Home > அ-கவிதை, பகடி > பெருந்தலைகளை உருட்டல் -4-

பெருந்தலைகளை உருட்டல் -4-

கவிஞர்களைப் பற்றி பகரும்போது எனது உயர்பாடசாலை (high school) கால இறுதியாண்டு ஞாபகம் வருகிறது. நண்பர் வீடுகளிலிருந்து புத்தகம் வேண்டி இலக்கிய வாசிப்பு வேட்டை நடந்துகொண்டிருந்த சமயம்.

விக்கிரமாதித்யனின் கவிதைகள் ஏனோ எனக்கு கேலிக்குரியதாய்பட்டது. என்னாலும் அதை எழுத முடியும் இந்தாள் ஏன் இப்பிடி என்ன மினக்கெடுத்துது என்றொரு மிதப்பான நினைப்பு. அப்போது அவரது ‘மாதிரி’ க் கவிதை ஒன்றைத் தயாரித்தேன்.

விக்கிரமாதித்யன் மாதிரி 1

பூனை பானை

பாலை எடுக்கும்

காளி வாளி

மனசை அறுக்கும்

குரங்கு சிரங்கு

மூலம் அறியும்.

கோலம் சூலம்

இருவேறு வடிவம்.

வடிவம் படிமம்

சொல்வதை எழுது

கவிதை சமதை

நான் எழுதுவது மட்டும்

வாடா போடா

புண்ணாக்குத் தலையா

என் நாக்கு உன் நாக்கு

எதிலும் பாக்கு

நட்புக்கு போட்டி

மாட்டுக்குப் பட்டி

வட்டத்துள் வட்டம்

(காளி செயமாரிக்கு)

இந்த விளையாட்டு சுவாரசியமானதாகி திருவாளர் சேரன், செயபாலன் கவிதை என நீண்டது. அன்னார்கள் மானநஸ்ட வழக்குப் போடார்கள் என்ற நம்பிக்கையுடன் (ஆமா… போட்டுட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். உண்மையில பார்த்தால் அவர்கள் எழுதுகிறதைவிட இது எவ்வளவோ நல்லா இருக்கு, அவங்களே இது தாங்கள்தான் எழுதின எண்டு உரிமை கொண்டாடாட்டாத்தான் ஆச்சர்யம்!):

வ. ஐ. ச சேயபாலன் மாதிரி 1

பாலியாற்றின் அடியில்

புதைந்துள்ளதடி என் மூதாதையரின் வேர்கள்

அங்கே

பாலியத்தில் கூடி மகிழ்ந்து

ஆடிக் களித்த நீ

எங்கேயடி இன்று

இன்று இரவல் புலத்தில்

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த

நிலத்தையும்

என் பாலியத்தின் பெட்டை

உன்னையும் நினைத்தபடி

0

சேரன் உ மாதிரி 1

அன்று:

சமாந்திரமான பாலம்:

நடந்தோம்

பாலத்தருகே

தாழம் பூ

செவ்வரத்தம் பூ

மரங்கள் நிற்கும்.

எமைத் தொடரும் விழிகளிடமிருந்து

வெகு துாரம் வந்தோம்

தனித்த வெளியில் – உன் முலை

நுனியில்

பனிக்கும் காதல் இரவு

கண்ணீர் சுக்கிலம்

இரவே சிறந்தது

கன்னி முலையில்

கிளர்வே சிறந்தது

0

அவரது மாதிரி (தொடர்ச்சி) 2

இன்று:

காலங்கள் கடந்தோம்/கடந்து

நாப்பது கடந்தும் துணை தேடி

கையில் பூவுடன்

காத்திருப்போ தொடர்கிறது

வாழ்வு நீள்கிறது

0

இவற்றோடு இலக்கிய கிசுகிசு என ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்கும் எண்ணம் கூட அப்போது இருந்தது: அதில் நாம் சில இலக்கியப் பிரமுகர்களுக்கிட்டிருந்த ஒப்பற்ற நாமங்கள்: சே!RUN, Sucks.வர்த்தி, Rock.சுறா, சே!None, Che(f). indian,… etc. அப் ப/பிணி கைகூடாமல் இளங்காலக் கனாவாகவே போய்விட்டது.

பிற்குறிப்பு: இந்த “மாதிரி”க் கவிதைகள் குறித்து: தமிழ்நாட்டில், நவீன கவிதைகளாக உள்ள அனைத்தும் “மாதிரிகள்” தான். பசுவையா மாதிரி, மனுஸ்யபுத்திரன் மாதிரி, சல்மா மாதிரித்தான், அதுபோல புகலிட கவிதைகளும் வ.ஜ.ச மாதிரி, சேரன் மாதிரித்தான்! அத்தோடு பின்னவர்களது கவித்துவமும் மிக வரண்டு இலகுவில் “பிடித்துவிடக்கூடிய” பாணியை உடையவாகத்தான் உள்ளன. இந்தத் தளத்திலேயே அடிக்கடி இவர்கள் மாதிரிகளையும் இவர்களது மாதிரிகளையும் இடுவதாய் உள்ளேன்.

Advertisements
 1. மு.மயூரன்
  October 10, 2004 at 3:54 pm

  தமிழ் வலைக்குறிப்பு சமூகத்தில் பெண்ணிலை எழுத்துக்களின் மிகத்தீவிரமான வடிவமாக வெளிப்பட்டிருக்கிறீர்கள்.
  மிக மகிழ்ச்சி.

  தீவிர ஒடுக்குமுறைக்கெதிரான தீவிரமான எதிர்நிலை முன்வைப்பே ஆரோக்கியமானது. சமாளிப்புக்கள் இல்லை என்பது என் கருத்து.

  இப்போது உங்கள் குறிப்புக்களை படிக்கும்போது, சிற்றிதழ்களில் மட்டுமே தேங்கிக்கிடந்த இவ்வகைத் தீவிரம் வலைக்குறிப்புக்களுக்கு பற்றிக்கொண்டுவிட்ட நிகழ்காலத்தை சிலிர்ப்போடு வரவேற்று நிற்கிறேன்.

  தொடர்ந்து எழுதுங்கள்.
  பதில்கள் மூலம் உங்களோடு நிறைய பகிர்ந்துகொள்ளக்கிடக்கிது. நிறைய சந்தேகங்கள் தீர்த்துக்கொள்ளப்படவேண்டியுள்ளது.

  கூடவே, எனது குறிப்புக்கள்மீதான விமர்சனங்களையும் தயக்கமின்றி செய்யுங்கள்.
  என் எழுத்துக்கள் ஆற்றுப்பட அது உதவும்.

  வாழ்த்துக்கள்

 2. ஒரு பொடிச்சி
  October 12, 2004 at 12:42 am

  நன்றி மயூரன்!
  என்னைப் பொறுத்தளவில் இதொரு சுய ஆறுதலாக இருக்கிறது. “பொதுவாக” சொல்லப்படுகிற எல்லாவற்றோடும்முரண்படுகிற/எதிர்வினையாற்றுகிற “பிரச்சினை” எனக்கு. blog என்பது ஒரு வசதி இல்லையா, நம்முடைய சிறுபான்மைக் மனோநிலைக்கு ஒரு குரல் போல!
  உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகமளிக்கிறது. நன்றி!
  உங்கள் எழுத்துத் தொடர்பாக எழுத விருப்பம்தான் (குறிப்பா சின்ன மூக்குத்திப் பிரச்சினை தொடர்பாக) நேரங்கிடைக்கும்போது எழுதுகிறேன், நீங்களும் நேரங்கிடைக்கும்போது பாருங்களேன்..

 3. -/பெயரிலி.
  October 12, 2004 at 4:36 pm

  /அதுபோல புகலிட கவிதைகளும் வ.ஜ.ச மாதிரி, சேரன் மாதிரித்தான்! அத்தோடு பின்னவர்களது கவித்துவமும் மிக வரண்டு இலகுவில் “பிடித்துவிடக்கூடிய” பாணியை உடையவாகத்தான் உள்ளன. இந்தத் தளத்திலேயே அடிக்கடி இவர்கள் மாதிரிகளையும் இவர்களது மாதிரிகளையும் இடுவதாய் உள்ளேன்./
  உங்கள் கருத்துகளோடு மறுப்புகளும் ஒத்தோடல்களும் ஒருபுறமிருக்கட்டும்; இன்னொரு பொழுதுக்குப் பேசுவதற்காகட்டும். ஆனால், கடைசியிலே ஒருத்தராவது வந்தீர்களே, “அரசர்கள் அம்மணமாகப் போவதை” உரத்துச் சொல்ல. அ·து இன்றைய கவின்மிகைப்படுத்தி, காட்சிப்படுத்தி ஆளுமைகளைத் திட்டமிட்டுச் சமைக்கும் காலத்திலே மிக அவசியமானது. அதே போக்கிலே, அண்மையிலே சிபி.கொம் இலே ஔவை கொடுத்திருக்கும் செவ்வியினையும் ஒருக்கால் நல்லது பொல்லாதது பார்த்து விமர்சியுங்கோ. போற வழிக்குப் பெரும் புண்ணியமாகப் போகும்.

 4. ஒரு பொடிச்சி
  October 12, 2004 at 11:51 pm

  இதிலென்று இல்லை, நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், சிபி.கொம் இல் (தலித் இதழுக்காக) அவ்வை கொடுத்த பேட்டியை யாராவது விமர்சிப்பார்களா என்று! புலம்பெயர்வைப் பொறுத்தமட்டில் சேரன் குடும்பத்தினர் மட்டும்தான் “ஓடிப் போகாதவர்கள்” (அப்படிப் போனதும்) அரசியற் காரணிகளுக்காக மட்டும்! பாரம்பர்யம் மிக்க குடும்பம் என்பதாலோ என்னவோ பாரம்பர்யம் மிக்கவர்களுக்கே
  யுரிய ‘மிகை’யுணர்ச்சி அவர்களிடம் (சேரன், ஒளவை) நிறையவே உண்டு (தனிப்பட்ட அல்ல, எழுத்தில், செவ்வியில்). அத்தோடு அவ்வையின் அவ் உரையாடலை பேட்டி என்று சொல்லலாமா? அது உண்மையில் கையடக்கமான, நாம்பதோ ஐம்பதோ பக்கங்களையுடைய ‘எல்லை கடத்தல்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற கவிதைகள்(என்றுதான் அவர் சொல்கிறார்) எழுதப்பட்ட சூழல் தொடர்பான விளக்கம் (அதே “மிகை’ உணர்ச்சியுடன்) என்றே படுகுறது. என்ன செய்வது? தமிழ்நாட்டினருக்கு ஈழத்தவர்கள்மீது குறிப்பிடட சிலருக்கு ஒருவகை ஈர்ப்பு – அது அவர் சொல்வதை மிக்க ஆவலுடன் கேட்க வைத்திருக்கலாம். ஆனால் அவ்வை தனது சாதி அடையாளத்தை விலக்கி (பெண் அடையாளத்தை மட்டும் முன்நிறத்தி) மற்றவர்களைப் பற்றி (மற்றவர்களது சாதியை முன்னிறுத்தி)சொல்வதை எப்படி ஏற்றக்கொள்ள முடியும்? ஒன்றை நேர்மையாக சொல்பவள் என பிரகடனப்படுத்துபவர் தன்னுடைய பிரதேசத்தில் உள்ள சாதி அடையளாங்களை, குறிப்பிட்ட சாதி அடக்குகிற பிற சாதிகளை சொல்ல தவறுவது என்ன நேர்மை? இலக்கிய செயற்பாடுகளில்உம் அவ்வையைப் பொறுத்தளவிலும் தான் போடுவதுதான் நாடகம், தான்போடுவதுதான் கவிதை என்ற எண்ணம் போலும்… வேறு தேடல்கள் ம்ஹீம். பிறகு என்னத்தை சொல்வது? பறையாமக் கிடவுங்கள்.

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: