பலிவதம்

-சக்கரவர்த்தி

தடுமாறி – பின்
பாதி வழி வந்து
சக்கரத்தில்
நசுங்கிச் சாகும்
அணில்ப் பிள்ளை-
ஏழுநாள் ஆன பின்னும்
என் உறக்கம் உண்ணும்

தொண்டையில்
சிக்கிய முள்
தூண்டிலில்
மாட்டிய மீனின்
வலியே எனக்கு
உறைக்கச் செய்கிறது.

தக்காளிப்பழம்
நறுக்கையில்
கசியும் சாறு –
செடி நட தோண்டிய குழியில்
துண்டாகித் துடிக்கும்
மண்புழுவின் துயரம்
ஊனாய் என்னுள் வடிகிறது.

பலிவதத்தில்
கொலையாகி
வெருகல் ஆற்றோரம்
நான் பெற்ற பிள்ளை
வீழ்ந்த கிடக்கையில்
உனக்கு மட்டும் எப்படி ஐயா
வீரம் பொங்குகிறது?
~

*வெருகல் ஆறு – திருகோணமலை மாவட்டத்தையும், மட்டக்களப்பையும்
பிரித்து ஓடும்..

நன்றி: கைநாட்டு

Advertisements
 1. peddai
  April 18, 2009 at 3:28 am

  2 Responses to “பலிவதம்”

  1. ரவி Says:
  May 23rd, 2006 at 4:05 pm

  அருமை…..டச்சிங்கா இருக்கு
  2. லிவிங் ஸ்மைல் வித்யா Says:
  June 21st, 2006 at 12:58 am

  // பலிவதத்தில்
  கொலையாகி
  வெருகல் ஆற்றோரம்
  நான் பெற்ற பிள்ளை
  வீழ்ந்த கிடக்கையில்
  உனக்கு மட்டும் எப்படி ஐயா
  வீரம் பொங்குகிறது? //

  அவன் பொங்கியெழுவது அவன் கொண்ட வீரத்தால் அல்ல… மனிதத்தையே கொன்று வரும் ஆணவத்தால்

  கவிதை நன்றாக இருந்தது…

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: