Home > பொது > பிடித்த “ஆறு”

பிடித்த “ஆறு”

subway

டல்லாக இருந்த மனோநிலைக்குப் பிடித்திருந்தது லிவிங் ஸ்மைல் அழைத்திருந்த இந்த விளையாட்டு… எந்த எந்த நாடுகள் பிடிக்கும், எந்த எந்த நூல்கள் பாதித்தன, அப்புறம், பாதித்த நபர்கள், இசை, பாடல்கள் – உணவு! இவ்வாறு யோசிப்பது நல்லா இருந்தது. வித்யா போல அழகாக, சுவாரசியமாக, எல்லாவற்றையும் அணுகுகிற விதத்தில் ஒரு இரசனையுடன் எழுத முடியுமா தெரியவில்லை; என்றாலும், முயலுகிறேன். இதில் வருகிற நூல்கள் படங்கள் எல்லாம் தற்செயல் தற்செயலாய் எங்கெங்கோ பார்த்த/வாசித்தவை மட்டுமே. “பிடித்த” என்றபோது எந்த நேரமும் எந்த (எதிர், சார்) விமர்சனங்களுடனும் என்றோ, “பாதித்த” என்றபோது முற்று முழுதாக அவர்களுடைய ஆளுமைகளை நாங்கள் பின் தொடருவதாய் எல்லாம் இல்லை என்றே நினைக்கிறேன் – எங்களுக்கு முக்கியமாக இருக்கிற கருத்தியல்களை இன்னும் பலப்படுத்தவோ, வளர்க்கவோ செய்வதாக அவை இருக்கலாம்.. !

அ. பிடித்த படைப்பாளிகள்
1. என்.டி.ராஜ்குமார்
2. ஷோபாசக்தி
3.கமலா தாஸ்
4.நகுலன்
5. பா.அகிலன் (”பதுங்குகுழி நாட்கள்”)
6. நிரூபா

ஆ. பாதித்தவர்கள்/பாதிப்பவர்கள்
1. சிவரமணி
2. அம்பை
3. ஜோர்ஜ்.இ.குருஷேவ் (”தாயகம்” பத்திரிகை ஆசிரியர்)
4.கருணாகரன் (ஈழக் கவிஞர்)
5. michael franti (பாடகர்)
6. என்.டி.ராஜ்குமார்

இ. மறக்கமுடியாத நூல்கள்
1. ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள் – கருணாகரன்
2. கொறில்லா/ம் – ஷோபாசக்தி
3. குட்டி இளவரசன்
4. the catcher in the rye
5. மரண வீட்டின் குறிப்புகள் – தாஸ்தாவ்ஸ்கி (தமிழில்)
6. i saw ramallah

ஈ. பிடித்த உணவுகள்
1. ரதா அன்ரி —தீவில், கடற் கரையின் நின்று பிடித்த மீன் – “சுட்டு”
2. மாம்பழமும் புட்டும்
3. நேற்று வைச்ச மீன் குழம்பு (எல்லா ஆசிய மாவுணவோடும்!)
4. ஓடியற் கூழ்
5. நூடில்ஸ்
6. fast food only if it tastes good…

உ. மறக்க முடியாத சினிமா
1. autumn sonata (இங்மர் பேர்க்மன்)
2. Hiroshima mon amour (இதைப் பரிந்துரைத்தவர்கள் வாழ்க!)
3. ஸ்பர்ஷ் (Sai Paranjape)
4. Ek Hazaar Chaurasi Ki Ma (Govind Nihalani)
5. அவள் அப்படித்தான் (ருத்ரையா)
6. farewell my concubine (Chen Kaige)

ஊ. பிடித்த இடங்கள்
1. ஆஸ்பத்திரிச் சாலைகள்
2. போன அமெரிக்க நகர்களின் Downtown-கள்
3. மகாவலி கங்கை
4. இரவில் பயமும் ஃத்திறில்லும் தரும் –
கதிர்காமம் போகிற வழி சிங்களக் கிராமங்கள் (1991-1995)
5. வன்கூவர் மாநகரம்
6. 2000-ஆம் ஆண்டிற்கு முந்தைய இருப்பிடத்தின் பின்புறமிருந்த சிறு காடு

எ. பிடித்த இசை/யமைப்பாளர்/பாடல்கள்..etc
1. ராசாத்தி உன்னை… காணாத நெஞ்சு…. காத்தாடி போலாடுது! (ஜெயச்சந்திரன்)
2.மேற்கத்தைய அல்லாத எல்லா மொழிப் பாடல்களும்
3. வியாபார/ மாற்று – பாதிக்கிற எந்த இசையும்
4. சீன ஒப்பறா
5. பூங்காற்றிலே உன் சுவாசத்தை
6. “சிறைச்சாலை” பாடல்களுக்காகவும் இன்ன பிறவிற்காகவும் இளைய ராஜா

ஏ. போக விரும்பும் இடங்கள்
1. டப்ளின், அயர்லாந்து
2. கேரளா, இந்தியா
3. மன்னார் (”சில்வா” மாமாவின் வீடு)
4. பலஸ்தீனம்
5. மத்திய கிழக்கு நாடுகள்
6. -மிகவும் அழகாயும், குழந்தைகளைப் போன்ற தோற்றம் உடையனவாயும் இருப்பதாலும் – பக்கதத்து நாட்டின் மிருக உரிமை வாதிகளை மிகவும் “நோக”ச் செய்கிற சீல் வேட்டை (லிங்க்) நடக்கிற கனடிய மாநிலம் ஏதேனுமொன்றிற்கு (முக்கியமாக சீல் சூப் குடிக்க)

ஐ. வலையில் அடிக்கடி போகுமிடம்
1. youtube.com
2. தமிழ்மணம்
3. BBC
4.wsws.org
5.தேனீ
6.tamilnet.com

ஒ. பிடிக்கிற விசயங்கள்…
1. இசை கேட்க..
2. சப்வே பிரயாணம் /+ வாசிப்பு
3. இரவில் வாகனமோட்டிச் செல்லல்
4. இரவில் தோழர்களுடன் நடத்தல்
4. அறிந்ததை, அறிந்துகொள்ள விரும்புவதை எழுதுதல்
5. மொழியைப் “பெயர்த்தல்” !!
6. உதவி – குழந்தைகளின் வாழ்வும் நினைவும், கவிதைகளில்..

ஓ. மனதில் பதிந்த பதிவுகள் (posts) சில…
1. தலைப்பில்லாத ஒரு கவிதை
2. அவர்களைப் பற்றி
3. சிலுக்கு சுமிதா புராணம்
4. வாயு!
5. அமதியுஸ்
6. பன்னாட்டுப் பகலுணவு உப்புமா

ஔ. மேலும் சில வலைப் பக்கங்கள்
1. நூலகம்
2. உதவி
3. சாக்ய சங்க (தொடர்பாக ரோசாவசந்த்)
4. புத்தகவாசம்
5. கீற்றுக்கொட்டாய்
6. ஊடறு

(விளையாட்டுக்கு!) நான் அழைக்க விரும்பும் ஆறு பேர்:
1. ஷ்ரேயா
2. சன்னாசி
3. பொறுக்கி
4. மதி
5. மயூரன்
6. ரோசா வசந்த்

பி.கு:விளையாட்டின் தேர்வுகளைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்; தொடருபவர்களும் அதே செய்யலாம்…..
படம் நன்றி

Advertisements
Categories: பொது
 1. peddai
  April 18, 2009 at 12:43 am

  15 Responses to “பிடித்த “ஆறு””

  1. ஈழநாதன் Says:
  June 17th, 2006 at 11:22 am

  பொடிச்சி தனக்குப் பிடித்ததை அசைபோடுவது மட்டுமல்ல மற்றவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று விடுப்புப் பார்ப்பது கூடச் சுகம்தான் உங்கள் பட்டியல் அந்த அனுபவத்தைத் தருகிறது.
  autumn sonata பிடிக்குமென்றால் Virging spring ம் பிடிக்கும் என்று நினைக்கிறேன் Raise the red lantern பாருங்கள் farewell my concubine போலவே நல்லதொரு படம்
  2. SK Says:
  June 17th, 2006 at 10:43 pm

  தரமான, தேர்வுகள்!
  மலைக்க வைக்கிறது!
  3. பொடிச்சி Says:
  June 18th, 2006 at 12:06 am

  நன்றி எஸ்.கே, ஈழநாதன்..
  படங்கள் பரிந்துரைக்கு நன்றிகள்.. கூட இருக்கிற பேர்க்மன் பைத்தியம் ஒருத்தியால் 🙂 அவரது படங்கள் பார்க்கக் கிடைத்தது… Virgin spring பார்க்கவில்லை; farewell my concubine (சற்றே நீளமாய் இருந்தாலும்) அதன் துயரம் எடுக்கப்பட்டிருந்த விதம் பாதித்தது. Raise the red lantern கட்டாயம் பார்க்கிறேன்.
  4. ஷ்ரேயா Says:
  June 18th, 2006 at 7:58 pm

  அழைப்புக்கு நன்றி பொடிச்சி.
  தேவையான/வளர்த்தெடுக்க வேண்டியவைக்கு ஊற்றாகக் கூட இருக்கலாம் இந்த “பாதிப்பவர்கள்” ஆளுமை. எனக்கு அநேக நேரங்களில் அதுதான் நடக்கிறது!

  பார்க்கவும் கேட்கவும் வாசிக்கவும் புதிய அறிமுகங்கள், உங்கள் தயவில். அதுக்கும் ஒரு பெரிய நன்றி.:O)
  5. சன்னாசி Says:
  June 19th, 2006 at 1:52 am

  //2. Hiroshima mon amour (இதைப் பரிந்துரைத்தவர்கள் வாழ்க!)//

  முன்பு உங்கள் பதிவொன்றில் ரோசாவசந்துடனான ஒரு பின்னூட்ட உரையாடலில் இதைப் பரிந்துரைத்தவர்களில் நானும் ஒருவன் என்று நினைக்கிறேன் :-). வாழ்கவுக்கு நன்றி. பெர்க்மன் படங்கள் பிடித்திருந்ததெனில் Cries and Whispers பார்க்கமுயலவும் – தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் அதுவும் ஒன்று. Hazar chaurasi ki maa மஹா ஸ்வேதா தேவியின் கதை – வாசிக்கக் கிடைத்தால் படித்துப் பார்க்கவும். சஞ்சீத்தின் பதிவிலேயும் சொல்லியிருந்ததுபோல, Catcher in the ryeயும் வாசித்தபோது மிகவும் பிடித்திருந்த ஒரு புத்தகம். புத்தகங்கள் தவிர்த்த இப்படியொரு பட்டியலைச் சொல்லக்கூட ஒரு குறைந்தபட்ச நேர்மையும், தன்முனைப்பற்ற innocenceம் தேவை என்று நினைக்கிறேன் – அது இன்னமும் என்னிடம் மிச்சமிருப்பதாக நினைத்தால் நானும் ஒரு பட்டியலைப் போடுகிறேன். ஆனால் பட்டியல்கள் மூலம் கற்றுக்கொண்டவை, பிடித்துப்போனவையும் ஏராளமாக உண்டு. Radiohead ஐ முதலில் பார்த்துக் கேட்கத்தொடங்கியதும் சோனாலி பெந்தரேயின் ஒரு பட்டியலில்தான் என்று யோசித்துப் பார்த்தால் இப்போது வினோதமாகத்தான் இருக்கிறது.
  6. தமிழ் வலைப்பதிவு » பிடித்த “ஆறு” Says:
  June 19th, 2006 at 3:21 am

  […] மாலை நேரத்தில் கடற்கரையோரமாக நின்று வானத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தி நேர வானத்தில் தோன்றும் வண்ணங்கள் மிகவும் அருமையானவை. வானத்தை அண்ணாந்து பார்த்து ஒரு ஐந்து நிமிடம் கழித்துத் திரும்ப பார்த்தால் நாம் முன்பு பார்த்த வர்ணக்கோலங்கள் மாறியிருக்கும். ஐந்து நிமிடங்களில் நிறைய மாற்றங்கள் நிறைந்திருக்கும். அதைப்போல இன்று இந்தப் பொழுதில் இருக்கும் விருப்பு/வெறுப்புகள் இன்னும் சில காலம் கழித்து மாறாமலேயே இருக்கும் என்று சொல்ல முடியாது. இங்கே என்னால் முடிந்த அளவு எனக்குப் பிடித்த விதயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். பொடிச்சியின் அழைப்புக்கு நன்றி கூறி என்னுடைய பட்டியல்கள். […]
  7. யாழிசைச்செல்வன் Says:
  June 19th, 2006 at 4:45 am

  // “சிறைச்சாலை” பாடல்களுக்காகவும் இன்ன பிறவிற்காகவும் இளைய ராஜா//

  ஐ.. நிங்களும் நம்ம ஆளுதான்.. வாழ்க உங்க ரசனை.
  8. மதி கந்தசாமி Says:
  June 20th, 2006 at 1:04 am

  உங்கள் அழைப்புக்கு நன்றி பொடிச்சி. இந்தக் கணத்தில் என்னைப் பாதிக்கும்/பாதித்த விதயங்களை முந்டிந்தளவு பட்டியலிட்டிருக்கிறேன். சுட்டி – http://mathy.kandasamy.net/musings/2006/06/18/433

  உங்கள் பட்டியல் குறித்து சில வார்த்தைகள்:

  என்.டி.ராஜ்குமாரை அறிமுகப்படுத்தி, அவரது ஆளுமையை இரசிக்க வைத்தீர்கள். நன்றிகள் பல. 🙂

  நம்மட ஆக்களுக்கும் கூழுக்குமான தொடர்பை உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள்.

  முடிந்தால் உங்களின் மறக்க முடியாத சினிமாப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் படங்களைப்பற்றி விரிவாக எழுதுங்கள். ஈழநாதன் சொன்னதுபோல zhang yimou-வின் Raise the Red Lanturn மற்றும் Red Sorghum, Ju Dou போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. சமீபத்தில் அவர் எடுத்த் hero & house of flying daggers – முக்கியமாக ஹீரோ zhang yimouவின் வர்ணங்களை உபயோகப்படுத்தும் விதத்தைச் சிலாகிக்க வைக்கிறது.

  அவள் அப்படித்தான் படம் பிடித்ததாகச் சொல்லியிருப்பது தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருக்கிறது. அந்தப் படத்தில் ஸ்ரீப்பிரியாவின் தெனாவட்டு மிகவும் பிடித்த ஒரு விசயம்.

  ஹிரோஷிமா மொன் அமௌர் பற்றி.. எவ்வளவோ எழுதலாம். பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவோமே. 🙂

  கதிர்காமம் போகிற வழிச் சிங்களக்கிராமங்கள் எனக்கும் லேசாக நினைவிருக்கின்றன. கடைசியாகப் போனது ஒன்பது வயதில். காலி போன்ற கடற்கரையோர இடங்களில் காரை நிப்பாட்டி செலவழித்த தருணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. மாணிக்க கங்கைத் தெளிந்த நீரும் மீன்களும் – ஹ்ம்ம்ம்… கப்புறாளைமார்களை கொஞ்சம் திகிலுடன் பார்த்தது என்று நிறைய நினைவுகளைத் தட்டி எழுப்பியிருக்கிறீர்கள். யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிச் சாலையில் சாலையோர ஆர்மிக்காரனைத் தாண்டி விரைவாக நடந்து போன தருணங்களும் நினைவுக்கு வருகின்றன.

  உங்களுக்குப் பிடித்த இசை/யமைப்பாளர்/பாடல், போக விரும்பும் இடங்கள் மற்றும் பிடிக்கிற விசயங்கள் பற்றி எழுதக் கை பரபரக்கிறது. எழுதினால் இதுவே ஒரு தனி இடுகை அளவிற்கு வந்துவிடும் என்பதால் உங்களை இத்துடன் விட்டுவிடுகிறேன். :))
  9. மதி கந்தசாமி Says:
  June 20th, 2006 at 1:06 am

  and podichchi,

  by the way, do tell me when you want to visit Quebec. We could visit the northern part of the province and go to New Foundland and New Brunswick from there. We could go seal viewing together. But, I’ll leave the hunting and eating to you. How about that? 🙂
  10. பொடிச்சி Says:
  June 20th, 2006 at 3:20 am

  நன்றி ஷ்ரேயா..
  சன்னாசி:
  நீங்களும் ரோசாவசந்துமான பின்னூட்ட உரையாடல் மூலம்தான் 400 blows (இன்னொரு அருமையான படம்) எல்லாம் பார்க்க முடிந்தது..

  பட்டியல்கள் அல்லது இந்த மாதிரி விளையாட்டுக்கள் மற்றும் -விளையாட்டுக்கள் அல்லாத பலவும் கூட-
  இன்னொரு வகையில ‘காட்டிக் கொள்ளல்’கள் சம்பந்தப்பட்டதுதான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடங்களில கூடக் குறையச் செய்வம் என்றே நினைக்கிறன் 🙂

  மஹா ஸ்வேதா தேவியின் கதை – தேடிப் பார்க்கிறேன்.. அந்தப் படம் பெண்ணால் எழுதப்பட்ட கதை என்பது -ஒரு பெண்ணினுடைய பார்வையில் கதை!- படம் பார்க்கையில் நெருக்கமாய் இருந்தது..

  Cries and Whispers -பார்த்திருக்கிறேன். ஆனால்
  அனேகமாக, பெண்களின் உறவுமுறைகள் (தாய் மகள் மனைவி காதலி ‘கள்ள’உறவுகள்) அவர்களின் எல்லா உணர்வுகள் (ஏமாற்றம் காமம்..) எல்லாம் பேர்க்மன் படங்களில் நுட்பமாக வெளிப்படுத்தப்படுகையில் மிகவும் பாதிப்பதால் பல படங்களைப் பார்க்க எல்லா மநோநிலைகளிலும் முடியவில்லை..என்பதும் ஒன்று 😦
  11. பொடிச்சி Says:
  June 20th, 2006 at 3:21 am

  நன்றி யாழிசைச்செல்வன்…
  மதி:
  உடனடியான ஒரு mood change-உம் அதையொட்டிய எண்ணங்களும்தான் எழுதும்போது இந்த விளையாட்டில் பிடித்திருந்தவை.

  இந்தப் படங்கள் எல்லாம் (ஸ்பர்ஸ், Hazar chaurasi ki maa) பார்த்து உடன எழுத வேண்டுமென நினைத்து, பிறகு அதன் அதிர்வுகள் போன பிறகு சோம்பலில் விடுபட்டுப் போனவை. இவை பற்றி பிறிதொரு சமயம் எழுதணும்..!

  அப்புறம்
  நியூ ஃபவுண்ட லாண்ட் உம் நியூ பிறான்ஸ்விக் உம் போவது வரை சரி.. 😦
  பக்கத்து நாட்டைச் சேர்ந்த மிருகாபிமான அம்மணி,
  அந்த so cute animals-ஐ “ஈவிரக்கவமில்லாம” “வேட்டையாடுறத” படம்பிடித்து இணையத்தில ஏற்ற, மிருகாபிமானிகள் தமது வளர்ப்பு நாய்க்ள் சகிதம் வர… நீங்க வேற! 🙂
  12. பொடிச்சியின் அழைப்பு Says:
  June 20th, 2006 at 10:38 pm

  […]என்னையும் அழைத்த பொடிச்சிக்கு நன்றி. எழுதுவதற்கு முன் நிறைய யோசிக்க வேண்டியிருந்தது.[…]
  13. தமிழவன் Says:
  June 21st, 2006 at 5:30 pm

  நிறைய எழுதுங்கள்.
  பதுங்குகுளி நாட்கள் என்னையும் நிறைய பாதித்தது கடந்த ஒரு வருடத்துள் நீண்ட இடை வெளியின் பின் தீராநதியில் அகிலனின் ஒரு கவிதை வந்தது வாசித்தீர்களா?

  சலனமற்ற அமைதியான ராத்திரிகளில் நான் வாசிக்கும் பக்கங்களில் உங்களதும் ஒன்று.

  வாழ்த்துக்கள்
  14. மதி கந்தசாமி Says:
  June 22nd, 2006 at 2:52 pm

  //நியூ ஃபவுண்ட லாண்ட் உம் நியூ பிறான்ஸ்விக் உம் போவது வரை சரி..
  பக்கத்து நாட்டைச் சேர்ந்த மிருகாபிமான அம்மணி,
  அந்த so cute animals-ஐ “ஈவிரக்கவமில்லாம” “வேட்டையாடுறத” படம்பிடித்து இணையத்தில ஏற்ற, மிருகாபிமானிகள் தமது வளர்ப்பு நாய்க்ள் சகிதம் வர… நீங்க வேற! //

  ஓமோம் பாத்தனான். அதில வேற humane society of united states இந்த ஸீல் வேட்டை பற்றிய கண்டனம் + கனேடீய கடலுணவு வகைகளை ஒதுக்கச் சொல்லி நீயூயோர்க் டைம்ஸில் இரண்டு முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்திருக்கிறார்களாமே! நம்மட fisheries and oceans மந்திரி Loyola Hearn திங்கக்கிழமை சொல்லியிருக்கிறா. பாத்தனீங்களா?

  ஒரு பக்கம் இந்தமாதிரியான அமைப்புகளால பிரச்சினை. கியூபெக்கின் வடக்குப் பகுதி + ஏனைய கிழக்கு மாகாணங்களில் வடக்குப் பகுதிகளில பெரிய பெரிய கப்பல்களில வந்து கடலுணவுகளை வாரிக்கொண்டு போய், இயற்கை வளங்களை deplete பண்ணுற முதலாளிகள். அந்தக் கப்பல்கள் வேற நாடுகளுக்குச் சொந்தமானவை எண்டுறது இங்க முக்கியமான விசயம்.

  இதோட கனேடிய ஆர்க்க்டிக் வடக்குப் பகுதிகளை ஊடுருவி வேவு பார்ப்பவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  15. பொடிச்சி Says:
  June 24th, 2006 at 12:30 pm

  தமிழவன்: தீராநதியில் படிக்கவில்லை..
  முதலாவது தொகுதிக்குப் பிறகான அவரது கவிதைகளுடன் பரிச்சயமில்லை. (மூன்றாவது மனிதன் இதழில் கட்டுரை பார்த்திருக்கிறேன்..) ப.நாட்கள் பாதித்தது.
  கவிதைகள் இன்றைக்கும் பாதிக்கிற ஒன்றாக இருப்பதால் பாதித்தவற்றுள் குறிப்பிடத் தோன்றியது.. பெரியளவில் எழுதுகையில் (சமகால) ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராய் அவர் வருவார் என நினைக்கிறேன் (நிறைய எழுதுகையில் அப்படி அல்லாது போனவர்களும் உண்டு 😦

  மதி: நீங்கள் குறிப்பிடுகிற, –ஒரு பக்கம் இந்தமாதிரியான அமைப்புகளால பிரச்சினை. கியூபெக்கின் வடக்குப் பகுதி + ஏனைய கிழக்கு மாகாணங்களில் வடக்குப் பகுதிகளில பெரிய பெரிய கப்பல்களில வந்து கடலுணவுகளை வாரிக்கொண்டு போய், இயற்கை வளங்களை deplete பண்ணுற முதலாளிகள். அந்தக் கப்பல்கள் வேற நாடுகளுக்குச் சொந்தமானவை எண்டுறது இங்க முக்கியமான விசயம்.

  இதோட கனேடிய ஆர்க்க்டிக் வடக்குப் பகுதிகளை ஊடுருவி வேவு பார்ப்பவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். –
  இவை குறித்து விரிவாக -முடிகிறபோது – எழுதுங்களேன்!

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: