வலை

தனது வாழ்க்கையை
எச்சிலாற் பின்னிக் கொண்டிக்கிறது சிலந்தி.
அது, கரைந்தழியும் ஒவ்வொரு பொழுதிலும்
தனது இரைகளுக்காகக் காத்திருக்கிறது.
சிலந்தியின் எச்சிற் கனவுகளில்
பூச்சிகளின் வண்ண வண்ணக் கனவுகள்
படபடக்கின்றன.
நீளமானதும் பேரச்சமூட்டக்கூடியதுமான
சிலந்தியின் கால்கள்
எச்சில் அடுக்குகளில் நீள்கின்றன
ஒரு ஆக்கிரமிப்பாளனின் கால்களைப் போல.

நாறிமணக்கும் சிலந்தியின் எச்சிலில்
உயிரற்றும் தலைகீழாகவும் தொங்குகின்றன
பூச்சிகள்
சிலந்தி பின்னிய கனவுகளில்
கருமையும் சாபமும் சூழ்கிறது:
கண்ணீரும் வேதனையும் துலங்குகிறது.
குழைந்துபோன அதன் சித்திரங்களை அழகுபடுத்த
எச்சிற் கனவுகளை வலிந்து வலிந்து சுரக்கிறது
சிலந்தி.

எச்சில் பின்னிய அதன் வாழ்க்கை
ஒளிமங்கி
தேவதைகள் சபித்துப்போன
நந்தவனமாயிருந்தது.

அழகும் இளமையும் ஒளிரும்
பூச்சிகளின் இறக்கைகள்
சிலந்தியின் கருமை மண்டிய வலையிலிருந்து
எப்போது காணாமற் போயின

09.10.98
எஸ்போஸ்
நன்றி: யுகம் மாறும் (தொகுப்பு 1999)
=

Chandrabose Suthakar (Esbose) was shot dead in Vavuniya last night. Radio reports have confirmed the death.
-நண்பரின் கடிதம்
ஏப்ரல் 17.2007

Advertisements
 1. peddai
  April 17, 2009 at 11:49 pm

  5 Responses to “வலை”

  1. Antara Says:
  April 17th, 2007 at 11:53 am

  First i read his poem in Kalachuvadu then sari nikar, he wrote very few poems but i like most of his poems. it really a bad news. Thank you for sharing it.
  2. DJ Says:
  April 17th, 2007 at 2:05 pm

  Very sad news…hard to accept it :((((.
  3. பொடிச்சி Says:
  April 17th, 2007 at 3:14 pm

  http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21914
  4. Sundaravadivel Says:
  April 17th, 2007 at 3:43 pm

  Miserable.
  5. பெட்டைக்குப் பட்டவை » Blog Archive » வாழ்வழிதலின் வலி Says:
  April 25th, 2007 at 8:14 pm

  […] [ஏப்ரல் 17.2007] எஸ்போஸ் கொல்லப்பட்டதாக ‘ஊர்ஜிதப்படுத்தப்பட்ட‘ தகவலென நண்பரொருவர் மடல் அனுப்பியிருந்த பிறகும், சில இணையத் தளங்களில் ‘உடனடிச்’செய்திகளில் தேடிவிட்டு, இந்த செய்தி பொய்த்துப் போகலாம் என்ற சிறு சந்தோசத்தை விட்டு விட மனசின்றியே வகுப்புக்குப் போனேன். வகுப்பிலிருந்து வந்து பார்க்கிற போது இத் தகவல் ஒரு “வதந்தி” என்றாக்கப்பட்டிருந்தால் அது எவ்வளவு பெறுமதியானது? […]

 2. peddai
  April 17, 2009 at 11:50 pm

  2வது வருடம்…………………

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: