சில மாதங்களிற்கு வலைப்பதிவை விட்டு செல்லல் + காலி செய்தல்

சில மாதங்களிற்கு நான் வசிக்கும் இடத்தை விட்டு செல்ல இருக்கிறேன். இப் பத்திகளைப் படிப்பவர்களுக்கு சில மாதங்கள்(தான்!) விடுதலை!
எனினும், போக முன், சும்மா விட்டிட்டுப் போக மனமில்லாமல், சில விடயங்கள் குறித்து எழுத நினைத்ததை எழுதவும், எழுதிய பழைய பதிவுகள் பலதைத் திருத்தி உள்ளிடவும் (அல்லது எனது கணிணியிலிருந்து அகற்றவும்) எண்ணியிருந்தேன். ஆனா முரண்வெளி தொடர்பானது தவிர புதிதாய் வேறு எழுத முடியுமென்று தோன்றவில்லை;
வகுப்பு வேலைகள், அவை பின்னிய மனஉளைச்சல்கள் (stress, stress), அத்துடன் (இருந்திற்று ஒரு மூன்று கிழமைக்கு மேலாய், உறங்கத்திலிருந்து விட்டு திடீரென இயேசு பிரானைப் போல முழித்தெழுகிற) எனது ஓட்டைக் கணிணியின் உதவியுடன் – முடிந்தால் பார்க்கலாம்…. (அதாவது குலதெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள்)!!
அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்!!
அன்புடன்
பொடிச்சி
photo: Chesapeake Bay


comments