Home > Uncategorized > தாய்

தாய்


Pic:from

உன்னுடன் துணைவர முடியாது
என் எல்லை முடிகிறது
காரிலிருந்து நீ இறங்குவாய்
இனி என்னுடைய பிள்ளையை வெளியுலகம் எடுத்துக்கொள்ளும்.
நீ இயல்பெனக் கொண்ட உன்னுடைய மௌனத்தை
இனி இவர்கள் என்ன செய்வார்கள்…
மென்மையான இந்த பூக்களின் இதழ்களை
எப்படி நாசம் செய்வார்கள். ..
நீ இறங்கிச் செல்வதை நான் வெறுக்கிறேன்- இத்தோடு
என் உரிமை பறிகிறது
அருகிருந்து, என்னுடைய உடம்பினுள் கை போட்டு,
இதயத்தை இழு…த்துவிட்டு ஏதோ செல்கிறது
இதய அவ்விடத்தில், ஸ்தம்பிக்கிறது என் உலகம்-
நீ நடக்கிறாய்
உன் புதிய பாடசலை, உத்தரவாதங்கள் தாராது
என் வெறித்த விழிகளை திமிருடன் நெரிக்கிறது
இவ் உயர் பாடசாலையில்
சிறுவர்களின் ஆண் குறிகளை
பெண்களின் உதடுகள் உறிஞ்சுமாம்…
நோஞ்சான் பையன்களை
பயில்வான் மாணவர்கள் போட்டு அடிப்பார்களாம்…
கேள்வியுற்றவைகளை நினைத்தபடி
நான் என்ன செய்வேன்
கொஞ்சமும் முதிர்ச்சியற்று,
உன் கரம் பற்றி
உன் வகுப்பறைகளுக்கு கூட வந்து
உன்னுடன் இருந்து, நீ பேசாதபோது ‘அவர்களுக்கு’ விளக்கம் சொல்லி,
உனக்கு என்னென்ன பிடிக்கும் என்று சொல்லி, நீ நன்றாக வரைவாய் என்று சொல்லி,
உன்னுடன் எல்லோரும் ஏன் நண்பர்களாக வேண்டும் என்று சொல்லி… இன்று முழுதும் இனி ஒவ்வொரு நாளும் உன்னுடன் கூடவர விரும்புகிறேன், உனக்குப் பாதுகாப்பாய், உனது பலமாய்…
கொடியவர்களே! ஏன் என்னைத் தடுக்கிறீர்கள்.
நொடிக்கொருதரம் பாத்துப் பாத்து, பொத்தி பொத்தி வளர்த்த என் மகவை, என்னைப் போல கவனிப்பீர்களா? அவனருகாமையில் செல்கையில் உங்களது வாகனங்களின் வேகத்தை தயவுசெய்து குறைப்பீர்களா? மேலும்,
அவனுடைய ஆண் குறியை, சிறந்த ஓவியனுக்குரிய அவனது கரங்களை, அவனது அலட்சியத்தை
அவனதழகிய விழிகளை தயவு செய்து துவம்சம் செய்யாதிருப்பீர்களா?
அவன் அன்பால் மூடப்பட்ட குழந்தை.
உலகைப் புதிப்பிக்க போகிற இன்னொரு உயிரம். பேராபத்துகளை வெல்கிற வயதை அவன் அடையவில்லையே…
அலட்சியமாக வளர்ந்துவிட்டான்.
*

Advertisements
Categories: Uncategorized
 1. டிசே தமிழன்
  March 25, 2005 at 8:49 pm

  பொடிச்சி, கவிதை மிக அருமையாக இருக்கின்றது. உங்களது மொழிபெயர்ப்பும் (இது மொழிபெயர்ப்புத்தானே?), மொழிபெயர்ப்பு என்ற எண்ணம் வரச்செய்யாது தமிழின் நேரடிக்கவிதையொன்றை வாசிப்பது போன்ற உணர்வைத் தருகின்றது. இயலுமாயின் இந்தக்கவிதை எழுதியவர் பற்றிய ஒரு சிறுகுறிப்பையும் இத்தோடு இணைத்துக்கொண்டால் நன்றாகவிருக்கும். நெகிழ்ச்சியான வாசிப்பு அனுபவத்தைத் தந்த இந்தக்கவிதையைப் பதிவுசெயததற்கு உங்களுக்கு நன்றி.

 2. Thangamani
  March 25, 2005 at 9:23 pm

  நெகிழ்ச்சியான அனுபவத்தைத் தருகிற கவிதை. நன்றிகள்!

 3. selvanayaki
  March 25, 2005 at 11:43 pm

  நன்றாக இருக்கிறது. இது உங்களின் மொழிபெயர்ப்பாயின், டி சே சொன்னதுபோல் எழுதியவரைப் பற்றிய சிறு குறிப்பையும் இணையுங்களேன், பயனுள்ளதாக் இருக்கும்.

 4. Scoopy Dump
  March 27, 2005 at 6:23 pm

  நல்லதோர் ஆக்கம்…
  உங்கள் படைப்புக்கள் வட்டத்தைத் தாண்டினால் நல்லாக இருக்கும் என நம்புகிறேன்….

  தொடருங்கள்

 5. ஒரு பொடிச்சி
  March 28, 2005 at 6:48 am

  நன்றி டிசே, தங்கமணி, செல்வநாயகி, விகடன்..
  ‘கவிதை எழுதுவதை நிறுத:துங்கள்’ என்று அறிக்கை விட்டதால் மொ.பெயர்ப்பா எனக்கேடகீறீர்கள் என நினைக்கிறேன். கவிதை என்று சொல்வது உங்கள் பாடு! ஆனால் இது ஒரு தோழர் எழுதிய கவிதைதான். அவர் ஆணா பெண்ணா என்பதை -அவரும் சொல்ல விரும்பாததால்- தாய் என்கிற தலைப்பிற்காக சொல்லாமலே விடுகிறேன். தாய் என்கிற தலைப்பு நேரே தாய்மை என எடுக்கவிடுகிறதா, இதை ஆணும் சொல்வது பிரதியில் தெரிகிறதா வாய்ப்பிருக்கிறதா என்பது தொடர்பாய் எழுத எண்ணியிருந்தேன்… பிறகு பார்ப்போம்…
  அனைவருக்கும் நன்றி

 6. peddai
  April 18, 2009 at 12:48 am

  # DISPASSIONATED DJ – » அம்மாவுக்கு… Says:
  March 8th, 2006 at 7:42 pm

  […] பொடிச்சியின் வ்லைப்பதிவிலிருந்து நன்றியுடன் இந்தப் பதிவை மீள்பிரசுரிக்கின்றேன். எழுதியவர் தனது பெயரை வெளியிடவிரும்பவில்லை என பொடிச்சி முன்பு ஒருமுறை கூறியிருந்ததாய் நினைவு. இதைவிட ஒரு அருமையான கவிதையை எழுதி, இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது தாயாருக்கு பரிசாகக் கொடுத்துவிடவும் முடியாது) This entry is filed under Uncategorized. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site. Leave a Reply […]

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: