Home > இசை > அனீ லெனொக்ஸ் + எறித்மிக்ஸ்: இனிய கனவுகள் இவற்றால் ஆனவை

அனீ லெனொக்ஸ் + எறித்மிக்ஸ்: இனிய கனவுகள் இவற்றால் ஆனவை

Eurythmics-Peace----Book--CD-369781.jpg

றித்மிக்ஸ் (The Eurythmics ) இணைகள்: 80களின் வெகுசனக் கலைஞர்களில் பிரபலமாயிருந்தவர்கள்; synth-pop வகை இசையால் அறியப்பட்டிருந்தார்கள். இவர்களது பாடல்கள் பலதும் தனித்துவமான காட்சிப்படுத்தப்படுத்தல், தொகுப்பு, இயற்கையுடனான தொடர்பு, நடிப்பு, வரிகள், மையமாக அனீ லெனொக்ஸின் குரலால் ஈர்க்கும்; மேலதிகமாக இந்த இணைகளிடம் காண்கிற ஒருவித craziness-க்காகவும் பிடிக்கும். பாடகராக அனீ லெனொக்ஸ், வாத்தியங்கள், எழுத்து மற்றும் தயாரிப்பு Dave Stewart.

எல்லா மனிதருடைய வாழ்விலும் இருக்கக்கூடிய -அல்லது இல்லாதிருக்கக் கூடிய ஆனால்- சுவையான பக்கங்கள் போல, 1954-இல் ஸ்கொற்லாந்தில் பிறந்த அனீ 1971-இல் இங்கிலாந்து செல்கிறார், Royal Academy of Music இல் அனுமதி கிடைத்து. ஆனால் சில வருடங்கள் அங்கு தொடர்ந்தவர், பின் படிப்பை இடைவிட்டு இலண்டனில் ஒரு உணவகத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்து கொண்டிருந்த காலம் (1976) இவரைக் கண்ட ஸ் ரீவேர்ட் அங்கே அவரை திருமணம் செய்யக் கேட்டதாகப் படித்திருக்கிறேன் (இதெல்லாம் எவ்வ்வ்வளவு பெரிய அங்கீகாரம்!!!). பின் The Tourists என்கிற பொப் குழுவிலிருந்தவர்களில் இவரும் டேவ் ஸ் ரீவேர்ட் உம் சேர்ந்து எறித்மிக்ஸ் உருவானது. எனக்கு சுவாரசியமாக இருந்த விடயம்: காதலர்களாக அவர்களிடையே உறவு முறிந்த பிறகும், தாம் இருவரும் நேசிக்கிற ஒன்றின் பொருட்டு தொடர்ந்தும் (1990களிற்குப் பிறகு அனீ ஓய்வு பெற விரும்புவதாகக் கூறி, பின் தனித்து ஆல்பம் வெளியிட்டிருந்த போதும்) இணைந்தே இயங்கினார்கள்.

அவர்களது பாடல்களில் பொதுவாக இரண்டு கூறுகளைக் குறிப்பிடலாம்:
1. மனிதஉறவுகள் சார்ந்தவை
2. [மனித உறவுகள் முடிகிறதுமான] தங்குதலிற்கெதிரானவை


முதலாவது
{for the broken dreamers}

ஆனீ லெனொக்ஸ் பெண் பாலிற்குரிய என்பதான ஆடை அணிதல் முறைகளை பின்தொடரா (gender-challenging)- கோட், சூட் இதர ஆணினதான ஆடைகள் – பொடியன் தோற்ற அவரது உடைகளாலும் அறியப்பட்டிருந்தவர். சில ஆண்களிடம் பெண்களிடம் இருக்கிற எதிர்பால் ஆடைகளை அணியும் விருப்பம் (cross dressing, Transvestism) ஆர்வங்கள் அவர்கள் பாலியல் தேர்வு குறித்த சந்தேகத்தை கிழப்பும் வழமைக்கமைய இவர்களது பிரபலத்திற்கு ஆடை அணிதல் முறை குறித்த சர்ச்சையும் காரணமாக இருந்தது. Who’s That Girl பாடலில் அனீயின் காதலன் ஒவ்வொரு பெண்ணுடன் வந்துகொண்டிருக்க, சினத்துடன் பாடிக்கொண்டிருப்பாள், இறுதிக் காட்சியில் அனீ (மீசை அரும்புகிற, காதடியில் தலைமுடியுடன்) ஒரு ஆணாகவே வந்து பாடிக்கொண்டிருக்கிற அனீயை முத்தமிடுவாள் (Elvis Presleyயில் அவரது ஸ்ரைலில் இவரது ஈடுபாடும் அறியப்பட்டிருந்த ஒன்றே).

இந்த உடைத் தேர்விற்கு அவரது காலகட்டமே பிரதான காரணமாகத் தோன்றுகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் பிறகான பிள்ளைப் பேறு அதிகரித்த (Baby boomer) காலகட்டத்தில் பிறந்தவரான அவரது அந்தத் தலைமுறைக்குரிய பண்புகளான குடும்பம், காதல் போன்ற மரபான நிறுவனங்களொடு பிளவுறும் சுகந்திர விழைபை ஏதோ ஒரு அளவில் பாடல்களும் காவுகின்றன.
அவற்றில் பொப் முடியோடு நீளப் பாவாடை சட்டை அணிந்த 80களின் பழமைவாத முறையில் உடை அணிந்தபடி, தனது கணவனுக்காகக் காத்திருந்து, கையில் ஏதோ பின்னிக்கொண்டிருக்கிற “குடும்பப் பெண்” ஒரு பகடியாகவே வருகிறாள். “நான் Bபீத்தோவன் கேட்கவிரும்புகிறேன்” – “I need a man” என அர்த்தப்படுகிற பாடலில் “1984 sex crime” போலவே baby boomers தலைமுறைக்குரிய மரபை உடைத்துப்போடும் விழைபும் சிக்குப்படுதலிற்கு எதிரானதாகும் பிறழ்வு மனமும் தெரியும்; மரபாக வரும் ‘இயல்புணர்ச்சிகளை’ எல்லாம் கேலி செய்வதுபோல Do You Want to Break Up போன்ற பாடல்களில் உடைவை எதிர்கொள்ளல்…. எத்தனை துயரமாக வரிகள் இருந்தாலும் குரலில் துயரமிராது. ஒரு மேலான, உடைந்துவிடாத குரல்: }கடலுக்கென்னை கூட்டிச் சென்று/நீ ஒரு கல்லைப்போல என்னைப் போட்டாய்.ஆழமான நீலக் கடலுள் என்னை. அங்கிருக்க விரும்பவில்லை பேபி/ நான் தனியே நீந்த விரும்பவில்லை{You took me to the ocean/Dropped me like a stone.//Took me to the deep blue ocean./I dont wanna stay there baby/I dont wanna swim alone} பல பாடல்களும் உறவுசார் பாடல்களே ஆனபோதும், இத்தகைய வரிகளிலுள்ள துயரத்தோடு ஒட்டாத குரலின் தன்மையில் கவர்கின்றன, தங்களை தாங்களே வேடிக்கை பார்ப்பதுபோல!

ஆனால் British New Wave (50-60), வியட்நாம் யுத்த எதிர்ப்பு 60-70களின் புரட்சிகர குரல்கள் – இவற்றைத் தாண்டி வருகிற போதும், ஒரு வெகுசன இசைஞர்களான இவர்களிடம் முந்தையவர்களான பஃபீ செயின்ற் மேரீ போன்றவர்களின் பாடல்களில் உள்ள தீவிரமான எதிர்ப்பு அரசியற் கூறுகள் கிடையாது. ‘கடவுளின் குழந்தைகள்’ என நினைத்துக் கொள்வதாலும், ‘திறந்த இதயத்துடன்’(!!) அணுகினால் கடவுளைப் போலவே ஆச்சர்யங்களை நிகழ்த்தும் காதலால் ‘வலிகளைப்’ போக்க முடியும் என்றும், கூறும் பாடல்கள். So what, என்னைக் கவர்வது இவற்றை பாடுகிறபோது இருக்கிற அந்த passion-உம், அனீயின் energy-உம், அப்புறம் ‘தங்குதலில்’ உள்ள வன்முறையின் முகத்தை காட்டும் பாடல்கள் என்பதும்தான். “Beethoven (I Love To Listen To)” “You Have Placed A Chill In My Heart” பாடல்களின் வரிகளில், வீட்டிலுள்ளவளின் ‘இருத்தலும்’ -அவள்- ‘இருக்க விரும்புதலும்’ ஆன முகம் பிறழ்கிறது. (I love to listen to Beethoven…/I love to listen/…I was dreaming like a Texan girl. A girl who thinks she’s got the right to everything. A girl who thinks she should have something extreme.) (A woman’s just too tired to think/About the dirty old dishes in the kitchen sink.) (I wish I was invisible/So I could climb through the telephone/When it hurts my ear/And it hurts my brain/And it makes me feel too much/Too much too much too much./Don’t cut me down/When I’m talking to you/‘Cause I’m much too tall/To feel that small./)

ஒல்லியான ஒரு பெண் கையில் லாம்புடன் -அதற்கு அவசியமற்று வீடியோவில் நிறைய வெளிச்சம் வேறு தெரிகிறதா? அப்போ- காற்று வீசும் பாறை வெளியில் ‘வெங்கணாந்துவது’ போல வரும் Here comes the rain again, செய்யிறதெல்லாம் செய்திற்று உடைவிற்கு ‘ஏன்’ என்று என்னைக் கேட்காதே எனும் don’t ask me why, “ஆள் முடிஞ்சுது எண்டு தண்ணி தெளிச்சு பிணமெண்டு மூடியிராதிங்க, இன்னும் உயிரோட தான் இருக்கிறன்” என்ற மாதிரி பாடத் தகுந்த i’ve got a life (it ain’t over. it aint’ over.) போன்ற (it’s dog eat dog the human race போன்ற வரிகள்…) பாடல்கள் சகலமும் play 4 our crazy moods.


இரண்டாவது
—————————
தங்குதலிற்கெதிராய்
—————————–
மறுத்தல்.பயணித்தல்.தொடர்ந்திருந்தல்

போன்ஞ் ஜோவியின் ஒரு ஹிற் பாடல் – “Who Says You Can’t Go Home” – ‘இந்த இடத்தை விட்டுப் போக 20 வருடங்களை செலவளித்தேன்/நிரப்ப முடியாத ஏதோ ஒன்றை தேடிக்கோண்டிருந்தேன்/எப்போதுமே எனக்குத் தெரிந்திருந்த ஒன்றிலிருந்து ஓடிக்கொண்டிருந்தேன்/எலும்பு கிடைக்காத குருட்டு நாயினைப் போலும்/நான் அதிகாலை வலையத்தில் தொலைந்த ஓர் ஜிப்சி/…என்னால் முடிந்தளவு தொலைவு போனேன், ஒரு புதிய முகத்தை தேட முயற்சித்தேன்/…You take the home from the boy, but not the boy from his home/இவை எனது தெருக்கள், நான் அறிந்திருந்த ஒரே வாழ்வு/யார் சொன்னது உங்களை வீடு செல்ல முடியாதென……”
– இவ்வாறு போகும்; எங்கோ ஜிப்சியாய் தொலைந்துபோகும் வேட்கை தரும். இவ் வகைப் பாடல்கள் எப்போதும் பிடித்துப் போவதன் காரணத்தைத் யோசித்தபோது அவற்றிலுள்ள பயணங்களாலென்று தோன்றியது: வாழ்வின் சகல ரசங்களையும் அதன் அத்தனை சுவைகளையும் அனுபவித்துவிட்டு ஈற்றில் “வீட்டின்” பெருமையையும் -அவர்களுடையதான வாய்ப்புகளைக் கிடைக்கப் பெறாத “தங்கியவர்களிடம்”- வீட்டைத் தாண்டிப் பயணித்த அந்த அனுபவங்களின் கிளர்வுகளையும் ஆசைகளையும், இவர்கள் தருகிறார்கள்.

ஏராளமான வர்ணங்கள் உபயோகிபடும் ஒளிப்பதிவில், கறுப்புக் கோட்சூட்-உடன் விதமான நிமிர்வுடன் நின்று, ஒரு மந்திரவாதி போலவோ ஓர் இசையமைப்பாளர் போலவோ அனீ கையசைப்பில் அலைந்து திரிகின்ற, பல்வண்ணத் துணிகள் மாறி மாறி வந்துகொண்டிருப்பதேபோல மனப்பதிவு தருகிற – words r the magic, fly like birds.

வரிகளிற்கு இன்னொரு வடிவம் வழங்கும் காட்சிப்படுத்தலில் முக்கியமானவை நிறங்களும் முகங்களின் Close-upகளும். இருவரும் அதில் கைக்கொள்கிற ‘நாடக பாணி’, அனீயின் பவித்திரமான முகம், கண்கள்; மற்றும், இயற்கை எடுத்துக்கொள்கிற பங்கு: கடலலைகள், எதைத் தேடிப் பறக்கிற கழுகு, ஆறுகள் மற்றும் இருளும், காற்றும்… ஒரு மேலான, உடைந்துவிடாத குரலுடன் ஒத்திசையத் தொடங்கும்.

கேட்பவர்கள் தங்கியவர்களாக, பாடகர்கள் கலைஞர்கள் அவர்கள் சதா கடந்துகொண்டே, தங்குதல் மறுத்தவராய் நகர – இந்தப் பண்பு கேட்போரை அவர்களிடத்தில் இழுப்பதாக இருக்கலாம்; அல்லது பிறிதும் வாழ்வின் எண்ணற்ற வசீகரங்களை கிளப்புவதாலும் சுற்றித் திரிந்த “ஒருபோது”-களை இரைமீட்டிச் செல்வதாலும் இந்தப் பாடல்கள் பிடிக்கலாம்.
~

http://www.youtube.com/watch?v=PscogedAWTI

மழை திரும்பவும் வருகிறதே

இதோ திரும்பவும் மழை வருகிறது
என் தலைமேல் ஓர் நினைவுபோல விழுந்தவண்ணம்
என் தலைமேல் ஓர் புது உணர்ச்சி போல விழுந்தவண்ணம்
நான் வீசும் காற்றில் நடக்க விரும்புகிறேன்
நான் காதலர்கள் போல பேச விரும்புகிறேன்
உனது கடலினுள் சுளியோட விரும்புகிறேன்
உன்னுடன் மழை பெய்கிறதா

ஆகையால் என்னோடு பேசு பேபி
காதலர்கள் போன்று
என்னுடன் நட
காதலர்கள் போன்று
என்னிடம் பேசு
காதலர்கள் போன்று

இதோ மீளவும் மழை வருகிறது
என் தலைமேல் ஓர் துயரமாக விழுந்தபடி
என்னை ஓர் புது உணர்ச்சி போல பிளந்தபடி

ஓ…
நான் வீசும் காற்றை சுவாசிக்க விரும்புகிறேன்
நான் காதலர்கள் போல் முத்தமிட விரும்புகிறேன்

உன்னிடம் மழை பெய்கிறதா
(இங்கே, அது திரும்பவும் வருகிறதே, இங்கே, அது திரும்பவும் வருகிறதே)
~

இனிய கனவுகள்

இனிய கனவுகள் இவற்றால் ஆனவை
நான் யார் முரண்பட?
ஏழு கடலையும் உலகையும் சுற்றினேன்
எல்லோரும் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்

சிலபேர் உங்களை உபயோகிக்க விரும்புகிறார்கள்
சில பேர் உங்களால் உபயோகிக்கப்பட விரும்புகிறார்கள்
சிலபேர் உங்களை துன்புறுத்த விரும்புகிறார்கள்
சிலபேர் உங்களால் துன்புறுத்தப்பட விரும்புகிறார்கள்

நான் உன்னை உபயோகிக்கவும் துன்புறுத்தவும் விரும்புகிறேன்
நான் உனக்குள் உள்ளதென்ன வென அறிய விரும்புகிறேன்
(Whispering) தலை நிமிர்ந்து, தொடர்ந்து செல்க
தலை நிமிர்ந்து தொடர்ந்து செல்க
தலை நிமிர்ந்து, தொடர்ந்து செல்க
தலை நிமிர்ந்து தொடர்ந்து செல்க…

இனிய கனவுகள் இவற்றால் ஆனவை
நான் யார் முரண்பட?
நான் ஏழு கடலையும் உலகையும் பயணித்தேன்
எல்லோரும் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்

நான் உன்னை உபயோகிக்கவும் துன்புறுத்தவும் விரும்புகிறேன்
நான் உனக்குள் என்ன உள்ளதென அறிய விரும்புகிறென்
நான் உன்னை உபயோகிக்கவும் துன்புறுத்தவும் போகிறேன்
நான் உன்னுள் என்ன உள்ளதென அறியப் போகிறேன்

Advertisements
Categories: இசை
 1. peddai
  April 18, 2009 at 12:24 am

  One Response to “அனீ லெனொக்ஸ் + எறித்மிக்ஸ்: இனிய கனவுகள் இவற்றால் ஆனவை”

  1. தமிழ் வலைப்பதிவு » என்னைச்சுற்றி – 1 Says:
  March 14th, 2007 at 4:44 pm

  […] நான் நிறையத் தெரிந்துகொண்ட இடுகை – அனீ லெனெக்ஸ் + எறித்மிக்ஸ்: இனிய கனவுகள் இவற்றால் ஆனவை […]

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: