Home > ஈழம்/தொடர்புடையன, கவிதையியல், பிறரது படைப்புகள் > மேலும் சில இரத்தக் குறிப்புகள்

மேலும் சில இரத்தக் குறிப்புகள்

-அனார்

மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்
இப்போது தான் முதல் தடவையாக காண்பதுபோன்று

“இரத்தம்” கருணையை, பரிதவிப்பினை
அவாவுகின்றது
இயலாமையை வெளிப்படுத்துகின்றது

வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்
குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்
குளிர்ந்து வழியக் கூடும்

கொல்லப்பட்ட குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத் தனமாக

களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தை சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கௌரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்

சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறைபடிந்திருக்கும் சுவர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன

வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது
~
Aug 2006
நன்றி: ஊடறு

Advertisements
  1. peddai
    April 18, 2009 at 3:27 am

    2 Responses to “மேலும் சில இரத்தக் குறிப்புகள்”

    1. s Says:
    August 19th, 2006 at 10:56 pm

    nee and your rayagaran elarumm tamil thuurookegal
    kaddee kuddthoo eela tamil raathamm kuddeyuuinko
    2. பொடிச்சி Says:
    August 20th, 2006 at 7:40 pm

    s!
    முன் முடிவுகளையும் வார்த்தை கொட்டுதல்களையும் விட –
    எழுத/சொல்லப்பட்ட எதையும் புரிந்துகொள்ள முனைவது மேல் (உண்மையில் என்ன சொல்லப் படுகிறது என்பது அப்போதாவது புரியலாம்).

    கவிதை இலங்கையிலிருந்து எழுதுகிற அனாருடையது. சமீபத்தில் படித்ததில் பாதித்தது.
    நன்றி!

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: