Home > திரை, Events \ நிகழ்வுகள், films, Uncategorized > “பிண எண் 1084இன் அம்மா” திரைப்படம் திரையிடல் +

“பிண எண் 1084இன் அம்மா” திரைப்படம் திரையிடல் +

“பிண எண் 1084இன் அம்மா” திரைப்படம் திரையிடல் + இலங்கையிலிருந்து சில புத்தகங்கள் அறிமுகம்

__________________________________

“நான் ஒரு கனவு காணுகிறேன் அம்மா. அது ஒரு அற்புதமான கனவு. அது எல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற கனவு. அது எல்லாவற்றையும் மாற்றும். இந்தச் சூழல், இந்த நிலைமைகள், இந்தச் சமூகம் எல்லாவற்றையும். அந்த உலகம் ஏழ்மை, நோய், அசுத்தம், பசி, ஊழல், மோசடி என எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்பட்ட ஒரு உலகமாக இருக்கும்.”  “இருட்டினில் வாழ்பவர்களுக்கு ஒளியைக் கொண்டு வருவது பற்றி நான் கனவு காண்கிறேன். என்னுடன் உள்ள நண்பர்க ளுடன் நான் இந்தக் கனவைப் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் எங்களுடைய கனவுகளைப் புரட்சியினூடாக நிதர்சனமாக்க விரும்பு கிறோம். நாங்கள் ஒரு புதிய உலகத்தைச் சிருஷ்டிக்க விரும்புகிறோம். சமத்துவம், சமாதானம் நீதி, என்பவற்றை எல்லோருக்கும் கொடுக்கும் ஒரு புதிய உலகமாக அது இருக்கும்.”

1970களில் கல்கத்தாவின் வீதியெங்கும் இந்தக் குரல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தன.

இவ்வாறு இத் திரைப்படத்தை அறிமுகம் செய்திருந்தார் மணி தர்சா (2007 இலங்கை).

ஆம்.  1970களில் இந்திய அரசால் ஒடுக்கப்பட்ட வங்காள கிளர்ச்சியில் தன் அன்புக்குரிய மகனை இழந்த அம்மாவின் கதை இது.  30 வருடங்களுக்கு மேலாய் போரினில் தம் எண்ணற்ற பிள்ளைகளை இழந்த எமது நிலத்தின் தாய்மாரது குரலுக்கு நெருக்கமானதாய் ஒலிக்கிறது.  பிள்ளைகளை இழத்தலின் வலியை கூறும் இத் திரைப்படத்தின் கதாசிரியர் ஆச்சரியத்துக்கு இடமின்றி வங்காளத்தில் அந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த மஹாஸ்வேதா தேவி என்கிற பெண் மனிதஉரிமைப் போராளியே ஆவார். ஹிந்தியில் புகழ்பெற்ற கோவிந்த் நிஹ்லானியால் இயக்கப்பட்ட இத் திரைப்படத்தின் திரையிடல் மார்கழி 20 – வரும் ஞாயிறு 2:30 pm – Torontoவில் Scarborough Civic Centerஇல் இடம்பெறுகிறது.

Advertisements
 1. sathiayn
  December 18, 2009 at 4:53 am

  அக்கா இந்த படத்தை பௌர்ணமி தின படமாக நான் திரையிட்டபோத பாதிப்படந்தான் அந்த ல் இருந்தது அதன்பிறகு இந்தப் படத்தை பல இடங்களில் தேடினேன் கிடைக்கவில்லை அருமையாக படம் பாதிவரைக்கும் இதக் கிந்திப் பெயர் தெரியாதால அவ்வளவா தேடமுடியவல்லை இப்ப முய்றசி பண்ணுறன்

  • peddai
   December 18, 2009 at 7:27 am

   சத்தியன்: போர்நிறுத்தம், கொலைகள், என்கிற பின்னணியில் பாத்த படம். நிறைய பாதித்தது. முடிந்தால் “1084இன் அம்மா” மஹேஸ்வேதா தேவியின் சிறுகதை முலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை எடுத்து படித்துப் பாருங்கள் (போன வருடம் புத்தக கண்காட்சி நேரம் வெளிவந்ததென நினைக்கிறேன். பதிப்பக பேர் இப்ப ஞாபகம் வரேல்ல). மஹாஸ்வேதாவின் மனிதநேயம் அதில் எங்கும்!

 1. December 18, 2009 at 6:04 pm
 2. June 7, 2010 at 9:27 am
 3. December 1, 2010 at 7:59 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: