்தேன்:[Kid Rock]
Livin' my life in a slow hell 
Different girl every night at the hotel 
I ain't seen the sun shine in 3 damn days 
Been fuelin' up on cocaine and whisky 
Wish I had a good girl to miss me 
Lord I wonder if I'll ever change my ways 
I put your picture away 
Sat down and cried today
I can't look at you while I'm lyin' next to her 
I put your picture away, sat down and cried today
I can't look at you, while I'm lyin next to her
"எனது வாழ்க்கையை மெதுவான ஒரு நரகத்தில் வாழ்கிறேன், 

ஒவ்வொரு நாளைக்கு ஒரு பெண் ஹோட்டல் அறைகளில்

சூரியவெளிச்சத்தை மூன்று கொடிய நாட்களாய்க் காணவேயில்லை

கொகெயினிலும் விஸ்கியிலும் சுதிகூடியபடி...

எனக்காக ஒரு நல்ல பெண் இருந்தால் நல்லம் என்று எண்ணியபடி...

கடவுளே 

என் பழக்கங்களை நான் மாற்றுவேனா 

உன் படத்தை துாரே வைத்தேன்

உட்கார்ந்திருந்து அழுதேன் இன்று

அவளுக்கருகில் படுத்திருக்கும்போது உன்முகத்தை என்னால் பார்க்க முடியாது

உன் படத்தை துாரே வைத்தேன்

உட்கார்ந்திருந்து அழுதேன் இன்று

அவளுக்கருகில் படுத்திருக்கும்போது உன்முகத்தை என்னால் பார்க்க முடியாது..."

என்று கிட் றொக் பாடி முடிய,

சேர்ள் குறோ பாடுவா:I called you last night in the hotel

Everyone knows but they wont tell

But their half hearted smiles tell me

Somethin' just ain't right

I been waitin' on you for a long time

Fuelin' up on heartaches and cheap wine

I ain't heard from you in 3 damn nights

I put your picture away

I wonder where you been

I can't look at you while I'm lyin' next to him

I put your picture away

I wonder where you been

I can't look at you while I'm lyin' next to him


“நேற்றிரவு உனக்கு அழைத்தேன் – உன் ஹோட்டல் அறைக்கு

எல்லோரும் அறிவார்கள் ஆனால் யாரும் சொல்லார்கள்

ஆனால் அவர்களது அரைமனப் புன்னகை எனக்கு எல்லாவற்றையும் சொல்கிறது

ஏதோ சரி இல்லை!

உனக்காக நான் நீண்ட நேரம் காத்திருக்கிறேன்

இதயவலிகளாலும் மலிந்த வைன்னாலும் சுதிகூடியபடி…

மூன்று கடும் நாட்களாக உன்னிடமிருந்து செய்தியில்லை

உன் படத்தை துரே வைத்தேன்

நீ எங்கிருக்கிறாய் என எண்ணினேன்

உன் முகத்தை என்னால் பார்க்க முடியாது அவனருகில் படுத்திருக்கையில்..”

கேட்கும்போது இருந்த தீவிரம் பிறகு குறைந்தாலும், அந்த இரண்டு குரல்களும் மாறி மாறி பாடியபோது எழுந்த உணர்வெழுச்சி குறைவில்லை. அதே சமயம், அதென்ன அவனது வரிகளில் மட்டும் “நல்ல பெண்” என்கிற வரி, அதன் உள்ளர்த்தம் என்றெல்லாம் எதிர்வினையாக அறிவுசார் கேள்விகள் எழவும் செய்யும்.

சமீபத்தில் நான் கேட்ட ஒரு பாடலும் அது தந்த அனுவமும்தான் இதை பகிரவே தூண்டியது. X-FM இல் கேட்ட பாடல்:

EVERY BREATH YOU TAKE

Every breath you take

Every move you make

Every bond you break

Every step you take

I’ll be watching you

Every single day

Every word you say

Every game you play

Every night you stay

I’ll be watching you

O can’t you see

You belong to me

How my poor heart aches with every step you take

Every move you make

Every vow you break

Every smile you fake

Every claim you stake

I’ll be watching you

Since you’ve gone I been lost without a trace

I dream at night I can only see your face

I look around but it’s you I can’t replace

I keep crying baby please

Every move you make

Every vow you break

Every smile you fake

Every claim you stake

I’ll be watching you

(by: The Police)

இது யாஹீவில் தேடி எடுத்த வரிகள். வந்து அடித்துப் பார்த்தால் அது ஸ்ரிங் இனது என்றதும் சிறிது ஏமாற்றமாக இருந்தது. அது ஒரு புதுப்பாடலாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன்.அந்தப் பாடல் ஒரு classic என்று போட்டிருந்தார்கள். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். இந்தப் பாடலிடை வருகிற வரிகள்-

O can’t you see

You belong to me

How my poor heart aches with every step you take

ஓ… உனக்குத் தெரியவில்லையாநீ எனக்கு ரியவள்

நீ எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் என் இதயம் நோகிறது

பாப்லோ நெருடாவின் கவிதையொன்று “நீ என்னை மறந்தால்” என்று… அதில் இப்படி ஒரு அனுபவம் வரும்: ‘அன்புக்குரியவளே! சிறிது சிறிதாக, நீ என்னை மறக்கநேரின் நானும் உன்னை மறந்துபோயிருப்பேன் ஆனால் நீ என்னை தினமும் தினமும் நினைக்கிறாயெனில்…நானும்… உனைவிட அதிகமாக, உன்னைவிடத் தீவிரமாக உன்னை நினைக்கிறேன்’

அதே அனுபவத்தை அந்த ‘பொலிஸ்காரர்களின்’ (The Police) ஆல்பத்தில் பெறக்கூடியதாக இருந்தது. ஸ்ரிங் தனியே பாடியதைவிட 1980 வரை The Police என்கிற ஒரு band ஆக இருந்தபோது பாடிய இப் பாடலில் இக் குறிப்பிட்ட வரிகள் உயிர்ப்பாக இருக்கிறது.

மற்றப்படி, அறிவுபூர்வமாகப் பார்த்தால் இந்தப் பாடலகள், இந்தக் கவிதைகள் எல்லாமே

ஓரு உறவில் இருந்து பிரிந்த பிற்பாடு அதைப் பாடல்களால் ,கவிதைகளால் கிளறுவானேன் (‘நான் இன்னும் இருக்கிறேன்’ என குரல் விடுவானேன்?) எனக் கேட்கத்தான் வைக்கிறது. பாப்லோ நெருடாவும் இன்ன பிற கவிஞர்களும் இந்தப் பாடகர்களும் இயல்பில் யதார்த்தத்தில் அதைத்தான் செய்த(வ)ார்கள். ஆனால் கவிதையிலோ (ஒருத்தியுடன்) மிகமிகக் காதல்வசப்பட்ட ஒருவராய் ஒரு பிம்பம் அவரை/அவர்களையிட்டு உருவாகிறது. நியத்தில் இந்தப் பாடல்கள், அவர்களுடன் சம்மந்தப்பட்ட, பெண்களை -தம் வாழ்க்கையில் தொடர்ந்து செல்ல முடியாதவாறு- மீண்டும் மீண்டும் அவர்களை நாடச் செய்திருக்கும்! எம்மைக் குறிப்பிட்ட அளவுக்குத்தான் இவை ஆதிக்கம் செய்கின்றன. அந்த குறிப்பிட்ட அளவில், வாழ்வில் ஒரு பங்காக, தெருவில், திரையில், இசை நிகழ்ச்சிகளில் பாப்லோ நெருடாவின் கவிதை தந்த அனுபவத்தை தரத் தயாராகின்றன.

0

Categories: இசை