சீதனம்: ஏன் தவறு?

நிமலின் “சீதனம்: ஏன் தவறு இல்லை” பதிவு குறித்த எனது கருத்து:

நிமல்:

உங்கட இந்தப் பதிவு தொடர்பா ஒரு விசயத்த சொல்ல முடியும்.

சமபாலுறவாளர்கள் தாம் திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்காக நிறைய நாடுகளில் போராடுகிறார்கள் (கனடாவில் அமெரிக்காவில் சில இடங்களில் அந்த உரிமை உண்டு). இது குறித்து எழுதுகிற ஒரு முற்போக்காளர் (கிட்டத்தட்ட இப்படி) எழுதியிருந்தார் “திருமணங்களே அவசியமற்றவை என்கிற போது இந்த போராட்டமே அவசியமற்றது” [இது குறித்து முன்பொரு பதிவில் எழுதியிருந்தேன். அதற்கான லிங்க் பிறகு இணைக்கிறேன்].

நீங்களும் சீதனம் குறித்து “குடும்பமே சமூக அங்கீகாரத்துக்கானது.. இதில் சீதனம்” என எழுதியிருக்கிறீர்கள்.

மேலே குறிப்பிட்ட முற்போக்கான கூற்றோடும் உங்களது கூற்றோடும் எனக்கு உடன்பாடே. நான் இரண்டையுமே தனிப்பட்டரீதியாக விரும்பவில்லை.

ஆனால் சமூகம் என வருகிற போது, முற்போக்கான பல கருத்துக்களை அந்தந்த சந்தர்ப்பத்துக்கேற்ப பாக்க வேண்டிய தேவை உள்ளது.

திருமண உரிமையை வேண்டிப் போராடும், சமபாலுறவாளர்களைப் பொறுத்தவரை திருமணம் செய்யும் தேர்வு அவர்களது அடிப்படை உரிமை.
சீதனத்தை எதிர்க்கும் அதால் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது அவர்களது உரிமை.

குடும்பம், திருமணம், வாரிசு அரசியல் என சகலமும் இருக்கிற இந்த உலகத்தில், சீதனப் பிரச்சினையால் பாதிக்கப்பட போவது நானோ அதை (மற்றும் திருமணத்தையே நிராகரிக்கிற) ஒரு முற்போக்காளர் இல்லையே. அஃதால் பாதிக்கப்படுவது சாதாரணர்கள் தான்.

சமபாலுறவாளர்கள் பல தேசங்களில் திருமணமற்று பற்பல காலம் இணைந்திருந்து, அவர்களது துணையின் (சடுதியான எதிர்பாராத) மரணத்தின் பின் துணையின் சொத்தின்பங்குகளை அவர்களது வாழ்வில் எந்த பங்கையும் வழங்கியிராத உறவினர் கைகளில் இழப்பவர்களாகஉள்ளார்கள். நடுறோட்டில் விடப்பட்டவர்களும் உள்ளார்கள். இப்படியிருக்க, திருமணம் அவர்களுக்கு (சட்டம் திருமணத்தினூடக வழங்ககிற இன்னோரன்ன உரிமைகளைப் பெற) அவசியமா இல்லையா?

 

(இங்கும் தனிப்பட்ட நபராய் துணை என்றாலும் மற்றவரின் உழைப்பில் எனக்கேதும் உரிமை யிருப்பதாய் ‘நானும் நியும் ஒன்று’ ‘உனது உழைப்பும் என்னது’ என்கிற ரீதியான நம்பிக்கைகள் என்ககு இல்லை. ஆனால் சுரண்டலற்ற அன்பின் அடிப்படையில் பின்னப்பட்ட உறவில் -துணையின் இழப்பின் பின்- அந்த உறவில் இருந்த ஒருவருக்கு போய்ச் சேராத பணம்,  அவர்களை மதியாத உறவினர்களிடம் போய்ச் சேருவதில் என்ன நீதி இருக்க முடியும்?)

விரும்புகிறோமோ இல்லையோ, அங்கீகாரமோ இல்லையோ, இளமையை பாலுணர்வை திருமணத்தின் ஊடாக *மட்டுமே* அங்கீகரிக்கிற சமூக அமைப்பில்,அப்படியல்லாத இடங்களில் தமது பாலுணர்வை அனுபவிக்கவியலாத பெண்கள், வறியவர்கள் என்பதால் சீதனப் பிரச்சினையால் திருமணம் செய்யாதிருப்பது யதார்த்தம் அல்லவா? அது யதார்த்தமாய் இருக்க மட்டும், திருமணத்தை குடும்பத்தை போட்டு உடைக்க எந்த அமைப்பும்(?) அல்லது அதை ஆதரிக்கும் எந்த இயக்கமும் பெரிதாய் வளர்ந்திராத பட்சத்தில்,
நாம் சீதனத்தை எதிர்க்க வேண்டும் இல்லையா?

Advertisements
  1. November 20, 2010 at 1:17 am

    உண்மைதான்…

    காலகாலமாக நிலவி வரும் சமூக அமைப்புக்களை கட்டுடைப்பது என்பது இலகுவில் சாத்தியமாகும் ஒரு விடையம் அல்ல. அதை தவிரவும் எனக்கு தேவையில்லாத ஒரு பந்தம் வேறு ஒருவருக்கு தேவையானதாக இருக்கலாம். எனது கருத்துக்களை பதிவு செய்வதற்கு மேலாக சமூகத்தில் அந்த கருத்துக்களை நிலை பெறச்செய்வது எனது எண்ணம் அல்ல. அது சாத்தியமும் அல்ல.

    நீங்கள் சொல்லும் சமூக பொருளாதார காரணிகளும் முக்கியமானவை. இன்னமும் இனியும் திருமணம் சாரந்த பந்தங்களே இங்கு நிலைபெறப்போகின்றன.

    இந்த சூழலில் சீதனம் என்பதை பொறுத்தவரை அதை எதிர்ப்பதே எனது நிலைப்பாடாகவும் இருக்கிறது.

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: