Home > அதிகாரம்-மக்கள், ஈழம்/தொடர்புடையன, போர் > எனது குழந்தை போருக்கல்ல!

எனது குழந்தை போருக்கல்ல!

எனது குழந்தைகள் போருக்கல்ல!
82310658_c43e7be98d_o
ஜீலை மாதத்தில் ஒருநாள் நான், Jivi மற்றும் ஜிறெனா ஒன்றாய் நின்றிருந்தபோது, மட்டக்களப்பில் கமலா வாசுகியின் இத் தலைப்பிட்ட பிரகடனத்தைப் பற்றி Jivi கூறினார். யப்பானிலோ என்னவோ ஒரு பெரும் யுத்தத்திற்குப் பிறகு பெண்கள் பிள்ளை பெற மறுத்ததாகவும் எதிர்பூர்வலம் போனதாகவும் -உண்மையில்- அது அரசாங்கத்தை பயமுறுத்தியதாகவும் ஏதோ ஒரு கட்டுரையில் -ஒரு சஞ்சிகையில்- படித்ததாக ஜிறெனா சொன்னார். (பிறகு எடுத்துத் தருவதாக கூறி மறந்தாச!).
இதே போல, Jivi, சுனாமியின் பிறகு முகாம்களில் பெண்களிற்கு கருத்தடை மாத்திரைகள் வழங்கப்படவில்லை என்பது தொடர்பாக (அதன் ‘அரசியற்’ காரணம்) முன்னர் உரையாடியபோது, “இன”ப் பெருக்கமும் – அதூடாகப் போர்ப் படைகளும் உருவாக்குகிற இயந்திரங்களாகப் பெண்களின் இருத்தலும் உரையாடலில் வந்தது. உலக யுத்த்தங்களிற்குப் பிறகு பெண்கள் பிள்ளை பெற ஊக்குவிக்கப்படுவது பற்றி ஒரு தோழர் குறிப்பிட – எல்லா யுத்தங்களின் பிறகும் நடக்கிற இவை பற்றி எழுத வேண்டுமென நினைத்தது…

இப்போதைக்கு இந்த பிரகடனத்தை (”எனது குழந்தை யுத்தத்திற்கல்ல”) வீரத்தின் பெயரால் நடந்தேறுகிற (ஆண்களின்) அரசியலில் ஒரு இடையீடாய் செருகிக் கொள்ளலாம். இது, யுத்தம் தொடர்பாக – பெண்கள் சார்ந்த ‘ஒரு’ பார்வைதான்.
யுத்தங்கள், யுத்த ஆயுதங்கள் அனைத்தினதும் மூலாதாரிகள் ஆண்கள் என்கிற அடிப்படையில். இப்படியான ஒரு ஒன்றிணைவு பெண்களிடமிருந்து வருமாயின், அவர்களின் கருவறைக்குள்ளேயே கட்டப்படுகிற தேசியமும் இன்ன பிற —த்தனங்களும் முற்றாய் அழிந்து போய் விடும் என்கிற “நம்பிக்கை”ப்பாற்பட்ட பார்வை.

“எனது குழந்தை யுத்தத்திற்கல்ல”

அல்லைப்பிட்டியோ, மன்னாரோ அல்லது கெப்பிட்டிக்கொல்லாவவிலோ
அவர்கள் கடலால் சூழப்பட்ட இந்த நிலத்தின் எந்தப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருந்தாலும்,

அவர்கள் தமிழ், சிங்களம் அல்லது எந்த ஒரு சாத்தானின் மொழியைப் பேசுகிறவனால்
கொலை செய்யப்பட்டிருந்தாலும்

அவர்கள் கடவுளரை, மதத்தை அல்லது எந்த கருத்தியல்களை
நம்பிய ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலும்

அவர்கள் பெண்களின் குழந்தைகள்
285 நாட்கள் அவர்களைத் தாங்கி
பிறப்பிக்கிறபோது வலிகளையும் கடந்து
வளர்க்கையில் வேதனைகளையும் அனுபவித்து,
பெண்கள் நாங்கள்,
பிற பெண்களின் குழந்தைகளைக் கொல்வதற்காய்
குழந்தைகளைப் பெற்றாக வேண்டுமா?
வேறு யாராலோ கொல்லப்படப் போவதற்காய்
நாங்கள் குழந்தைகளைப் பெற்றாக வேண்டுமா?

பெண்களின் குழந்தைகள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் கொல்வார்கள் எனில்
பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்த வேண்டும்

சகோதரிகளே, வன்முறையை நிறுத்த ஒன்றிணையுங்கள்!
~

MY CHILD IS NOT FOR WAR

Whether they were massacred in Allaipitty, Mannar or
in Kepettikolawa
anywhere in this land surrounded by the sea,
Whether they were killed by a person
speaking Tamil, Sinhala or any demon’s languages,
Whether they were killed by a person
who believes in gods, religion or ideologies,
they are children of women,
the women who have been carried them for 285 days,
and
went through the pains to give birth, and
went through the agonies to grow them,
We Women
should we give birth to children to kill other
women’s
children?

should we give birth to children who will be killed
by
some one else?

If the children of women will continue to kill each
other,
Women should stop giving birth

Sisters join together to stop violence!
~

July2006
நன்றி: ஊடறு
நன்றி: சிறுவனின் படம்

Advertisements
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: